சொர்க்க லோகத்தை அடைய கொக்கரையான் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:17 | | Best Blogger Tips

செய்த பாவங்கள் அனைத்தும் விலகி சொர்க்க லோகத்தை அடைய தகுதி பெற்றவன் ஆக்கும் கொக்கரையான் கோயில்:
இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?
எமதர்மராஜன் தன உதவியாளர்கள் அன்று எடுத்துவந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் , உங்களில் யார் கொக்கரையான் கோவில் கோபுரதரிசனம் செய்துள்ளீர்கள்??
இதற்கு என்ன காரணம்?
எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான் எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான் என்பதே காரணம்.
இந்த கோவில்எங்கு உள்ளது ?
நம் கொங்கு நாட்டில் தான் .....திருச்செங்கோடு அருகில் ...16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....
திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், 
ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம்.
சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்தகிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
🙏🙏🏻
🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

 நன்றி இணையம்