பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி ....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips

May be an illustration of temple

🌊 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனைவிரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். 
 
🔥 விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்
 
🌬️ அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.
 
🌫️ நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். 
 
☄️ உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...
 
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
 
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
 
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்.
 
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். 
 
நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]
 
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் 
எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...
 
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
 
*விதைத்தவன் தூங்கி விடுவான் ...*
 
*விதை தூங்காது ...*
 
*எண்ணியவன் தூங்கி விடுவான் ...*
 
*எண்ணம் தூங்காது ...*
 
*எண்ணம்போல் வாழ்க்கை*
 
*எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்*
 May be an image of 1 person and monument