"இன்று மே 26 - இந்திய வரலாற்றில் எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான நாள் மே 26..!
நமது பிரதமர் மோடி இந்தியாவின் 14வது பிரதமராகப் பதவி ஏற்று இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014 மே மாதம் 26ம் தேதி பொறுப்பு ஏற்றது.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்த முதல் நபர் பிரதமர் மோடிஜி தான். ரயில் நிலையத்தில் டீ விற்பவராக எளிய வாழ்க்கையை ஆரம்பித்த ஒருவர் இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார்.
மோடியை போன்று ஒரு தலைவனை நாங்களும் விரும்புகிறோம் என உலகமே வியந்து நிற்கிறது. உள் நாட்டிலோ நாட்டை சூறையாட நினைக்கும் குடும்ப ஊழல் எதிர்கட்சி அயோக்கிய கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக மோடி என்ற பெயரை கேட்டாலே அவர்களுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்குகிறது.
அப்படி என்ன செய்கிறார் இந்த மனிதர் ?
பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பேசிய முக்கிய விஷயம் கருப்பு பணம் ஒழிப்பு. அதன்படி கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு ஒரே நாளில் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்தார். இது எந்த ஒரு நாடுமே செய்ய துணியாத ஒரு பொருளாதார புரட்சி. இதனால் உள்நாட்டு கருப்பு பண முதலைகளை விட பாகிஸ்தான் சீனா போன்ற அண்டை நாடுகள் தான் பேய் அடித்ததை போல ஆனது. அவர்களுக்கு இந்தியாவில் செய்ய திட்டமிட்ட சதிச் செயல்களுக்கு கதவை அடைத்ததை போல ஆனது.
வரலாற்று முக்கியமான அடுத்த விஷயம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 மற்றும் 35ஏ பிரிவினை நீக்கியது. இந்த நிகழ்வு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது. இது அன்றுவரை பாஜகவை தவிர மற்ற எந்த அரசியல் கட்சிகளும் பேசவே பயந்த விஷயம். ஒரு நாட்டிற்குள்ளேயே இன்னொரு பகை நாடாக இருந்து சண்டித்தனம் செய்து ஒட்டுமொத்த இந்தியாவிற்க்குமே தீர்க்க முடியாத தலைவலியாக இருந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சனைகளுக்கு காரணமான அப்துல்லா குடும்பத்தையும், முஃப்தி குடும்பத்தையும், மற்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளையும் மண்டையில் குட்டு வைத்து பணிய வைத்த சம்பவம் அது.
ஒரே நாளில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பொதுத்துறை வங்கிகள் 27 என்ற எண்ணிப்கையில் இருந்ததை 14 ஆக மாற்றி மோடி அரசு உத்தரவிட்டது.
இந்த மூன்றும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வந்தது..!
ஏழைகள் நலன் சார்ந்த பல திட்டங்களை இந்த பத்து ஆண்டுகளில் மோடிஜி முன்னெடுத்துள்ளார்...
பிரதமரின் ஜன் தன் யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் அதிகமான எளிய மக்களுக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அரசின் அனைத்து மானியங்களும் நேரடியாக ஏழைகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது பல முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட மிகப்பெரிய நலத்திட்டம்.
பிரதமரின் ஷ்ரம் யோகி மன் தன் திட்டத்தின் கீழ் 42 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலார்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஓய்வூதியம், பிரதமரின் கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவி தொகை, தற்போதைய உரம் விலை மானியம் 140% சதவிகிதம் அதிகரிப்பு என்று சொல்லி கொண்டே செல்லலாம்.
2016ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 7 கோடி ஏழை எளிய கிராமபுற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லாதிருந்த 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி, வீடு இல்லாத அனைவருக்கும் வீடு என்ற திட்டம் மூலம் 2014 முதல் 2024 வரையில் 1.25 கோடி வீடுகள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை, வீடுகள் தோறும் ஜல் ஜீவன் குடிநீர் இணைப்புகள் என்று மோடிஜி அரசாங்கம் ஏழைகளுக்கு செய்து கொடுத்த நலத் திட்டங்கள் ஏராளம் ஏராளம்...
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அதாவது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை காரணமாக கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி, சேவை வரி என பல வரிகள் இருந்தது நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி என மாற்றப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரதில் ஒரு இமாலய சாதனை. வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு பெரிய ஆப்பு...
அதுமட்டுமல்ல 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமானவரி கட்ட தேவையில்லை என அறிவித்தது நடுத்தர வர்க்கத்தினருக்கு வரம். இதேபோல் வருமான வரி விவகாரத்தில் இன்னும் பல புதிய சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வந்தது மோடி அரசாங்கம்..
இப்போது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி இந்தியர்களுக்கு பலன் தரும் உயர் மருத்துவ சிகிச்சை வசதி,
ஜன் சுரக்சா காப்பீட்டு திட்டம் என்ற JAM திட்டத்தின் மூலம் ஜன் தன் – ஆதார் எண் –அலைபேசி எண் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இடைத்தரகர்கள் இல்லாத தொழில்நுட்பத்தால் விரைவான பணியும் வெளிப்படைத்தன்மையும் உண்டானது..
திரு. நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தமானது விவசாயத் துறை.
மண்வள அட்டை, சந்தைப்படுத்தலை செம்மையாக்க E-NAM வசதி, பாசனத் திட்டத்தில் புதிய கவனம் செலுத்துதல் போன்ற வகைகளிலும் நீர்வளம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள்வதற்கு ஜலசக்தி அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் 2019 மே 30 ஆம் தேதி திரு. மோடி முக்கியமான அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதில் போக்குவரத்து வசதி மிக முக்கியம் என்பதை உணர்ந்து அதி நவீன நெடுஞ்சாலைகள், ரயில்வே வழிகள் மற்றும் நீர்வழிகள் என எதுவாக இருந்தாலும் புதியகட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது....
இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாக `மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் திரு. மோடி தொடங்கி வைத்து தொழில் செய்வதில் எளிமையான சூழல் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சர்தார் பட்டேலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகின் மிகப்பெரிய ஒற்றுமைக்கான சிலை இந்தியாவில் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் உபகரணங்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஆகியவற்றை சேர்த்து சிறப்பு இயக்கத்தின் மூலம் `ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை உருவாக்கப்பட்டது.
வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகள்,மற்றும் உலக நாடுகளுடன் நல்லுறவை பேணுவதன் மூலம் நமது பாரதம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் மோடி ஆற்றிய உரை உலகம் முழுக்க பாராட்டுகளைப் பெற்றது
பிரதமராக பதவியேற்ற பிறகு ஐ.நா., பிரிக்ஸ், சார்க் மற்றும் ஜி-20 உச்சி மாநாடுகளில் திரு. மோடி கலந்து கொண்டுள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்துக்கு இருதரப்பு உறவுகளுக்காக பயணம் மேற்கொண்ட முதலாவது பிரதமராக மோடி இருக்கிறார் , 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜி தீவுக்கும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அமீரகம் மற்றும் செஷல்ஸ் தீவுக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர் மோடிதான்..
கொரோனா பேரிடரில் சிக்கி உலகமே திக்கற்று நின்ற போது அனைத்து உலக நாடுகளுக்கும் மோடி செய்த உதவிகளே அவர்களுடனான நல்லுறவுக்கு சான்று.
இன்று நம் பாரதம் உலகின் மூன்றாவது பொருளாதார பலம் மிக்க நாடு.
சுற்றுச்சூழல் விஷயங்களில் பிரதமர் மோடிக்கு அலாதிப் பிரியம் உண்டு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவருடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு `சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது’ உலக சுற்று சூழல் அமைப்பு வழங்கியது.
இவை எல்லாவற்றையும் விட நாட்டின் உயிர் நாடியான நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் மோடி அரசாங்கம் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வதில்லை. சீண்டும் அண்டை நாடுகளுக்கு தக்க சமயத்தில் தக்க பதிலடி கொடுப்பதில் ஒரு போதும் வளைந்து கொடுப்பதில்லை.
நாட்டின் தீர்க்க முடியாத பிரச்சனையாக இது வரை அரசியல் கட்சிகள் போக்கு காட்டி வந்த ராமர் கோயில், முஸ்லீம் பெண்களின் முத்தலாக் தடை சட்டம், CAA, NRC என்று சாதனைகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்...
1950 செப்டம்பர் 17ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் வாட்நகர் என்ற சிறிய நகரில் பிறந்தவர் மோடி. அவருடைய குடும்பம் சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள `இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ பிரிவைச் சேர்ந்தது. அவர் ஏழ்மையான ஆனால் பாசம் மிகுந்த குடும்பத்தில்,`சேமிக்க ஒரு ரூபாய் கூட இல்லாத’ குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தார்.
வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பட்ட கஷ்டங்கள் அவருக்கு கடின உழைப்பின் அருமையை உணர்த்தியது மட்டுமின்றி, சாமானிய மக்களின் தவிர்க்கக் கூடிய துன்பங்களையும் கற்றுக் கொடுத்தது. இதனால் மிக இளம் வயதிலேயே நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு உண்டானது.
நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தில் அவர் ஆரம்ப கட்டத்தில் இணைந்து பணியாற்றினார். பிறகு அரசியலில் ஈடுபாடு கொண்டு பாஜகவில் உறுப்பினர் ஆனார்..!
மக்கள் மத்தியில் இருப்பது, அவர்களுடைய ஆனந்தங்களைப் பகிர்ந்து கொள்வது, அவர்களின் துயரங்களை தீர்ப்பதைத் தவிர அவருக்கு மனநிறைவு அளிக்கும் விஷயம் வேறு எதுவும் கிடையாது.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்கள் நலனை மேம்படுத்தவும் பாடுபடுவதால் நரேந்திர மோடி `மக்களின் தலைவராக’ இருக்கிறார்.
இப்பேர்பட்ட மாமனிதனை நாம் நம் நாட்டின் தலைவனாக பெற்றது பூர்வஜென்ம புண்ணியம்..! அவர் நூறாண்டு காலம் வாழ்ந்து பாரதத்தை வழி நடத்த இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் வழங்க வேண்டுவோம்.
ஆனால் அந்த மாபெரும் தன்னலமற்ற மனிதனுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் செய்த பாவம் தான் தமிழகம் இப்போது ஆளுமைத் திறனற்ற சூனா பானா கூட்டத்திடம் சிக்கி மூச்சுதிணறி கொண்டிருக்கிறது.!