இளையராஜவின் இசையில் "ஜனனி,ஜனனி" பாடல் உருவான கதை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:24 | Best Blogger Tips


கே. ஷங்கர் என்னிடம் தாய் மூகாம்பிகைபடத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும். இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது. அந்த சமயத்தில் நான் நார்த் உஸ்மான் ரோட்டில்ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.

அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்என்று கூறினேன்.

ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்றகாட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, “குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.

உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள். வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன். முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், “ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!என்று எனக்குத் தோன்றியது.

நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம். உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீஎன்று எழுதினார்.

பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன். குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது. அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.

பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..

(’
ஜனனி ஜனனியின் மெட்டில் பாடுகிறார்..)
ஜனனி ஜனனிபாடல்.. பஜகோவிந்தம்’ Meter‘ல் அமைந்திருந்தது. அடடே.. குருவே…!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.

அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. 
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே..
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..
அலை மாமகளே கலை மாமகளே..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியேமூகாம்பிகையே.. 
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியேமூகாம்பிகையே.. )
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. 
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.

 நன்றி இணையம்