இளையராஜவின் இசையில் "ஜனனி,ஜனனி" பாடல் உருவான கதை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 AM | Best Blogger Tips


கே. ஷங்கர் என்னிடம் தாய் மூகாம்பிகைபடத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் நார்த் உஸ்மான் ரோட்டில்ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.

அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்என்று கூறினேன்.

ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்றகாட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, “குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.

உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், “ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!என்று எனக்குத் தோன்றியது.

நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீஎன்று எழுதினார்.

பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன். குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.

பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..

(’
ஜனனி ஜனனியின் மெட்டில் பாடுகிறார்..)
ஜனனி ஜனனிபாடல்.. பஜகோவிந்தம்’ Meter‘ல் அமைந்திருந்தது. அடடே.. குருவே…!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.

அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. 
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே..
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..
அலை மாமகளே கலை மாமகளே..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியேமூகாம்பிகையே.. 
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியேமூகாம்பிகையே.. )
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. 
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.

 நன்றி இணையம்

கராச்சியில் பறந்த காவிக்கொடி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:22 AM | Best Blogger Tips
வழக்கமா இந்த பலுசிஸ்தான் மாணவ அமைப்பான (BSO-AZAD) எந்த போராட்டம் நடத்தினாலும் சிகப்பு வண் ணம் தாங்கிய கொடிகளையே தூக்கி கொண்டு செல்வார் கள்..ஆனால் இப்பொழுது என்னவென்றால் காவிக்கொடி யை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.
நானும் ஒரு வேளை நம்முடைய அகில பாரதிய வித் யார் த்தி பரிஷத் அமைப்பினர் தான் ஊர்வலம் செல்கிறா ர்க ளோ என்று நினைத்தேன்..கடைசியில் அது பலுசிஸ் தான் மாணவ அமைப்பின் ஊர்வலம் தான்..என்றைக்கு மோடி பலுசிஸ்தானின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித் தாரோ அன்று முதல் பலுசிஸ்தானின் நிறமும் மாறிக் கொண்டு இருக்கிறது.
எனக்கு கொஞ்சம் பார்வைக்கோளாறு உண்டு.அதனால் தான் எனக்கு எதைப்பார்த்தாலும் காவியாகத் தெரிகிற தோ என்னவோ..இருந்தாலும் போட்டோவில் கடைசி போட்டோ மட்டும்.கடந்த ஜூன் மாதம் நடந்த பேரணி யில்எடுத்தது.அது முழுக்க சிவப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மோடி ஆகஸ்ட் மாதம்தான் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்.அதற்கு பிறகு கலர் மாறி விட்டதோ என்னவோ..
முதலில் இந்தியாவின் மூவர்ண கொடியை தூக்கி ஆத ரவு தெரிவித்தவர்கள்.இப்பொழுது இந்துக்களின் காவிக் கொடி யை பிரதிபலிக்கும் வண்ணத்தில் கொடிக ளை கைக ளில் ஏந்திக்கொண்டு செல்வது பச்சைக்கொடி பறக்கும் பாகிஸ் தா னில் விரைவில் காவிக் கொடி பற க்கும் காலம் வரும் என்பதையே உணர்த்துகிறது.
சரி இவர்கள் எதற்கு இப்படி ஊர்வலம் போகிறார்கள் என்று தேடினால் இந்த அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவின் செயலாளராக இருக்கும்.சபீர் பலுச் என்கிற மாணவரை பாகிஸ்தான் ராணுவம் தூக்கிக்கொண்டு போய்விட்டதாம்.
அதனால் தான் இந்த மாணவர்கள் வன்முறையை குறிக் கும் சிவப்பு கொடியை தூக்கி எரிந்துவிட்டு தியாகத்தை
குறிக்கும் காவிக்கொடியை கைகளில் ஏந்திக்கொண்டு
ஊர்வலமாக செல்கிறார்கள்.. இந்த சபீர் பலுச்சோடு சேர்த்து 29 மாணவர்களை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான்
ராணுவம் சென்றுள்ளது
பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐயும் சேர்ந்து இவர் களை கொன்று விடும் என்கிற பயத்தில் உலகம் முழுக்க இவர்களின் குரல் ஒலிக்க ஐநா சபையே ஐநா சபையே உனக்கு கண்ணில்லையா என்று கண்ணீர் விட்டு கதறிக்
கொண்டு ஊர்வலம் செல்கிறார்கள்..ஏனென்றால் பாகிஸ் தான் ராணுவம் தூக்கிக்கொண்டு சென்ற யாரும் திருப்பி உயிரோடு வந்ததில்லையாம்..
சரிப்பா..இவர்களை எதற்கு பாகிஸ்தான் ராணுவம் தூக்கிக்கொண்டு சென்றது என்று நீங்கள் கேட்கலாம்
அதாவது பாகிஸ்தானில் உள்ள இந்த பலுசிஸ்தான் வழியேதான் சீனாவின் முக்கிய வர்த்தகம் சார்ந்த கட்டமைப்புகள் உள்ளது.அதோடு CPEC என்கிற சீனா பாகிஸ்தான் எக்னா மிக் காரிடார் என்கிற பாதையின் முக்கிய இடமே பலுசிஸ்தான் தான். இதனால் இங்கு சீனர்கள் டேரா போட்டு பலுசிஸ்தானின் வளங்களை சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்காகதான் சீனா ஏகாதிபத்தியமே பலுசிஸ்தானை பாழா க்காதே பாழாக்காதே..எங்களின் வளங்களை சுரண்டாதே சுரண்டாதே..என்று சபீர் பலுச்தலைமையில் ஒரு மாணவர் கூட்டம்கோஷம் தான் போட்டா ர்கள் பொசுக்குனு தூக்கிக் கொண்டு போய் விட்டது பாகிஸ்தா ன் ராணுவம்.
ஆனால் நம் நாட்டிலேயும் ஒரு கூட்டம் இருக்கிறது. மனித உரிமை என்கிற பெயரில் தீவிரவாதத்தை தூண்டி விட்டு நம்முடைய ராணுவத்தை எதிர்த்து கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை நம்மு டைய ராணுவம் எப்பொழுது வந்து தூக்கப்போகுது?

 நன்றி இணையம்

வெற்றியின் பொருள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:20 AM | Best Blogger Tips

🏹குறை கூறும் உலகம் எப்போதும் குறை கூறிக் கொண்டு தான் இருக்கும். நீ குலுங்கி சிரித்தாலும் சரி, நீ குமுறி அழுதாலும் சரி.
🏹நீங்கள் சரியானவர்கள் என்பதற்காக, அடுத்தவரை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு கிடையாது.
🏹எவ்வளவு தான் துன்பங்கள் வந்தாலும் சிலரிடம் சொல்லாம இருக்குறது மறைப்பதற்கு அல்ல அவங்களும் கஷ்ட படக் கூடாதுனு தான்.
🏹படிப் படியாய் மேல் நோக்கிச் செல்வதே வாழ்க்கை. மகிழ்ச்சி நினைத்தது நடக்கும் போது மட்டுமல்ல, அதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் இருக்கிறது.
🏹ஏமாற்றம் எப்படிப் பட்டவர்களையும் பக்குவப் படுத்தி விடுகிறது.
🏹வெற்றியின் பொருள் ஒன்று தான் நாம் செய்யும் வேலை எதையும் எங்கேயும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் செய்வது தான்.
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும். *செல்வம்மொழி*👍
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!🌜
Sweet dreams
 🌷🍁🌟🌿& Sleep well! 😴💤💤💤Have a lovely happy tomorrow too..!🌝🔆🔆🔆🔆🔆🔆
இறைவன் நினைவே இனிய வணக்கம்!🕉 வாழ்க வளமுடன் !!🙌 நலமுடன்!! நன்றி!! நன்றி!🙏!ஓம் சிவ சத்தி ஓம்🔯 -என்றும் அன்புடன் 💕MU Dhanalakshmi Chandaran


தேங்காய் உபயோகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 AM | Best Blogger Tips


தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் 
என்று நிறைய பேர் கைவிட்டனர் 
உண்மை இதோ :--
*
பச்சை தேங்காயின் பயன்கள்*
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
இரத்தத்தை சுத்தமாக்கும்...
உடலை உரமாக்கும்.....
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
குறிப்பு :
தேங்காய் குருமா 
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ....
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்🤔?..
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு 
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன் 
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...
🎀 *பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்* 🎀

 நன்றி பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

🌹 *சூரியனும் உணவும்* 🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 AM | Best Blogger Tips

🌴பூமிக்கும் பூமிசார்ந்த உயிரினங்களுக்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே. சூரிய ஆற்றல் நமக்கு கிடைக்கவில்லை எனில் நம்மால் உயிர்வாழ முடியாது.
🌴இதனை ஆய்ந்தறிந்த நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் எனும் ஆசனத்தை அறிமுகப்படுத்தினர். இதுவரை நம் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் முன்னோர்கள் சூரிய சக்தியை கிரகிக்கும் முறையை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
🌴பல யோக நூல்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆனால் நாம் அதை மூடநம்பிக்கைகளின் பட்டியலில் ஒன்றாக வைத்திருந்தோம். இவற்றை ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது *NASA*.
🌴கடந்த ஒரு வருடமாக *Hina Manek* என்பவரை வைத்து ஆய்வு செய்ததில் திடுக்கிடும் பல தகவல்களை கண்டு *NASA*வே ஆட்டம் கண்டது. எல்லோராலும் புலன்கடந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற உண்மையே அது.
🌴 *Sun Gazing* அல்லது *Sun Eating* என்பதை பற்றிய பயிற்சிகள் இதோ.
💐 *காலணி ஏதும் அணியாமல் நேராக நின்றுகொண்டு சூரியனை பார்க்க வேண்டும்*💐
💐 *சூரிய உதயத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவோ அல்லது சூரிய மறைவிற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவோதான் இதனை செய்ய வேண்டும்*💐
💐 *உங்களுக்கு வசதியான ஏதேனும் ஒருவேளையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது காலையோ அல்லது மாலையோ* 💐
💐 *முதல் நாள் பயிற்சியில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே சூரியனை பார்க்க வேண்டும். அடுத்தநாள் கூடுதலாக 10 வினாடிகள் ஆக 20 வினாடிகள். மூன்றாம் நாள் 30 வினாடிகள்* 💐
💐 *இப்படி பத்து பத்து வினாடிகளை மட்டுமே தினமும் கூட்டிக்கொண்டு போக வேண்டும், இது மிகவும் முக்கியமானது*💐
💐 *இவ்வாறு தொடர மூன்று மாதங்களில் 15 நிமிடங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சூரிய கதிர்களால் மறைந்து போயிருப்பதை காண்பீர்கள்* 💐
💐 *இப்படியே ஆறு மாதம் தொடர 30 நிமிடங்கள் தொடக்க கூடியதாக இருக்கும். அப்போது உங்கள் உடலில் இருந்த அனைத்து நோய்களும் காணாமல் போயிருக்கும்*💐
💐 *இப்படியே ஒன்பது மாதம் தொடர 45 நிமிடங்கள் பயிற்சியாக கணக்கு வரும். அப்போது உங்கள் உடல் ஓர் உச்சக்கட்ட ஆற்றலை பெற்றிருக்கும், இனி உங்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படாது* 💐
💐 *இந்த பயிற்சியை செய்யத் தொடங்கிய நாள்முதல் தினமும் 45 நிமிடங்கள் வெறும் காலில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும், இது உங்களுக்கு அதீத சக்திகளை பெற்றுத் தரும்*💐
🌴இனி நீங்கள் எதையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்பது மாத பயிற்சி முடிந்தபின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுதந்திர பறவை.
*If your mind accepts, Your mind adapts

நன்றி இணையம்


உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 AM | Best Blogger Tips

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.
பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.
வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.
பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.
*
ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.
க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.
நன்றி இணையம்