பல செய்திகள்
நம்முடைய கவனத்திற்கு
வராமலேயேக் கடந்து
போய்விடுகிறது.
அதில் ஒன்றுதான்..
மூலிகைப் பெட்ரோல்
விற்க முன்
வந்த ராமர்
பிள்ளையைக் களி
தின்று வா
என்று சொல்லி,
ஜெயிலுக்கு நாம்
அனுப்பி வைத்திருப்பதுவும்.
20 ஆண்டுகளுக்கு
முன்னால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
அருகில் உள்ள
வம்சாபுரம் என்ற
குக்கிராமத்திலிருந்து ஒரு
படிப்பறிவில்லா இளைஞன்
வெளியே வந்து,
தன் பெயர்
ராமர் பிள்ளை..தான்
தண்ணீரை பெட்ரோலாக்கும்
மூலிகையைக் கண்டறிந்திருக்கிறேன்..என்று
பேட்டியளித்த அந்த
நாளில் உலகமே
பரபரப்பானது.
பத்திரிகைகள்
கொண்டாடின..
அப்போது முதல்வராக
இருந்த கலைஞரும்,
சந்திரபாபு நாயுடுவும்
கலந்து கொண்ட
ஒரு நிகழ்வில்
அவர்களுக்கு முன்பாக
தண்ணீரை பெட்ரோலாக
மாற்றிக் காண்பித்து
பரவசம் அடைந்தார்.
அந்தப் பெட்ரோல்
வாகன எரிபொருள்தானா
என்பது ஆய்விற்குட்படுத்தப்பட்டு,
ஆம்..அதில்
வாகனங்கள் எவ்வித
சிரமமுமின்றி எளிதாக
இயங்குகிறது என்பது
உறுதி செய்யப்பட்டது.
அதற்கு மூலிகைப்
பெட்ரோல் என்று
பெயர் சூட்டினார்..
அதை மிகப்
பெரிய அளவில்
தயார் செய்வதற்கு
அரசாங்கம் உதவி
செய்தால், பெட்ரோலை
எல்லோருக்கும் இலவசமாகவேத்
தந்துவிடலாம் என்றார்.
என் நினைவுகள்
சரியாக இருக்கும்
என்றால், அதற்காக
அவருக்கு மாநில
அரசு 15 ஏக்கர்
நிலத்தை ஒதுக்கிக்
கொடுத்தது..
இன்னும் சில
நாட்களில் மூலிகைப்
பெட்ரோல் சந்தைக்கு
வந்துவிடும் என்று
அவர் அறிவிப்புக்
கொடுத்தார்.
அவர் ஊரிலேயே
பல இளைஞர்களின்
வாகனங்களுக்கு முதலில்
பரிசோதனையடிப்படையில் அந்த
மூலிகைப் பெட்ரோலைக்
கொடுத்ததாகவும், அவர்கள்
அதை சந்தோஷமாக
வாங்கிச் சென்றதாகவும்,
அந்த மூலிகைப்
பெட்ரோல் அதிக
மைலேஜைத் தருவதாகவும்
அப்போது பத்திரிகைகளில்
பேட்டியெல்லாம் படித்த
ஞாபகம்.
ஆனந்த விகடனில்
அவரும் அவரது
மனைவியும் சேர்ந்து
இருக்கும் புகைப்படமும்
பேட்டியும் வெளியாகியது.
எல்லாம் சில
நாட்கள்தான்..
அவர் கண்டுபிடித்த
அந்த மூலிகையின்
பெயரென்ன என்று
கேட்டு அரசியல்
முக்கியப் புள்ளிகள்
தன்னை நெருக்குவதாகவும்,
அதை யாருக்கும்
வெளிப்படுத்தத் தயாராக
இல்லை என்றும்
ராமர்பிள்ளையின் பேட்டி
வெளியானதும்.. காட்சிகள்
மாற ஆரம்பித்தன..
மூலிகைப்
பெட்ரோலை விஞ்ஞானிகள்
ஏற்றுக் கொள்ள
வேண்டும்.. அப்போதுதான்
அரசு அதை
ஏற்றுக் கொள்ளும்..
அப்பொழுதுதான் அதற்கு
உரிமம் கிடைக்கும்..
ஆகவே விஞ்ஞானிகள்
முன்பு வந்து
உன் கண்டுபிடிப்பை
விளக்கு என்று
அரசு தன்
முகம் காட்டியது.
IIT விஞ்ஞானிகள்
முன்பு பரிசோதனை
நடந்தது..
மூலிகைப்
பெட்ரோல் என்றால்
அதில் உள்ள
வேதிப் பொருட்களை
விளக்கு.. அது
எவ்வாறு வேலை
செய்கிறது என்கிற
கேள்விகள் எழுப்பப்பட்டது..
படிப்பறிவில்லா
ராமர் பிள்ளையால்
விளக்கம் கொடுக்க
முடியவில்லை..
சரி.. எங்கள்
கண் முன்னால்
தண்ணீரை மூலிகைப்
பெட்ரோலாக மாற்றிக்
காட்டு என்றார்கள்..
மாற்றிக்
காட்டினார்.
ராமர் பிள்ளை
கொண்டு வந்த
பாத்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது..
நாங்கள் கொடுக்கும்
பாத்திரத்தில் செய்து
காண்பி என்றார்கள்..
செய்து பார்த்தார்..
தண்ணீர் மூலிகையாக
மாறவில்லை.
தான் கொண்டு
வந்திருக்கும் குச்சியைப்
பயன்படுத்துகிறேன் என்றார்..
குச்சியை
எடை பார்த்தார்கள்..
பின்னர் அந்தக்
குச்சியைப் பயன்படுத்தினார்..
தண்ணீர் பெட்ரோலாக
மாறிற்று..
அதன்பிறகு
அந்தக் குச்சியை
எடை பார்த்தார்கள்..
28 கிராம்
எடை குறைந்தது..
குச்சிக்குள்
ஏதோ ஒரு
பொருளை அடைத்து
வைத்து வருகிறார்.
அதைச் சூடாக்கப்படும்
தண்ணீருக்குள் விட்டு
கலக்கும் பொழுது,
உயர் வெப்பநிலையில்
உருகி தண்ணீரில்
கலக்கிறது. அதுதான்
எரிகிறது..
இது மூலிகைப்
பெட்ரோல் அல்ல
.. மோசடிப் பெட்ரோல்
என்று விஞ்ஞானிகள்
அறிவித்தார்கள்..
அதன்பிறகு
ராமர் பிள்ளையை
யாரும் பேச
விடவேயில்லை..
ப்ராடு.. மோசடிக்காரன்
என்று முத்திரை
குத்தி, அவமானப்படுத்தினார்கள்..
அவரது கண்ணீர்
இந்த உலகிற்குத்
தெரியாமலேயே போய்விட்டது..
விஞ்ஞானிகள்,
தண்ணீர் பெட்ரோலாக
மாறுகிறதா என்பதைத்தான்
கவனித்திருக்க வேண்டுமே
ஒழிய எதனால்
அது பெட்ரோலாக
மாறுகிறது என்பதைக்
கண்டறிவதில்தான் அதிக
அக்கறை காட்டினார்கள்..
மூலிகையின்
ரகசியத்தைத் தெரிந்து
கொள்ளத்தான் விஞ்ஞானிகள்
முயற்சித்தார்கள் என்று
ராமர்பிள்ளை புலம்பினார்.
அந்த மூலிகைதான்
என் ரகசியம்..
அதை நான்
யாருக்கும் சொல்ல
மாட்டேன் என்று
இறுதிவரை நின்றார்
ராமர்பிள்ளை..
மோசடி வழக்குகள்
அவர் மீது
பதிவாகியது..
மூன்று ஆண்டுகளுக்கு
முன்புகூட ஒரு
லிட்டர் பெட்ரோலை
5 ரூபாய்க்குத் தயார்
செய்து தரத்
தயாராக இருக்கின்றேன்
என்று அறிவித்தார்..
ஒருவரும்
அவரது குரலை
செவிமெடுக்கவில்லை..
உண்மையை விட
சந்தர்ப்பங்களும், சாட்சிகளும்தான்
சட்டத்திற்குத் தேவை..
அந்த சந்தர்ப்பங்களையும்,
சாட்சியங்களையும் விஞ்ஞானிகள்
கொடுத்தார்கள்..
ராமர் பிள்ளையைக்
குற்றவாளி என்று
நீதிமன்றம் அறிவித்து,
மூன்று ஆண்டுகள்
சிறைத்தண்டனையும் விதித்துவிட்டது.
நேற்றும்
இன்றும் ராமர்
பிள்ளை சிறைச்சாலைக்குள்
தன் விதியை
நொந்தவாறு முடங்கிக்
கிடந்திருப்பார்..
இதில் ஒளிந்திருந்த
உண்மை.. ரகசியம்..
அரசியல் என்ன
என்பது யாருக்குமே
விளங்காமல் போய்விட்டது..
அவர் அப்பாவியா..
இல்லை மோசடிப்
பேர்வழியா? எவர்
வந்து சொல்வது?
அவர் எந்தக்
கருமத்தையும் கலந்துவிட்டுப்
போகிறார்..
நமக்கு 5 ரூபாய்க்கு
லிட்டர் பெட்ரோல்
கிடைக்கிறதா..
நல்லது..
ஒரு நாளைக்கு
/ஒரு மாதத்திற்கு
/ ஓரு வருஷத்திற்கு
எத்தனை ஆயிரம்
லிட்டர் தயார்
செய்து கொடுக்க
முடியும்?
அதைத் தயார்
செய்து கொடு..பிறகு
அதில் ஒளிந்திருக்கும்
ரகசியம் என்ன
என்பதைப் பிறகு
பார்த்துக் கொள்ளலாம்
என்று ஒரு
அரசு சொல்லியிருந்தால்
உண்மை வெளிவந்திருக்குமே..
வெளியே 60 ரூபாய்க்கு
விற்பனையாகும் ஒரு
பொருளிற்கு ஈடாக
இன்னொரு பொருளை
5 ரூபாய்க்குத் தருகிறேன்
என்று ஒரு
மனிதர் சொல்கிறார்.
அதில் சிலரது
வாதம்.. அவர்
ஏதோ பொருட்களை
நண்பர்களின் உதவியோடு
திருடிக் கொண்டு
வந்து அதை
பெட்ரோலோடு கலப்படம்
செய்து விலை
குறைத்து விற்கிறார்
என்பதுவே..
சரி, அப்படி
திருடிக் கொண்டு
வரப்படும் ஒரு
பொருள் ஒரு
மனிதனுக்கு எவ்வளவு
கிடைக்கும்? எத்தனை
நாட்களுக்குக் கிடைக்கும்?
எத்தனை நாட்கள்
உலகை இப்படி
ஏமாற்றி விட
முடியும்?
ஏதோ ஒரு
சிலதடவை மட்டுமே
ஒரு மனிதன்
நினைக்கிறான் என்றால்..
அவர்களின் வாதம்
புரிந்து கொள்ளக்கூடியதே..
ஆனால் அந்த
மனிதன் கருதுவது..
அது ஒரு
புதிய கண்டுபிடிப்பு..
கண்டுபிடிப்பு
என்பது காலமெல்லாம்
பயன்படக்கூடியது.
அதை அந்தப்
பொருள் செய்யும்
என்று அந்த
மனிதன் சொன்னது
வெறும் விளம்பரத்திற்காகவா?
அதற்குப்
பின்னணி என்ன?
அதைச் சொல்வதன்
மூலம் அந்த
மனிதன் எதைப்
பெற்றுக் கொள்ள
விரும்பினான்?
திருட்டுப்
பொருளைச் சந்தைப்
படுத்துவதற்காகவா அந்த
மனிதன் 20 ஆண்டு
காலம் போராடியிருப்பான்?
எதையும் நம்பமுடியவில்லை..
ஜிடி.நாயுடுவின்
கண்டுபிடிப்புகளுக்கு இந்த
சமூகம் கொடுத்த
பரிசையும் மதிப்பையும்
புத்தகங்களில் வாசித்துத்
தெரிந்து கொண்ட
பிறகு.!
சிறைக் கம்பிகளுக்குப்
பின்னால் சிறைப்பட்டுப்
போன அந்தக்
கிராமத்து விஞ்ஞானிக்கு
எம் ஆழ்ந்த
அனுதாபங்கள்..
அது சரி..
இந்தக் கட்டுரைக்கு
ஏன் நயன்தாரா?
ராமர் பிள்ளை
பெயரில் தலைப்பு
வைத்திருந்தால் எத்தனை
பேர் பொறுமையாய்
இக்கட்டுரையை வாசித்திருப்பார்கள்?
அதற்காகத்தான்.!
நன்றி இணையம்