*உன் வாழ்க்கையை நீ வாழ்*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | Best Blogger Tips
*எறும்பு* - பட்டாம்பூச்சியின்
வாழ்க்கையை வாழ
ஆசைப்படவில்லை.
*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை.
*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.
*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை.
*அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!!*
நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்.....???
நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???
நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......???
நீ ஏன் வருந்துகிறாய்......???
நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???
உன் வாழ்க்கை விசேஷமானது......!!!
நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது.....!!!
நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது......!!!
நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது....!!!
ஆகாயம் போல் பூமி இல்லை.....!!!
பூமி போல் காற்று இல்லை .....!!!
காற்று போல் தீ இல்லை.....!!!
தீயைப் போல் தண்ணீர் இல்லை.......!!!
ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை.....!!!
பல்லி போல் புலி இல்லை......!!!
தங்கம் போல் தகரம் இல்லை......!!!
பலாப் பழம் போல் வாழைப் பழம் இல்லை......!!!
கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை......!!!
துணி போல் கருங்கல் இல்லை.....!!!
சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை.....!!!
நாற்காலி போல் கட்டில் இல்லை.....!!!
ஒரு மரத்தின் பழங்களிலேயே
ஒன்று போல் மற்றொன்று இல்லை.....!!!
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே
ஒருவர் போல் மற்றொருவர் இல்லை......!!!
ஆண் உடல் போல் பெண்ணுடல் இல்லை.....!!!
நேற்று போல் இன்று இல்லை.....!!!
இன்று போல் நாளை இல்லை......!!!
போன நிமிடம் போல் இந்த நிமிடம் இல்லை.....!!!
இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இல்லை.....!!!
ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.......!!!
இத்தனை ஏன் ....
உன் தலைவலி போல் பல்வலி இல்லை......!!!
உன்னுடைய கண் போல் காது இல்லை.....!!!
*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*
அதனால் நீ தனி தான்.....!!!
உன் கைரேகை தனி தான்......!!!
உன் பசி தனி தான்......!!!
உன் தேவை தனி தான்.....!!!
உன் பலம் தனி தான்.....!!!
உன் பலவீனம் தனி தான்......!!!
உன் பிரச்சனை தனி தான்......!!!
உனக்குரிய தீர்வும் தனி தான்.....!!!
உன் சிந்தனை தனி தான்.....!!!
உன் மனது தனி தான்.....!!!
உன் எதிர்பார்ப்பு தனி தான்......!!!
உன் அனுபவம் தனி தான்.....!!!
உன் பயம் தனி தான்.....!!!
உன் நம்பிக்கை தனி தான்.....!!!
உன் தூக்கம் தனி தான்......!!!
உன் மூச்சுக்காற்று தனி தான்......!!!
உன் ப்ராரப்தம் தனி தான்.....!!!
உன் வலி தனி தான்.....!!!
உன் தேடல் தனி தான்.....!!!
உன் கேள்வி தனி தான்.....!!!
உன் பதில் தனி தான்.....!!!
உன் வாழ்க்கைப் பாடம் தனி தான்......!!!
உன் வாழ்க்கை தனி தான்......!!!
உன் வாழ்க்கை அதிசயமானது தான்......!!!
உன் வாழ்க்கை ஆச்சரியமானது தான்......!!!
உன் வாழ்க்கை அபூர்வமானது தான்......!!!
உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது தான்.....!!!
உன் வாழ்க்கை உத்தமமானது தான்.....!!!
*அதனால்.....*
*இன்றிலிருந்து......*
*இப்பொழுதிலிருந்து.....*
உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!
வாழ்வின் ரசனை தெரியும்.......!!!
வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!
இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!
உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!
உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!
உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!

🙏🏼 *வாழ்க வளமுடன்* 🙏🏼