சாப்பிட்ட தட்டை கழுவுவதற்கு கற்றுக் கொடுங்கள்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:09 AM | Best Blogger Tips

கைப்புள்ள on X: "சாப்பிட்ட தட்டை கழுவுவதற்கு கற்றுக் கொடுங்கள்.... இது எனது  மாமனாரின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து ...
சாப்பிட்ட தட்டை கழுவுவதற்கு கற்றுக் கொடுங்கள்....
 
இது எனது மாமனாரின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார்.
 
"மாமா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்கவில்லை.
 
"ஏன் மாமா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன்.
 
"இல்லமா இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது".
 
மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்கு கழுவ வேண்டிருக்கு. 
 
நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 பசங்க அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்...
 
சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்....
 
முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள்... பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,...
 
(வீட்டைக் கட்டிப் பார்..
 
கல்யாணம் முடித்து பார்)
 
என்பது ஒரு பழமொழி..
 
. இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்று சேர்த்து கொள்ளலாம்.
 
சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் பெரிய சுமை.. 
 
ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்....
 
பெண்களின் நிலை உங்களுக்கு புரியும்...
 
-----அழகு ராஜா அவர்களின் பதிவில் இருந்து பகிர்ந்தவை
 
நன்றிகள்

 

திண்ணை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:00 AM | Best Blogger Tips

 No photo description available.


உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
 
அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொல் வாடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தை சொல்கிறது.
 
ஆனால், இன்று திண்ணைகளே காலியாகி விட்டது என்பதுதான் ஒரு வரலாற்று சோகம்.
வாசல் திண்ணை, நடை, ரேழி, தாவாரம், பாவுள், கூடம், கூடத்து உள், முத்தம், தொட்டி முத்தம், கொல்லை , ரெண்டாங்கட்டு, சமையல் உள், கொல்லைத் தாழ்வாரம், கிணத்தடி, கோட்டைஅடுப்பு, மாட்டு தொழுவம், தோட்டம், புழக்கடை ... இப்படி பல்வேறு நிலைகளை கொண்டது அந்தகால கிராமத்து பாரம்பர்ய வீடுகள்.
 
நம் கிராமத்து வீடுகள் அழகே தனி.
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள்.
இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
 
இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை. மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை.
 
பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
வழிபோக்கர்கள் தங்கவும், வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும்.
 
அக்ரஹாரங்களின் அழகே திண்ணைகள் தான். வரிசையாக திண்ணையுடன் கூடிய வீடுகளும், தெருகோடியில் ஒரு அழகான கோவிலும் (பெரும்பாலும் கிருஷ்ணன் கோவில்கள் தான்) அழகோ அழகு. பின்னாடி பொழை.
 
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது.
 
ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும்.
 
மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன.
அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள்.
 
பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்.
அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள்.
புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
 
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது.
 
சாணம் மணக்கும் ஏழை வீட்டுத் திண்ணை தொடங்கி, கிரானைட் கல் பதித்த பெரிய வீட்டு திண்ணை வரை
 
- கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், அரசியல், அனுபவம், பக்தி, பஞ்சாயத்து, கதை, நாடகம், காதல், காமம், மகிழ்ச்சி, சோகம், இளமை, முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம்.
 
ஆனால்!!!
 
தற்காலத்தில் ஒருவரோடொருவர் பேசுவது என்பதே அரிதாகி விட்டது.
 
கிராமபுறங்களிலாவது அக்கறையுடன் குசலம், நலம் விசாரித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது.
 
ஆனால் நகர்ப்புறங்களில்???
அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் மோசம்.
 
கிராம புறங்களில் சன்னதி தெருவின் அழகே அழகு. இப்போது அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகிறது.
 
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து, அன்பை பரிமறினாலே உலகில் பாதி நோய்கள் குறைந்து விடும்.
 
திண்ணைகள் வெறும் கல் சிமெண்ட் மணலால் ஆன கலவைகள் மட்டும் அல்ல.
 
திண்ணைகள் நமது பாரம்பரியம்.
 
திண்ணைகளை போற்றுவோம்.
 
நல்லெண்ணத்தை வளர்ப்போம்.

 

🌷 🌷🌷 🌷  May be an image of 9 people and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

நாம் வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:57 AM | Best Blogger Tips

 




* காலையில் எழுந்திருக்கும் போது -

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

* குளிக்கும் போது -

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

* கோபுர தரிசனம் காணும் போது

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

* வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது -

காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

* நண்பரைக் காணும் போது -

தோழா போற்றி துணைவா போற்றி

* கடை திறக்கும் போது -

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

* நிலத்தில் அமரும் போது -

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

* நீர் அருந்தும் போது -

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

* அடுப்பு பற்ற வைக்கும் போது -

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

* உணவு உண்ணும் போது -

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

* மனதில் அச்சம் ஏற்படும் போது -

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

* உறங்கும் போது -

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

இப்படி எங்கும் சிவம் எதிலும் சிவமே என்று வாழ்ந்தால் இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் நம்மை எந்த துன்பமும் அணுகாது.  

ஓம்🙏நமசிவய💚❤️

திருச்சிற்றம்பலம். 

 

 

ஆடிமாத பலிதர்ப்பணம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 PM | Best Blogger Tips

 ஆடி மாதம் 2024: ஆடிப் பிறப்பு முதல் வரலட்சுமி விரதம் வரை, ஆடி மாத விசேஷங்கள்


........................................................
எதற்காக பலிதர்ப்பணம் கொடுக்கப்படுகின்றது?
 
நம்முடைய சரீரத்தில் நம்முடைய பூர்வீக முன்னோர்களின் தொடர்புகள், உண்டு என்று வைத்தியசாஸ்த்ரத்திலும், 
தந்திரசாஸ்த்ரங்களிலும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
 
உண்மையில் இறந்துபோனவர்களுக்கு போனவர்களுக்கு மட்டுமே செய்யப்படுவது அல்ல தர்ப்பணம்!
 
நமக்காகவும் நம்மில் உள்ள பூர்வீகர்களுக்காகவும், அவர்களின் தொடர்புகளுக்காகவும் செய்யப்படுவதுதான் கற்கிடமாதம் பலிதர்ப்பணம்.
 
நம்முடைய பௌதீகசரீரம் நமக்கு வழங்கியது,நம்முடைய பெற்றெடுத்த மாதாபிதாக்களின் அணுக்கள் நம்முடைய பௌதீகசரீரத்தில் இருந்துகொண்டு தான் இருக்கும்.
 
ஒவ்வொரு சரீரத்திலும் 32 தலைமுறையின் ஜீன்ஸ்கள் உண்டு பௌதீக சாஸ்திரம் சொல்கின்றது, அதில் ஏழுதலைமுறை ஜீன்கள் தற்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்கின்றது.
 
நாம் பலிதர்ப்பணம் செய்கின்றது நம்முடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல,! நம்முடைய பின்தலைமுறைகளின் நல் ஜீவிதத்திற்கும்தான் செய்கின்றோம்! ,
 
நம்முடைய பூர்வீகமக்களின் தொடர்புகள் நம்மில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை ஊர்ஜிதம் செய்வதற்காகவும் தான் பலிதர்ப்பணம் செய்யப்படுகின்றது.
யாரெல்லாம் பலிதர்ப்பணம் செய்யலாம்?
எல்லாவரும் செய்யலாம்!
 
மாதாபிதாக்களை நஷ்டப்பட்டுபோனவர்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்களுக்கு வேண்டி செய்யும்போது எல்லாவருமே செய்யலாம்!
 
ஏன் கற்கிடமாதம் என்கிற ஆடிமாத அமாவாசைக்கு மட்டும் ப்ரதானுத்துவம் கொடுக்கப்படுகின்றது?
 
அயனங்கள் இரண்டு உண்டு, உத்திராயண காலம், தக்ஷிணாயகாலம்.
 
உத்திராயண காலத்தில் நல்ல சல்கர்ம்மங்கள் செய்யப்படுகின்ற காலம் அது காரணம் தேவன்மார்கள் விழித்துகொண்டு இருக்கும்காலம்.
 
தக்ஷிணாயகாலத்தில்
இதுபோன்ற கர்ம்மங்கள் செய்யப்படுகின்றது .
கற்கிடமாதம் என்பது தக்ஷிணாயகாலத்தில் முதல் அமாவாசை முதல் என்பதால்தான் கற்கிடமாதம் அமாவாசைக்கு ப்ரதானுத்துவம் கொடுக்கப்படுகின்றது.
 
ஏகதேசம் சூரியனும், சந்திரனும் ஒரே ஒரே ரேகையில் வருவது அமாவாசை திதி அன்றுதான்.
 
பூமியின் நிழல் சந்திரனில் விழுகின்ற காலம் அமாவாசை திதியில் தான்!
 
நம்முடைய சரீரத்தில் உள்ள அக்னி அக்னி ஸோம மண்டலங்களோடு தொடர்பு உண்டு.
இட பிங்கள சூஷ்ம நாடிகள் சரீரபாகத்தில் இந்த மண்டலங்களோடு தொடர்பு உண்டு,
 
ஆகையினால் பிரபஞ்சத்தில் உண்டாகின்ற மாற்றங்கள் சரீரத்திலும் காட்டுகின்றது!
சந்திரன் மனோகாரகன்
ஆகையினால், சந்திரனால் உண்டாகின்ற
மாற்றங்கள் மனுஷ்ய மனசிலும் மாற்றங்களை உண்டாகின்றது .
 
பித்ருதர்ப்பபலி ப்ரார்த்தனை!
...............................................................
ஆ ப்ரம்மணோ யே
பித்ரூ வம்ஸ ஜாதா,
மாத்ரூ ததா வம்ஸ பவா மதீயா வம்ஸ!
த்யுருஸ்மின் மம தாஸ பூத பூத்ய ததைவ ஆஸ்த்திர ஸேவாகாஞ்ச :
மித்ராணி ஸங்யா வசவஞ்ச வ்யக்ஷா த்ருயஷாஞ்சதுஷ்யாஞ்ச
க்ருத்யதோபகார ஜென்மாந்தேரே யே மம"
ஸம்கதாஞ்ச தேப்யா ஸ்யம் பிண்ட பலிம் ததாமி மாத்யூ வம்ஸே ம்யூதாயேஞ்ச பித்ரூம்ஸே ததைவ ச , குரு ஸ்யசூர பந்துனாம் யே சானேய்ய பாந்த வாம்ம்யத்த யே கூலே லூப்த!
பிண்ட புத்ர தாரா விவர்ஜிதா க்ரியா லோபா ஹதாஞ்வ ஜாத்யஞ்சா பங்க வஸ்தததா விரூபா ஆமகர் பாஞ்ச ஜ்ஞ்தாதஞ்சாதா குலே மம பூமௌ தத்தென!
 
பலினா த்யுப்தானாயுந்து பராம் கதிம் ஆதீத கூல கூடினாம் ஸப்த த்யூப நிவாஸானாம் ப்ராணீனாம், உதகம் தத்தம் அக்ஷ்யம் உப்திஷ்டுது "
 
விளக்கம் :
என் தந்தையின், தாயின் வம்சத்தில் ஜெனித்தவர்கள், என்னோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு உடையவர்களும்,
என்னுடை ஜென்மாந்திர தாசன்மார்களுக்காகவும்,
என்னை நம்பி வாழ்ந்துவர்களுக்கும், எனக்கு உதவிகள் செய்தவர்களுக்கும், எனது நட்புகளுக்கும் , என்னை தொடர்பு உடைய ப்ரபஞ்சத்தின் ஜீவஜாலங்களுக்கும் ,
எனக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவிகள் செய்தவர்களுக்கும் ,தற்போதைய அந்த மறைந்துபோன ஆத்மாக்களுக்கு வேண்டி அன்னமும், ஜலமும், புஷ்பமும் ப்ரார்த்தனையும் சமர்பிக்கின்றேன்.
 
எனது மாதாவின் குலத்திலிருந்து, பூமியில் இருந்து விடைசொன்ன ஆத்மாக்களுக்கும் , எனது பிதாவின் குலத்திலிருந்து பூமியில் இருந்து விடைசொன்ன ஆத்மாக்களுக்கும் ,
எனது குருவின் குலத்திலிருந்து போனவர்களுக்கும் ,
 
முடிந்த காலத்தில் பிண்டதர்ப்பணம் ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில் இருந்திருந்த ஆத்மாக்களுக்கும் , பிள்ளைகளோ! மனைவியோ! கணவனோ! இல்லாதவர்கள் அதன்காரணமாக கவலைப்பட்ட ஆத்மாக்களுக்கும் ,
 
பல்வேறுவிதமான காரணங்கள் கொண்டு மற்றவர்களுக்கு நன்மைகள் செய்ய முடியாத ஆத்மாக்களுக்கும் ,பட்டினியால் இறந்துபோன ஆத்மாக்களுக்கும்,
 
ரோகத்தால் பீடிக்கப்பட்டும் ,பூமியை பார்க்காமல் கர்ப்பபாத்திரத்திலேயே மரணம் அடைந்த மனுஷ்யஜீவிகளுக்கும்,
இந்த நாளில் அன்னமும் ஜலமும்,புஷ்பமும் சமர்பிக்கின்றேன்.
 
அஜய்குமார்

 

ஆடி_மாத_சிறப்புகள்....!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips

Amman Potri,ஆடி மாதத்தில் ஒவ்வொருவரும் ...

#ஆடி_மாத_சிறப்புகள்
#40_குறிப்புகள்_வருமாறு

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.
Amman > Image Gallery > EPrarthana.com
3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டால் ...
5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.
Glanz Bemerkenswert Erwerb amman mp3 songs free download Diplom Luminanz  Smash
7.️ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8.️தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9.️கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.
Aadi Friday 2022, Aadi Velli 2022, Power Rituals for Goddess Shakti
10.️ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11️ ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  
தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Aadi Friday 2022, Aadi Velli 2022, Power Rituals for Goddess Shakti
16.️ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18.️கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
ஆடி மாதமும் 25 ஆலய விழாக்களும் | aadi masam amman temple 25 worship
21.️ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22.️ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23.️ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
160 Amman Photos HD Images And Wallpaper (New 2023) Px Bar, 50% OFF
24.️ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25.️ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26.️கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.
Mariamman, Purple Background, amman, goddess of rain, HD phone wallpaper |  Peakpx
27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28.தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30.️ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31.️ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
Amman1samy, Amman, Samy, HD Phone Wallpaper Peakpx, 43% OFF
32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
100 Durga Mata Hd Wallpapers | Jai Mata Di 3d Wallpaper | joprimsa.com
35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
Maa durga ke 9 roop wallpaper, Golpea un 65% de descuento trato masivo -  babaeinejad.com
37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39.️ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40.பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.✍🏼🌹 

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and smiling  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹