*வாழ்க்கை வாழ்வதற்க்கே* டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
Image result for *வாழ்க்கை வாழ்வதற்க்கே* டிப்ஸ்
*30 ஹெல்த் & மன நிம்மதி டிப்ஸ்:*
*1*. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
*2*. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
*3*. இயற்கை உணவை, பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
*4*. உடற் பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
*5*. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
*6*. நிறைய புத்தகம் படியுங்கள்.
*7*. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
*8*. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
*9*. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்க்கொள்ளுங்கள்.
*10*. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்க்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
*11*. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள். நேர்மறையான எப்பொழுதும் எண்ணங்களுடன் வாழுங்கள்.
*12*. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். எந்த வேலையும் நம்மால் செய்து முடிக்க முடியும் என்று உங்களை நம்புங்கள்.
*13*. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்று சிந்தியுங்கள்.
*14*. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
*15*. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம் செய்யாதீர்கள். அடுத்தவர் மனதையும், சூழ்நிலையையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
*16*. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும். நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
*17*. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள், கோபப்படாதீர்கள், மனம் நோகும்படி நடக்காதீர்கள். பிறரிடம் அன்பு செலுத்தவு, பாராட்டவும், வாழ்த்தவும் செய்யுங்கள்.
*18*. எப்பொழுதும் நம்பிக்கையாகவும், மகிழ்சியாகவும், அன்பாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும், பொறுமையாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
*19*. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள். இதுவும் கடந்து போகும்.
*20*. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். முடியும் என்று சொன்னால் முடித்து காட்டுங்கள். இது சில, பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
*21*. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ, நேரடியாகவோ தொடர்பு கொண்டிருங்கள்.
*22*. மன்னிக்கப் பழகுங்கள். மன்னிப்பு கேட்க பழகுங்கள். தவறுகளை மறக்க கற்றுக்கொள்ளுங்கள். நல்லவைகளை நினைவு கூறுங்கள். மனித நேயத்துடன் வாழுங்கள்.
*23*. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்கவும், அன்புடன் பேசவும் நேரம் ஒதுக்குங்கள்.
*24*. அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
*25*. உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், நண்பர்களையயும், பெரியோர்களையும், உறவினர்களையும், மதிக்கப் பழகுங்கள்.
*26*. உங்கள் மனதிற்கு நல்லது எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
*27*. ஒவ்வொரு நாளும் இறைவனை வணங்குங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், நன்றி சொல்லுங்கள்.
*28*. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
*29*. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள். உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
*30*. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். இன்பமோ, துன்பமோ இதுவும் கடந்து போகும்.
*வாழ்க்கை வாழ்வதற்க்கே...*

 நன்றி இணையம்

சித்தர்களின் குரல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips
Image result for சித்தர்களின் குரல்
திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் யோக சுக்சுமங்களும் 
*****************************
*************************************

{யோகத்தை பயிலுபவர்களுக்கு , யோகத்தை பற்றி விரிவாக அறிய விரும்புபவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்னரே திருமூல தெய்வம் நமக்கு அளித்த யோக ரகசியங்கள் . படித்து முழுமையான பலனை பெறுவோம் .}
தியானத்தால் பிறர் மனதை அறியவும்
கேட்கவும் முடியும் (auditory hallucinations). பிறருக்கு கேட்காத
நுண்ணிய ஒலிகளை கேட்கவும் முடியும் (Micro wave hearing) என்ற அறிவியலை உணர்த்தும் திருமூலர்:
---------------------------------------------
---------------------------------
முன்பு பிறர் மனதை கேட்டு அவர்கள் வலிகளிக்கு தீர்வு சொன்ன தீர்க்கதரிசிகளை பித்தலாட்டகாரர்கள் என்று வசை பாடினர்.
பின்பு அது உண்மைதான் என்று நம்பிய அயல் நாட்டினர் அதற்கு Audio Hallucination என்றும் Micro Wave hearing என்றும் பெயரிட்டனர்.
இப்போது அதற்கான உபகரனங்களையும் கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால் நமது தீர்க்கதரிசி திருமூலர் என்றைக்கோ இதை பாட்டாக பாடி வத்துவிட்டார்.
“வைகரி யாதியு மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈச னனாதியே செய்ததே” (திம 2007)
பொருள்:
-------------
வைகரி - செவியோசை; மத்திமை - உடலில் ஏற்படும் ஓசை; பைசந்தி - நினைவேசை; சூக்குமை - நுண்ணோசை.
வைகரை, மத்திமை, பைசந்தி, சூக்குமை இந்த ஆற்றல்கள் யாவையும் புருடன் எனப்படும் மாயயை கடந்து உயிர்களுக்கு கிடைக்கும் வகையில் என்றைக்கோ ஈசன் படத்து வைத்திருந்தான்.
இவைகளை தியானத்தின் மூலம் மனதை செம்மைப் படுத்துதல் மூலம் அடையலாம்.
அறிவியல் கூற்று:
---------------------------
இன்றைக்கு இந்த தொழில்நுட்பத்தைதான் பல Psychiatrist (மனநல மருத்துவர்கள்) பயின்று வருகின்றனர். 
இதன் வாயிலாகவே பல மனநல நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பல குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாலிகளை கண்டறியவும் இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
இவையெல்லாம் விட Microwave Hearing உபகரணத்தின் வாயிலாகத்தாம் இந்த பிரபஞ்ச இரகசியகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.
---------------------------------------------
------------------------------------
திருமூலரை நாம் சித்தர் எனவும் முனிவர் எனவும் நாம் கருதுகிறோம். ஆனால் அவர் இந்திய விஞ்ஞானி (உண்மையில் மெய்ஞானி) என்பதை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வோம்?
{இதனால்தான் ஏசுகிறிஸ்து கூட இந்தியா வந்து தியானத்தையும் சில சித்து வேலைகளையும் கற்று சென்ற வரலாறு உண்டு...
ஆதாரம்-கண்ணதாசன் பதிப்பகம்:இயேசு
கிறிஸ்து.இந்தியாவில் வாழ்ந்தார் என்ற புத்தகம்.பிரெஞ்சு எழுத்தாளருடையது.
மேலும் ஆதாரம்-இயேசுவினுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பருவம் பைபிளில் இல்லாதது..
திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் யோக சுக்சுமங்களும் தொடரும்..?

 நன்றி இணையம்

ராமர் பிள்ளை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 PM | Best Blogger Tips
Image result for ராமர் பிள்ளைImage result for ராமர் பிள்ளை
பல செய்திகள் நம்முடைய கவனத்திற்கு வராமலேயேக் கடந்து போய்விடுகிறது.
அதில் ஒன்றுதான்.. மூலிகைப் பெட்ரோல் விற்க முன் வந்த ராமர் பிள்ளையைக் களி தின்று வா என்று சொல்லி, ஜெயிலுக்கு நாம் அனுப்பி வைத்திருப்பதுவும்.
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள வம்சாபுரம் என்ற குக்கிராமத்திலிருந்து ஒரு படிப்பறிவில்லா இளைஞன் வெளியே வந்து, தன் பெயர் ராமர் பிள்ளை..தான் தண்ணீரை பெட்ரோலாக்கும் மூலிகையைக் கண்டறிந்திருக்கிறேன்..என்று பேட்டியளித்த அந்த நாளில் உலகமே பரபரப்பானது.
Image result for ராமர் பிள்ளை
பத்திரிகைகள் கொண்டாடின..
அப்போது முதல்வராக இருந்த கலைஞரும், சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவர்களுக்கு முன்பாக தண்ணீரை பெட்ரோலாக மாற்றிக் காண்பித்து பரவசம் அடைந்தார்.
அந்தப் பெட்ரோல் வாகன எரிபொருள்தானா என்பது ஆய்விற்குட்படுத்தப்பட்டு, ஆம்..அதில் வாகனங்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாக இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
அதற்கு மூலிகைப் பெட்ரோல் என்று பெயர் சூட்டினார்..
அதை மிகப் பெரிய அளவில் தயார் செய்வதற்கு அரசாங்கம் உதவி செய்தால், பெட்ரோலை எல்லோருக்கும் இலவசமாகவேத் தந்துவிடலாம் என்றார்.
என் நினைவுகள் சரியாக இருக்கும் என்றால், அதற்காக அவருக்கு மாநில அரசு 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது..
இன்னும் சில நாட்களில் மூலிகைப் பெட்ரோல் சந்தைக்கு வந்துவிடும் என்று அவர் அறிவிப்புக் கொடுத்தார்.
அவர் ஊரிலேயே பல இளைஞர்களின் வாகனங்களுக்கு முதலில் பரிசோதனையடிப்படையில் அந்த மூலிகைப் பெட்ரோலைக் கொடுத்ததாகவும், அவர்கள் அதை சந்தோஷமாக வாங்கிச் சென்றதாகவும், அந்த மூலிகைப் பெட்ரோல் அதிக மைலேஜைத் தருவதாகவும் அப்போது பத்திரிகைகளில் பேட்டியெல்லாம் படித்த ஞாபகம்.
ஆனந்த விகடனில் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து இருக்கும் புகைப்படமும் பேட்டியும் வெளியாகியது.
எல்லாம் சில நாட்கள்தான்..
அவர் கண்டுபிடித்த அந்த மூலிகையின் பெயரென்ன என்று கேட்டு அரசியல் முக்கியப் புள்ளிகள் தன்னை நெருக்குவதாகவும், அதை யாருக்கும் வெளிப்படுத்தத் தயாராக இல்லை என்றும் ராமர்பிள்ளையின் பேட்டி வெளியானதும்.. காட்சிகள் மாற ஆரம்பித்தன..
மூலிகைப் பெட்ரோலை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. அப்போதுதான் அரசு அதை ஏற்றுக் கொள்ளும்.. அப்பொழுதுதான் அதற்கு உரிமம் கிடைக்கும்.. ஆகவே விஞ்ஞானிகள் முன்பு வந்து உன் கண்டுபிடிப்பை விளக்கு என்று அரசு தன் முகம் காட்டியது.
IIT விஞ்ஞானிகள் முன்பு பரிசோதனை நடந்தது..
மூலிகைப் பெட்ரோல் என்றால் அதில் உள்ள வேதிப் பொருட்களை விளக்கு.. அது எவ்வாறு வேலை செய்கிறது என்கிற கேள்விகள் எழுப்பப்பட்டது..
படிப்பறிவில்லா ராமர் பிள்ளையால் விளக்கம் கொடுக்க முடியவில்லை..
சரி.. எங்கள் கண் முன்னால் தண்ணீரை மூலிகைப் பெட்ரோலாக மாற்றிக் காட்டு என்றார்கள்..
மாற்றிக் காட்டினார்.
ராமர் பிள்ளை கொண்டு வந்த பாத்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது.. நாங்கள் கொடுக்கும் பாத்திரத்தில் செய்து காண்பி என்றார்கள்..
செய்து பார்த்தார்..
தண்ணீர் மூலிகையாக மாறவில்லை.
தான் கொண்டு வந்திருக்கும் குச்சியைப் பயன்படுத்துகிறேன் என்றார்..
குச்சியை எடை பார்த்தார்கள்..
பின்னர் அந்தக் குச்சியைப் பயன்படுத்தினார்.. தண்ணீர் பெட்ரோலாக மாறிற்று..
அதன்பிறகு அந்தக் குச்சியை எடை பார்த்தார்கள்..
28 கிராம் எடை குறைந்தது..
குச்சிக்குள் ஏதோ ஒரு பொருளை அடைத்து வைத்து வருகிறார். அதைச் சூடாக்கப்படும் தண்ணீருக்குள் விட்டு கலக்கும் பொழுது, உயர் வெப்பநிலையில் உருகி தண்ணீரில் கலக்கிறது. அதுதான் எரிகிறது..
இது மூலிகைப் பெட்ரோல் அல்ல .. மோசடிப் பெட்ரோல் என்று விஞ்ஞானிகள் அறிவித்தார்கள்..
அதன்பிறகு ராமர் பிள்ளையை யாரும் பேச விடவேயில்லை..
ப்ராடு.. மோசடிக்காரன் என்று முத்திரை குத்தி, அவமானப்படுத்தினார்கள்..
அவரது கண்ணீர் இந்த உலகிற்குத் தெரியாமலேயே போய்விட்டது..
விஞ்ஞானிகள், தண்ணீர் பெட்ரோலாக மாறுகிறதா என்பதைத்தான் கவனித்திருக்க வேண்டுமே ஒழிய எதனால் அது பெட்ரோலாக மாறுகிறது என்பதைக் கண்டறிவதில்தான் அதிக அக்கறை காட்டினார்கள்..
மூலிகையின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளத்தான் விஞ்ஞானிகள் முயற்சித்தார்கள் என்று ராமர்பிள்ளை புலம்பினார்.
அந்த மூலிகைதான் என் ரகசியம்.. அதை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று இறுதிவரை நின்றார் ராமர்பிள்ளை..
மோசடி வழக்குகள் அவர் மீது பதிவாகியது..
மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட ஒரு லிட்டர் பெட்ரோலை 5 ரூபாய்க்குத் தயார் செய்து தரத் தயாராக இருக்கின்றேன் என்று அறிவித்தார்..
ஒருவரும் அவரது குரலை செவிமெடுக்கவில்லை..
உண்மையை விட சந்தர்ப்பங்களும், சாட்சிகளும்தான் சட்டத்திற்குத் தேவை..
அந்த சந்தர்ப்பங்களையும், சாட்சியங்களையும் விஞ்ஞானிகள் கொடுத்தார்கள்..
ராமர் பிள்ளையைக் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துவிட்டது.
நேற்றும் இன்றும் ராமர் பிள்ளை சிறைச்சாலைக்குள் தன் விதியை நொந்தவாறு முடங்கிக் கிடந்திருப்பார்..
இதில் ஒளிந்திருந்த உண்மை.. ரகசியம்.. அரசியல் என்ன என்பது யாருக்குமே விளங்காமல் போய்விட்டது..
அவர் அப்பாவியா.. இல்லை மோசடிப் பேர்வழியா? எவர் வந்து சொல்வது?
அவர் எந்தக் கருமத்தையும் கலந்துவிட்டுப் போகிறார்..
நமக்கு 5 ரூபாய்க்கு லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறதா..
நல்லது..
ஒரு நாளைக்கு /ஒரு மாதத்திற்கு / ஓரு வருஷத்திற்கு எத்தனை ஆயிரம் லிட்டர் தயார் செய்து கொடுக்க முடியும்?
அதைத் தயார் செய்து கொடு..பிறகு அதில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு அரசு சொல்லியிருந்தால் உண்மை வெளிவந்திருக்குமே..
வெளியே 60 ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு பொருளிற்கு ஈடாக இன்னொரு பொருளை 5 ரூபாய்க்குத் தருகிறேன் என்று ஒரு மனிதர் சொல்கிறார்.
அதில் சிலரது வாதம்.. அவர் ஏதோ பொருட்களை நண்பர்களின் உதவியோடு திருடிக் கொண்டு வந்து அதை பெட்ரோலோடு கலப்படம் செய்து விலை குறைத்து விற்கிறார் என்பதுவே..
சரி, அப்படி திருடிக் கொண்டு வரப்படும் ஒரு பொருள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு கிடைக்கும்? எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும்? எத்தனை நாட்கள் உலகை இப்படி ஏமாற்றி விட முடியும்?
ஏதோ ஒரு சிலதடவை மட்டுமே ஒரு மனிதன் நினைக்கிறான் என்றால்.. அவர்களின் வாதம் புரிந்து கொள்ளக்கூடியதே..
ஆனால் அந்த மனிதன் கருதுவது.. அது ஒரு புதிய கண்டுபிடிப்பு..
கண்டுபிடிப்பு என்பது காலமெல்லாம் பயன்படக்கூடியது.
அதை அந்தப் பொருள் செய்யும் என்று அந்த மனிதன் சொன்னது வெறும் விளம்பரத்திற்காகவா?
அதற்குப் பின்னணி என்ன?
அதைச் சொல்வதன் மூலம் அந்த மனிதன் எதைப் பெற்றுக் கொள்ள விரும்பினான்?
திருட்டுப் பொருளைச் சந்தைப் படுத்துவதற்காகவா அந்த மனிதன் 20 ஆண்டு காலம் போராடியிருப்பான்?
எதையும் நம்பமுடியவில்லை..
ஜிடி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு இந்த சமூகம் கொடுத்த பரிசையும் மதிப்பையும் புத்தகங்களில் வாசித்துத் தெரிந்து கொண்ட பிறகு.!
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் சிறைப்பட்டுப் போன அந்தக் கிராமத்து விஞ்ஞானிக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அது சரி.. இந்தக் கட்டுரைக்கு ஏன் நயன்தாரா?
ராமர் பிள்ளை பெயரில் தலைப்பு வைத்திருந்தால் எத்தனை பேர் பொறுமையாய் இக்கட்டுரையை வாசித்திருப்பார்கள்?
அதற்காகத்தான்.!


 நன்றி இணையம்