வாழ்க்கைக்குத் துணையாக
இருக்கும் பெண்கள் நலமாக இருக்க,
ஜோதிட நூல்கள்
பெண்கள் எந்தெந்த நக்ஷத்திரத்தில் பிறந்தால் என்ன பயன் என்று கூறுகிறது. தீதுறு
நட்சத்திரத்தில் பிறந்திருந்தால்,
அவர்கள்
வாழ்க்கை துன்பமயமாகவல்லவா இருக்கும்?
பெண்களின்
தீதுறு நட்சத்திரங்களின் சக்தியைக் குறைக்க பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும் என
லலிதா சகஸ்ர நாமம் பின்வருமாரு கூறுகிறது . ‘'தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுர’' இதன் பொருள் - தாரா-நக்ஷத்திரங்களின், காந்தி-சக்தியை, திரஸ்காரி-குறைக்க, மறைக்க, நாஸாபரண-மூக்குத்தி, பாஸுர-அணிய வேண்டும்’’.
மேலும் மூக்குத்தி அணிவதால் முகத்தில் லக்சுமீகரம் நிலவும் என்றும் , முழிவளத்துக்கு நல்லது
எனவும் மூதாதயர் கூறுவர். அதற்கான காரணம் பின்வருவது தான். பாற்கடலைக் கடைந்தபோது
அதில் கிடைத்த பொருள்களுடன் மஹாலட்சுமியும் அவளுக்கு முன் மூதேவி தோன்றியதாக
புராணங்கள் கூறுகின்றன. முன்தோன்றியதால் மூதேவி யை “அக்கா” என்றும் லக்ஷ்மியை “தங்கை”யென்றும் கூறுவர். மூதேவி
சென்ற இடம் சீரழிந்தும் லக்ஷ்மி சென்ற இடம் சீரும் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்த மூதேவி, இறைவனிடம் “என்னை யாரும்
விரும்புவதில்லை. என்னை மதிக்கக் கூடிய இடத்தில் இருக்க அருள வேண்டும்” எனக் கேட்டாள். வேண்ட
முழுதும் தருபவனான இறைவன், “எந்த இடத்தில் இருக்க
விரும்புகிறாய்?” என்று கேட்டபோது, மிக முக்யமாக எல்லாராலும்
மதிக்கப்படக்கூடிய பசுவின் முகத்திலேயும், பெண்களின் மூக்கிலேயும், ஆண்களின்
பிருஷ்டபாகத்திலேயும் (இடுப்பு) இருக்க வேண்டினாள். அப்படியே வரந்தந்துள்ளதை
அறிந்த, அந்த மூவரும் இறைவனிடம் “வணக்கத்திற்கு உரியவர்களாக விளங்கி வரும் எங்களிடம் மூதேவி
இருந்தால் யார் எங்களை மதித்து வணங்குவார்கள்?” என்று கேட்டதற்கு, இறைவன் “மூதேவி உங்களிடம் வராமல்
இருப்பதறகு வழி சொல்கிறேன். ஆண்கள் ஆஸனமில்லாமல் செய்யும் எந்தக் காரியமும்
மூதேவிக்கு உரியதாக ஆகும். ஆஸனத்தில் அமர்ந்து செய்யும் போது மூதேவி அங்கு
வரமாட்டாள். பசுவிற்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பின்புறம் லக்ஷ்மி வாசம்
செய்வதால் பின்புறம் பூஜை வழிபாடு செய்து, எந்த மிருகத்திற்கு இல்லாத
அளவு உன்னுடைய சரீரமே எல்லா தெய்வங்களும் உறைகின்ற இடமாகவும், உன் சரீரத்தில் உண்டாகும்
பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோஜலம் யாவும் இறைவழிபாட்டிற்கும் மனிதனுடைய ஆரோக்யத்திற்கும்
உபயோகப்படும். பெண்களுக்கு மூக்கில் மூதேவி வாசம் இல்லாமல் இருப்பதற்கு
லக்ஷ்மியின் அம்சமான நவரத்னங்களும் தங்கத்தாலான மூக்குத்தியும் அணிவதால் மூதேவி
வரமாட்டாள். லக்ஷ்மி நித்யவாசம் செய்து வருவதுடன் சுமங்கலி பூஜை செய்து
வழிபடுவார்கள் என்று ஆசி வழங்கினார். ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டியது
அவசியமாகிறது .
பெண்கள் ஆரோக்யமாக வாழ்ந்திட மூக்கு காதுகளில் துளையிட
வேண்டுமென்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. துளையிட்ட இடத்தில் தங்கம், நவரத்னங்களை வைப்பதால், மாதந்தோறும் மற்றும்
மகப்பேறு காலத்திலும் இழந்த சக்தியை ஈடுசெய்யும் என்று வைத்திய நூல் கூறுகிறது.
மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான
தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன். சிந்தனா சக்தியை ஒரு
நிலைப்படுத்துகிறது.. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல்
இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
நன்றி இணையம்