இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக
வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி
பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..
எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை
எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும்
நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.
தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக
அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு
நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை
இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை
காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில்
அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப
சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு
கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய
பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஊறுகாய், மோர்
மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி
வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம்,
உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.
கிடைக்கும் அளவு : 4 நபருக்கு
For more Cooking Books:
http://www.nammabooks.com/ Buy-Food-Diet-Tamil-Books-Onlin e
இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..
எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.
தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம், உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.
கிடைக்கும் அளவு : 4 நபருக்கு
For more Cooking Books:
http://www.nammabooks.com/