குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:12 | Best Blogger Tips
Image result for குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால்...
நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்
நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....
"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....
காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!
இது என்ன நியாயம்.....??? " என்றேன்.
கலகலவென சிரித்தான் இறைவன்
"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;
தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;
எனக்கான இடத்தை,
எனக்கான நேரத்தை,
எனக்கான விழாக்களை,
என்னை வணங்கும் முறையை
எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!
இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.....!!!
சரிதானே.......!!!
நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு.......
குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப்போவதில்லை என்ற துணிச்சல் தானே.....!!!
"சிந்தித்து தெளிவோமா"
-📖படித்ததில் பிடித்தது. ....🙏🏻வாழ்க வளமுடன் .