வயது ஐம்பதை கடந்த பிறகாவது ....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:51 AM | Best Blogger Tips

No photo description available.

வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...
 
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
 விதி என்றால் என்ன ..? படித்ததில் பிடித்தது
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.
 
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
 
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
 
தனித்தனி ஆன்மாக்கள்..
 
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
 
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . 
 
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். 
 
அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
 Hija college natpiddimunai
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
 
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
 சிறகுகள்: தோல்வி நிலையென நினைத்தால்....!
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
 
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
 
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
 👁 கண்களின் மொழி 👁
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
 
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். 
 
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் .
 
அதையும் மீறி சிலவேளைகளில் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
 
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
 
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
 
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட நீ உன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
 
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
 மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது... - Big Motivational club | Facebook
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். 
 
இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
 

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹


சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 AM | Best Blogger Tips

 அபிஷேகப் பிரியர் சிவபெருமான்; 12 மாத பௌர்ணமி அபிஷேகமும் பலன்களும்! |  nakkheeran

அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜயம்
சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
…
☝️☝️800 வருசத்துக்கு முன்பே இந்துக்கள் கோயிலில் காரை சிற்பமாக செதுக்கியது உள்ளனர் .. வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு கோமணம் கட்ட கத்துக்கொடுத்தான் எழுத படிக்க கற்றுக் கொடுத்தான் நாகரிகம் கத்துக் கொடுத்தான் என பிதற்றிக் கொண்டிருக்கும் சொரியானின் அடிவருடிகளுக்கான பதிவு ,

 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

கருடன் பறக்குது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

வானில் சத்தமிட்ட கருடன்.. வட்டமிடுவதற்கு காரணம் இதுதானா? கருட தரிசனத்தில்  இத்தனை பலன்களா | Do you know what are the Super Benefits of Garuda worship  and Whatis Kanchipuram ...



அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேல எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது?

சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது?

பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருது?

இன்னைக்கி தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிடுது?


பகுத்தறிவு வியாதிகள் வியப்பு

உண்மைலயே எங்களுக்கும் கூட இது புரியாத புதிர்தான் ஆனா இதுல ஆச்சர்யப்பட ஒன்றுமே பெரிதாக இல்லை

வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் அதாவது இறைவன் பெயர்

எங்கெல்லாம் வேத பாராயணம் நடக்கிறதோ அங்கெல்லாம் கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார். கருடாழ்வார் வந்த பின்னர் ராகுவாது, கேதுவாது இல்ல சனியாவது கருடனின் அருள்பெற்றால் நவகிரஹ தோஷம்லாம் நம்பளை கிட்ட கூட நெருங்க முடியாதுங்க

கருடாழ்வாரின் ஆற்றல் என்பது சாதாரணமானது அல்ல. அந்த விஷ்ணுவே அன்பால் தான் கருடனை கட்டுப்படுத்தினார் என கருடனின் வரலாறு சொல்கிறது. கருடனுக்கு இணை கருடன் மட்டுமே. சிவன் கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும் #ஸ்ரீ_ருத்ரம், #புருஷ_சூக்தம் முதலான வேதமந்திரங்கள் எங்கெல்லாம் ஒலிக்க எங்கெல்லாம் #கும்பாபிஷேகம் நடக்கிறதோ? அங்கெல்லாம்  கும்பாபிஷேகத்தின் நிறைவு பகுதியான பூர்ணாஹுதியின் பொழுது #கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார்

கழுகின் ஒரு வகை தான் கருடன் அந்த  கருடனின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி. அவ்வாறு இருக்க எங்கு கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கும்பாபிஷேகத்தின் நிறைவு  பகுதியில் கருடன் வந்து கோபுரத்தை வட்டமிடுகிறதே அது எவ்வாறு? எனும் கேள்விக்கு அறிவியலால் பதிலை சொல்ல முடியாது

இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹




கவுனி அரிசி.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 No photo description available.

தெரிந்து கொள்ளுங்கள் ...
 
கவுனி அரிசி.....
 
வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி
ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.
 
பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. 
 
இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
 
 
கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி.
 
திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
 
 
வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
 
இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
 
கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது. இது ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. 
 
ரத்த நாளங்கள் முதிர்ச்சி அடையாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியத்தைத் தக்க வைக்கிறது. நச்சுப் பொருள்கள் உடலில் சேர்வதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கவுனி அரிசியில் காணப்படும் ‘பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ (Phytonutrients), உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுகள், கல்லீரல், ரத்த நாளங்கள், பெருங்குடல் ஆகியவற்றில் குவியாதவாறு தடுக்கிறது.
 
கவுனி அரிசியும் பழுப்பு அரிசியைப்போன்ற சுவையைக் கொண்டதுதான். சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால் எளிதாக இருக்கும். உணவும் மென்மையாக இருக்கும். இன்று மளிகைக் கடைகளில்கூட கவுனி அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது. கவுனி அரிசியின் 
 
முழுப்பயன்களும் அதன் மேல்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில்தான் இருக்கிறது. அதனால் வாங்கும்போதே முழுக் கவுனி அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும்.
அரசர்களின் அரிசி
 
சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு.
 
மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரிசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். 
 
ஒரு காலக்கட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து மக்களும் பயன்படுத்தத் தொடங்க, அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த அரிசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதனால், இன்று வரை சீனாவில் தடைசெய்யப்பட்ட அரிசி என்றே இதை அழைக்கிறார்கள்....
 

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

 

அடுப்புச்_சாப்பாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:15 AM | Best Blogger Tips

 அடுப்புச் சாப்பாடு “விறகு... - தமிழில் தகவல்கள் / நகைச்சுவை | Facebook

இது நல்ல ஒரு நீண்ட பழங்கதை! அமிர்தமான கதை!

#அடுப்புச்_சாப்பாடு
(இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை – ஒவ்வொரு லைனிலும் பஞ்ச் இருக்கிறது – 1960, 80களில் பல வீடுகளில் இதே நிலை தான்)
“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.

அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசான்கள்.

What Wet Firewood Is (And Why You Shouldn't Burn It)
விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.

மண் அடுப்பு, பானைகளுக்கு மவுசு அதிகரிப்பு - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி |  Tirupur News: Demand increase for Mud stove and pots - manufacturers happy
“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.
குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.
மக்களின் குரல் - மலரும் நினைவுகள்.......... “விறகு மண்டிக்குப் போய் விறகு  வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா. அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார் ...
நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.

“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க... போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.
“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.

‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.
இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.
மக்களின் குரல் - மலரும் நினைவுகள்.......... “விறகு மண்டிக்குப் போய் விறகு  வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா. அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார் ...
கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும்  நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.

நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.
கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.
“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார்.
அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும்.  சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.

இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர்.

இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும்.
சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.
சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும்.

“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.
அண்ணன் போய் ஊதுவான்.
“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.

குழல் ஊதும்  அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.

விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.
அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.

விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.

பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக் காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.

சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல்  வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.
சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.

அதுவும் ஒரு டெக்னிக் தான்.
விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.

‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான்.  
சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் விம் பார்.
கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.

ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன்.
மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.

கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்‌ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.

இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.

ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.
இதோ இப்போதும்  கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.
“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”

இந்த பதிவில் விட்டுப் போனது இன்றைய உணவில் அந்த காலத்து சுவையும் இருப்பதில்லை என்பதுதான்.

முகநூலில் வந்த பதிவு

😀😀😀😀
GOOD MORNING 🤝💐💚 

 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹