கருடன் பறக்குது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

வானில் சத்தமிட்ட கருடன்.. வட்டமிடுவதற்கு காரணம் இதுதானா? கருட தரிசனத்தில்  இத்தனை பலன்களா | Do you know what are the Super Benefits of Garuda worship  and Whatis Kanchipuram ...



அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேல எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது?

சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது?

பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருது?

இன்னைக்கி தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிடுது?


பகுத்தறிவு வியாதிகள் வியப்பு

உண்மைலயே எங்களுக்கும் கூட இது புரியாத புதிர்தான் ஆனா இதுல ஆச்சர்யப்பட ஒன்றுமே பெரிதாக இல்லை

வேதம் நான்கிலும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் அதாவது இறைவன் பெயர்

எங்கெல்லாம் வேத பாராயணம் நடக்கிறதோ அங்கெல்லாம் கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார். கருடாழ்வார் வந்த பின்னர் ராகுவாது, கேதுவாது இல்ல சனியாவது கருடனின் அருள்பெற்றால் நவகிரஹ தோஷம்லாம் நம்பளை கிட்ட கூட நெருங்க முடியாதுங்க

கருடாழ்வாரின் ஆற்றல் என்பது சாதாரணமானது அல்ல. அந்த விஷ்ணுவே அன்பால் தான் கருடனை கட்டுப்படுத்தினார் என கருடனின் வரலாறு சொல்கிறது. கருடனுக்கு இணை கருடன் மட்டுமே. சிவன் கோவிலாக இருந்தாலும், விஷ்ணு கோவிலாக இருந்தாலும் #ஸ்ரீ_ருத்ரம், #புருஷ_சூக்தம் முதலான வேதமந்திரங்கள் எங்கெல்லாம் ஒலிக்க எங்கெல்லாம் #கும்பாபிஷேகம் நடக்கிறதோ? அங்கெல்லாம்  கும்பாபிஷேகத்தின் நிறைவு பகுதியான பூர்ணாஹுதியின் பொழுது #கருடாழ்வார் பிரத்யக்ஷம் ஆவார்

கழுகின் ஒரு வகை தான் கருடன் அந்த  கருடனின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி. அவ்வாறு இருக்க எங்கு கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கும்பாபிஷேகத்தின் நிறைவு  பகுதியில் கருடன் வந்து கோபுரத்தை வட்டமிடுகிறதே அது எவ்வாறு? எனும் கேள்விக்கு அறிவியலால் பதிலை சொல்ல முடியாது

இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹