கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க

மணக்கால் அய்யம்பேட்டை | 3:59 AM | Best Blogger Tips

அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது.
இதற்குக் காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான். ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகு படுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
எலுமிச்சை ஸ்கரப்
இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.
எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப்
கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு
இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளைப்புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன. அவற்றில் சில செய்முறைகளை நாம் இங்கு பார்ப்போம்:
* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.
* வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.
* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.
* உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.
* ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.
* முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.
* பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.
* வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.
* கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

 நன்றி இணையம்