பொதுவாகவே இன்று பெண்கள் தத்தமது அழகினை மெருகேற்றிக் கொள்வதிலும் அதனை
பேணுவதிலும் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்தவகையில்
இந்த தைரொயிட் சமச்சீர் அல்லாத நிலையால் ஏற்படும் கழுத்து வீக்கம் அல்லது
கட்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அவர்கள் விஷேடமாக கவனம்
செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகின்றது.
தைரொயிட் என்பது கழுத்துப் பகுதியில் சுரக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொக்ஷின் என்கின்ற ஹோமோனை சுரந்து எமது உடலில் எற்படுகின்ற அனுசேப வீதங்களை கட்டுப்படுத்துகின்ற பணியை செய்கின்றது.
இந்த தைரொக்ஷின் அளவு எமது உடலில் கூடும் போதோ அல்லது குறைகின்ற போதோ எற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம். அது சாதாரணமாக கண்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனை நாம் கண்டக்காளை என அழைக்கின்றோம். எனவே கண்டக்காளையை ஏற்படுத்தும் முக்கியமானதொரு ஹோமோனாக இந்த தைரொக்ஷின் விளங்குகின்றது.
பெண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பூப்படைதல் மற்றும் கர்ப்பம் தரித்தல் போன்ற நேரங்களிலேயே தைரொக்ஷின் அதிகமாக சுரக்கப்படுகின்றது.
அதன் சமச்சீர் தொடர்பான அளவுகோளினை அறிந்துகொள்வதோ அல்லது அது தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதோ ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது. எனவே தொண்டையில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் நாம் வைத்தியரை அணுகுவதே சிறந்ததொரு வழியாக அமையும்.
எமது உடலில் இந்த தைரொக்ஷின் அளவு அதிகரிக்கும்போது (Hyperthyrodism)எவ்வாறான அறிகுறிகளை எற்படுத்துகின்றது என்று இப்போது நாம் பார்ப்போம்.
01. கை, கால்களில் நடுக்கம் ஏற்படும்.
02. உடல் அதிகமாக வியர்க்கும்.
03. பசிக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.
04. உடல் மெலிந்து கொண்டே போகும்.
05. எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு பதற்ற நிலைமை காணப்படும்.
06. எந்வொரு வேலையிலும் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமல் போகும்.
07. கோப உணர்ச்சி மேலோங்கி காணப்படும்.
08. சிலருக்கு வயிற்றோட்டம் எற்படும்.
09. மாதவிடாயில் பிரச்சினைகள் ஏற்படும்.
அடுத்து நாம் தைரொக்ஷின் அளவு உடலில் குறைவடையும் பொழுது( Hypothyrodism) எவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.
01. உடல் சோர்வடையும்.
02. எதிலும் ஓர் ஆர்வம் இல்லாத தன்மை காணப்படும்.
03. தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
04. உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.
05. பசியல்லாத தன்மை காணப்படும்.
06. தூக்கத்தில் ஒழுங்கில்லாத தன்மை ஏற்படும்.
07. மலச்சிக்கள் ஏற்படும்.
அது மட்டுன்றி இந்த தைரொயிட் சுரப்பியின் சமச்சீரற்றத் தன்மையால் மாதவிடாய் காலங்களில் குருதி வெளியேற்றமும் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது கட்டி போன்று காணப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது சிறந்ததொரு முறையாக அமையும்.
தைரொயிட் சமச்சீரற்ற தன்மையால் தொண்டையில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கத்திற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான அறிகுறிகளை உடையவர்கள் வைத்தியர்களை அணுகி முறையான இரத்த பரிசோதனைகள் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற கட்டிகளில் ஊசியை ஏற்றி களங்களை பரிசோதிப்பதன் வாயிலாகவும் இது கண்டக்காளையா அல்லது புற்றுநோயா என்பதை துள்ளியமாக தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அதற்கேற்ப நாம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டக்காளை ஏற்படுவதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவதோடு பெண்கள் தங்களின் அழகினை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முடியும்.

![இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.
SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]
இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.
புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.
ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).
* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.
* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.
* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.
* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.
* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
முதலில் குடியேறியவர்கள்
ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.
ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.
விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மொகலாயத் தோட்டம்
ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/554936_557457177618269_877809502_n.jpg)

![மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!!
LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)]
===>http://inruoruthagaval.com/
ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.
இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/58105_364725416966298_696850296_n.jpg)
![ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)]
===>http://inruoruthagaval.com/
ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.
அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.
ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.
ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:
நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.
ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.
உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/s480x480/45289_364726663632840_117002827_n.jpg)