★ ஒவ்வொரு யுகம் முடிந்ததும்
உலகம் அழிந்து போகும். அப்போது சிவன்,
எல்லா
உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும்
அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார்.
★ அடேங்கப்பா! இந்த உயிர்கள்
எத்தனை பெரிய பாவ மூட்டைகளை கரைக்க வேண்டியிருக்கிறது! அதற்கு ஏகப்பட்ட பிறவிகள்
எடுக்க வேண்டுமே என்று வருத்தப்படுவார். அப்போது, அவர் உள்ளத்தில் கருணை
பொங்கும், மீண்டும் உயிர்களைப்
படைக்க முடிவெடுப்பார்.
★ மகிழ்ச்சியில் அப்போது நடனம்
புரிவார். அதையே 'ஆனந்த தாண்டவம்" என்பர். சிவன் நடனமாடும் போது 'நடராஜர்" என்ற
பட்டப்பெயர் பெறுவார்.
நடராஜருக்கு களி படைப்பது ஏன்?
★ சிதம்பரத்தில் வாழ்ந்த
சேந்தனார் என்னும் அடியவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவிடுவது வழக்கம். ஒருநாள்
மழை பெய்த சமயத்தில், அடியவர் ஒருவர் உணவுக்காக வந்தார். சேந்தனாரின் மனைவி களி
தயாரிக்க அரிசி, உளுந்துமாவு எடுத்தார்.
★ அடுப்பு பற்ற வைக்க
முடியாமல், விறகெல்லாம் மழையில் நனைந்திருந்தது. இருந்தாலும், ஈரவிறகை வைத்தே ஒருவழியாக
சமைத்து அடியவருக்கு களி படைத்தார். அவரும் அதை சாப்பிட்டு மகிழ்ந்தார். அன்றைய
நாள் திருவாதிரை நாளாக இருந்தது.
★ சேந்தனார் மறுநாள் சிதம்பரம்
நடராஜரை தரிசிக்கச் சென்றார். அங்கு கோவிலில் சுவாமியின் வாயில் களி
ஒட்டியிருந்ததைக் கண்டார். மெய் சிலிர்த்துப் போனார். அடியவராக வந்து தங்களை ஆட்கொண்டவர்
நடராஜரே என்பதை உணர்ந்தார். அன்று முதல் 'திருவாதிரை" அன்று களி
படைக்கும் வழக்கம் வந்தது.
நன்றி இணையம்