" பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் "

மணக்கால் அய்யம்பேட்டை | 11:21 AM | Best Blogger Tips

 பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் ...

வணக்கம்...!!.

 

" பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம். "

 

ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து  காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்.

 

 ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்தவர்கள் இந்த மே மாத இறுதியில் அதற்கான கட்டணம் உங்கள் வங்கிகணக்கில் எடுக்கப்படஉள்ளதால் தேவையான பண இருப்பு உள்ளதா என பார்த்துக்கொள்ளவும்.

 

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்...ஒரு விளக்கம்.

 

 இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப்படுகிறது.

 

ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு.

 

 இரண்டிற்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம்.

 

 வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

 

 விபத்து காப்பீட்டிற்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும். இது ஒரு குழுகாப்பீடு என்பதால் யாருக்கும் தனியாக பாலிசி சான்றிதழ் தரப்பட மாட்டாது. மேலும் இது செயல்படுத்தபடும் காலம் ஜீன் 1 ம் தேதியிலிருந்து மே31 ம் தேதி வரையாகும். ஆனால் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.

 PMJJBY Scheme in Tamil | Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana| Gen  Infopedia - YouTube

 ஒருமுறை ஒருவர் தேவையான படிவத்தை நிரப்பி கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கி மூலம் மட்டுமே இதில் சேர வேண்டும். இறப்பு உரிமை (Death claim) ஒரு வங்கியில் மட்டுமே கோர முடியும். ஒருவர் திட்ட ஆரம்பத்தில் நிரப்பி தரும் படிவத்தில் பயனாளியின் (Nominee) பெயரை குறிப்பிட வேண்டும்.

 

 விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது வரையிலும் ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயது வரை ஆண் பெண் இருபாலரும் சேரலாம். ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம். இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.

 

விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல பாம்பு கடித்து இறந்தாலும் விபத்து தான் படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்து தான். விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்கும் இழப்பீடு உண்டு.

 

 ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் காப்பீட்டு பணம் உண்டு. பாலிசியில் சேர்ந்த முதலாமாண்டில் மட்டும் தற்கொலை ஏற்கப்படாது.

 PMJJBY VS PMSBY Scheme - Similarities and Differences – UpVey

மொத்தம் ஆண்டிற்கு 342 ரூபாய்க்கு நான்கு லட்ச ருபாய் காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.

 

 ஒருவர் எந்த வங்கியில் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப் படுவது மட்டுமே ஆதாரம்.

 

 நாம் அனைவரும் இத்திட்டத்தில் சேருவதோடு இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர தூண்ட வேண்டும்.

 

 நம்மால் முடிந்த ஏழைகளுக்கு நாமே வங்கி கணக்கு தொடங்கித்தந்து கட்டணத்தையும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்க்கலாம். பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.

 

 இந்த திட்டம் ஏழைகளுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

 

 எளியோருக்கான உருப்படியான திட்டத்தை மக்களுக்கு விளக்குவதும், சேர்ப்பதும் தேசப்பணி என்பதை நாம் உணர்வோம்.

 

 நன்றி.

 

 31.05.2024.

நன்றி இணையம்