தைரொயிட் சுரப்பும், பெண்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:10 PM | Best Blogger Tips

பொதுவாகவே இன்று பெண்கள் தத்தமது அழகினை மெருகேற்றிக் கொள்வதிலும் அதனை பேணுவதிலும் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்தவகையில் இந்த தைரொயிட் சமச்சீர் அல்லாத நிலையால் ஏற்படும் கழுத்து வீக்கம் அல்லது கட்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அவர்கள் விஷேடமாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகின்றது.

தைரொயிட் என்பது கழுத்துப் பகுதியில் சுரக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொக்ஷின் என்கின்ற ஹோமோனை சுரந்து எமது உடலில் எற்படுகின்ற அனுசேப வீதங்களை கட்டுப்படுத்துகின்ற பணியை செய்கின்றது.

இந்த தைரொக்ஷின் அளவு எமது உடலில் கூடும் போதோ அல்லது குறைகின்ற போதோ எற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம். அது சாதாரணமாக கண்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனை நாம் கண்டக்காளை என அழைக்கின்றோம். எனவே கண்டக்காளையை ஏற்படுத்தும் முக்கியமானதொரு ஹோமோனாக இந்த தைரொக்ஷின் விளங்குகின்றது.

பெண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பூப்படைதல் மற்றும் கர்ப்பம் தரித்தல் போன்ற நேரங்களிலேயே தைரொக்ஷின் அதிகமாக சுரக்கப்படுகின்றது.
அதன் சமச்சீர் தொடர்பான அளவுகோளினை அறிந்துகொள்வதோ அல்லது அது தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதோ ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது. எனவே தொண்டையில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் நாம் வைத்தியரை அணுகுவதே சிறந்ததொரு வழியாக அமையும்.

எமது உடலில் இந்த தைரொக்ஷின் அளவு அதிகரிக்கும்போது (Hyperthyrodism)எவ்வாறான அறிகுறிகளை எற்படுத்துகின்றது என்று இப்போது நாம் பார்ப்போம்.

01. கை, கால்களில் நடுக்கம் ஏற்படும்.
02. உடல் அதிகமாக வியர்க்கும்.
03. பசிக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.
04. உடல் மெலிந்து கொண்டே போகும்.
05. எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு பதற்ற நிலைமை காணப்படும்.
06. எந்வொரு வேலையிலும் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமல் போகும்.
07. கோப உணர்ச்சி மேலோங்கி காணப்படும்.
08. சிலருக்கு வயிற்றோட்டம் எற்படும்.
09. மாதவிடாயில் பிரச்சினைகள் ஏற்படும்.

அடுத்து நாம் தைரொக்ஷின் அளவு உடலில் குறைவடையும் பொழுது( Hypothyrodism) எவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.

01. உடல் சோர்வடையும்.
02. எதிலும் ஓர் ஆர்வம் இல்லாத தன்மை காணப்படும்.
03. தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
04. உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.
05. பசியல்லாத தன்மை காணப்படும்.
06. தூக்கத்தில் ஒழுங்கில்லாத தன்மை ஏற்படும்.
07. மலச்சிக்கள் ஏற்படும்.

அது மட்டுன்றி இந்த தைரொயிட் சுரப்பியின் சமச்சீரற்றத் தன்மையால் மாதவிடாய் காலங்களில் குருதி வெளியேற்றமும் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது கட்டி போன்று காணப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது சிறந்ததொரு முறையாக அமையும்.

தைரொயிட் சமச்சீரற்ற தன்மையால் தொண்டையில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கத்திற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான அறிகுறிகளை உடையவர்கள் வைத்தியர்களை அணுகி முறையான இரத்த பரிசோதனைகள் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற கட்டிகளில் ஊசியை ஏற்றி களங்களை பரிசோதிப்பதன் வாயிலாகவும் இது கண்டக்காளையா அல்லது புற்றுநோயா என்பதை துள்ளியமாக தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அதற்கேற்ப நாம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டக்காளை ஏற்படுவதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவதோடு பெண்கள் தங்களின் அழகினை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முடியும்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/535671_502864643107237_811164532_n.jpg
 
இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:54 PM | Best Blogger Tips

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.
...
புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.

விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது
See More
இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.
 
எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள். 

வாழ்க வளமுடன்!
மெய்ப்பொருள் எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள்.

வாழ்க வளமுடன்!
மெய்ப்பொருள்

" என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே"

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips
என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சித்திரை 1-ம் (ஏப்ரல் 14ந்)  தேதி பிறக்கும் புதிய ஆண்டில் எல்லோருக்கும் எல்லாம் வளமும், செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
ரமேஷ் ராமலிங்கம்

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:45 PM | Best Blogger Tips

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை 108 முறை,ஆயிரம் முறை,லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

'ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி 'மரா' என்றே முதலில் உச்சரித்தார். 'மரா' என்றாலும், 'ராம' என்றாலும் 'பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.

ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். 'ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. 'ரமா' என்றால் 'லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.
ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.

ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். 'ரா' என்றால் 'இல்லை' 'மன்' என்றால் 'தலைவன்'. 'இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள் ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது

மணக்கால் அய்யம்பேட்டை | 1:43 PM | Best Blogger Tips

முதலில் எல்லாம் பானையில் சோறாக்கி, வடிப்பார்கள். சாப்பிட்டு மிஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் பழைய சோறாகச் சாப்பிடுவார்கள்.

இப்போது எல்லாம் குக்கர்மயமாகிவிட்டதால், கையில் சுட்டுக் கொள்ளாமல் கஞ்சி வடிக்கவே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

காலையில் ரெண்டு பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பறப்பவர்களுக்கு, பழைய சோறு - சின்ன வெங்காயத்தின் மகிமை எப்படித் தெரியும்?

* பழைய சாதத்தில் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.

* சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

* காலையில் பழைய சோற்றைச் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல் புண், வயிற்றுவலி குணமாகும்.

* இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

* பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

* அலர்ஜி,அரிப்பு போன்றவை குணமாகும்
மீனா
பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு...!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:42 PM | Best Blogger Tips

இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள். நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா? அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா? என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன. யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது

புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள். மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம். இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது.

அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம். மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.

இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.

ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார். அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம். குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.

இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும். இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும். வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும். உயிர் கொலை செய்யக் கூடாது. இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும். இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது . இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.

இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது. இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது. இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது. மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது

இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது .உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும். இன்னும் ஆழமாக பல விஷயங்களை எடுத்து அலசினால் இஸ்லாம் என்ற கட்டிடம் முகமது நபியின் தனி சிந்தனையில் உருவானது அல்ல

இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும். இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம் காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள் இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும் மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்.

கம்பு கூழ்/கம்மங்கஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:40 PM | Best Blogger Tips

இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..

எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம், உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.

கிடைக்கும் அளவு : 4 நபருக்கு

For more Cooking Books:

http://www.nammabooks.com/Buy-Food-Diet-Tamil-Books-Online
கம்பு கூழ்/கம்மங்கஞ்சி:

மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:39 PM | Best Blogger Tips

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.
மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!! 

  LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)]

 ===>http://inruoruthagaval.com/

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.
அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:

நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.

ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

வாழைப்பூவின் மகத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips

வாழைப்பூவும், அதன் தண்டும் கூட‌ மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருக்கிறது.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்ட‌மின் கிடைக்கிறது

பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

வாழைத் தண்டு நரம்புச் சோர்வை நீக்கும், குடலில் சிக்கிய கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும்.

வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்.

ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.

வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.மலச்சிக்கலைப் போக்கும் .

வாழைப்பூவை பொரியல் அல்லது கூட்டாக செய்து சாப்பிடலாம். அடையாகவும் வடையாகவும் கூட செய்து ருசியாக சாப்பிடலாம். வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:11 PM | Best Blogger Tips
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து! - கூடல் | Tamil Koodal

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே தமிழ் புத்தாண்டு பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (சித்திரை) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது

கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய

மருத்துநீர்

புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

இம் மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு என்பனவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்பெறுவதாகும். பெரும்பாலும் புத்தாண்டு நாளுக்கு முதல்நாள் மருத்துநீர் அருகிலிருக்கும் கோயிலிலே காய்ச்சப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் இலவசமாகவே இதனைப் பெற்றுக் கொள்வர். சிலர் பணம் கொடுத்தும் பெறுவர்.

மருத்துநீர் தலையிலே தேய்த்து நீராடினால்தான் சித்திரைப் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்னும் நம்பிக்கை இந்துக்களிடையே உண்டு. அவ்வாறு நீராடிய பின்னர் புதிய ஆடைகளைக் குடும்பத்தினர் எல்லோரும் அணிவர்.

சித்திரைப் பொங்கல்

தைத்திங்கள் முதல் நாளிலே பொங்கலிடுவது போல சித்திரைத் திங்கள் முதல்நாளிலும் பொங்கல் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்திலே பொங்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வீட்டு முற்றத்தில் பொங்கலிடும் இடம் சாணியினாலே மெழுகப்பட்டுத் தூய்மையாயிருக்கும். மாவிலை, தோரணம் கட்டப்படும். மூன்று கற்கள் வைத்து அதன்மேலே பாலுடன் கலந்த நீர் விட்ட பானை ஏற்றப்படும். பால் பொங்கிவரும் போது வீட்டின் தலைவர் அதனுள் கிழக்குப் பக்கமாகவோ வடக்குப் பக்கமாகவோ பார்த்து அரிசியும் பயறும் சேர்ந்த கலவையைக் கையினால் அள்ளி மூன்று தடவை இடுவர். மிகுதியை வீட்டுத் தலைவி பானையுள் இட்டு, ஏனைய பொருட்களையும் சேர்த்து பொங்கல் தயாரிப்பார். மஞ்சளிலே குட்டிப் பிள்ளையார் அமைப்பர். பழம், வெற்றிலை, பாக்கு முதலியனவற்றுடன் பொங்கல் படையல் இடப்படும். கற்பூர ஆரத்தியின் பின்னர் ஒரு சிறிய வாழை இலைத் துண்டிலே பொங்கலில் ஒரு பகுதியை இட்டு, காகத்தைக் கூவி அழைத்து, அது உண்ணுவதற்கேற்றபடி உயரமான ஓர் இடத்திலே வைக்கப்படும். அதன் பின்னர் குடும்பத்தினர் பொங்கல் உண்பர். பொங்கலுடன் பலகார வகைகளையும் பரிமாறும் வழக்கமும் இருந்தது.

இன்று, தைத்திங்களிலே வீட்டு முற்றத்திலே பொங்குவது போல சித்திரைத் திங்களிலே பொங்கும் வழக்கம் அருகியே விட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டினுள் அடுப்பிலே பொங்குவர். பலர் பொங்கும் வழக்கத்தினையே கைவிட்டுவிட்டனர்.

கைவிசேடம்

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்கும் வழக்கமுண்டு. இதற்கான உகந்த நேரம் பஞ்சாங்கத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்தைக் கடைப்பிடித்து, வீட்டிலே தந்தையே பெரும்பாலும் கைவிசேடம் வழங்குவார். வெற்றிலையில் பணத்தை வைத்துக் கொடுக்க வாங்குபவர்கள் அவருடைய காலிலே விழுந்து வணங்கி ஆசிபெற்ற பின்னர் கைவிசேடத்தை வாங்கிக் கொள்வர். சிலரிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் அவர்களைத் தேடிச் சென்று சித்திரைப் புத்தாண்டிலே கைவிசேடம் பெற்றுக் கொள்வர். அவ்வாறு கைவிசேடமாகப் பெற்ற பணத்தினை அடுத்த சித்திரைப் புத்தாண்டு வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

விளையாட்டுக்கள்

போர்த் தேங்காய் அடித்தல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக அமைந்தது. போர்த் தேங்காய் அடித்தல் தமிழரிடையே நடைபெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது கோயில் திருவிழாக்களிலும் விசேட கொண்டாட்ட நாட்களிலும் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புத்தாண்டு நாளிலே இவ்விளையாட்டுப் பல காலமாக நடைபெற்று வந்தது.

‘கோழிச்சண்டை’ இன்னொரு பரம்பரை விளையாட்டுப் போட்டி சித்திரைப் புத்தாண்டின் போது நடைபெற்று வந்தது. இம்மரபுவழிபட்ட நிகழ்வினையும் டானியல் தன்னுடைய நாவலிலே விரிவாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்க்கப்படும் பக்குவம் பற்றி டானியல் தன்னுடைய அடிமைகள் நாவலில் மிக நுணுக்கமாகக் கூறுகின்றார். இன்று ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் முக்கிய விடயமாகத் திகழும் ‘கோழிச்சண்டை’ நம்முடைய தேசத்திலே சிறப்பாக நடைபெற்றதென்பதற்கு டானியலுடைய நாவல் சான்றாக உள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்களில் ஒன்று ‘தாச்சி’ எனப்படும் ‘கிளித்தட்டு’ ஆகும். இதனை விட எல்லை, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவார்கள். பெண்கள் கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான், நாயும் புலியும் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்திலேயே புதிய பஞ்சாங்கம் வெளி வரும். இலங்கையிலே ‘இரகுநாதையர்’ குழுவினர் கணித்து வெளியிடும் வாக்கிய பஞ்சாங்கமும் ‘திருக்கணித’ குழுவினர் கணித்து வெயியிடும் திருக்கணித பஞ்சாங்கமும் வெளிவருகின்றன. சீனர்கள் தங்களுடைய காலக் கணிப்பில் 60 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்குப் பெயர்களும் இட்டுள்ளனர். கீழைத் தேயக் காலக் கணிப்பில் இது பொதுவான விடயமாக அமைகின்றது. இந்துக் காலக் கணிப்பிலும் 60 ஆண்டுக் கணக்கு இடம்பெறுகின்றது. பிரபவ ஆண்டு தொடக்கம் அஷய ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. “இப்பஞ்சாங்கத்திற்கு ஆதாரமாகவுள்ள கணித சித்தாந்தம் மக்களை உய்விக்கும் பொருட்டு மஹாமகத்துவம் பொருந்தியவர்களும் யோக சித்தியால் திரிகால ஞானமுணர்ந்த தத்துவஞானிகளும் ஆகிய முனிசிரேஷ்டர்களால் ஒரு கற்பகாலம் வரையுமுள்ள கிரககால வரையறைகளை எக்காலமும் எளிதிற் கணிக்குமாறு யுக்தியனுபவங்களுக்கியைய நன்கருளிச் செய்யப்பட்டுள்ளது” என்று வாக்கிய பஞ்சாகக்காரர் குறிப்பிடுவதை நோக்குக. இரண்டு பஞ்சாங்கங்கள் பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்; அதனாலே சில வேளைகளில் உபத்திரவமும் ஏற்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]

விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]

அனுசம் = ஆனி

பூராடம் - பூராடி = ஆடி

சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]

பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]

அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]

கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]

மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி

பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]

மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]

உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?
முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம்.
 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏No photo description available.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:09 PM | Best Blogger Tips
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர்....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 PM | Best Blogger Tips

சகோதர, சகோதரிகளே, இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை. சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல்... வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 11 நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது. அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார். மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம் மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது. அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.

மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார். 120 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், அவரது 150 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டான இந்த வருடம் விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/644209_502705856456449_880473254_n.jpg

நெல்லிக்கனி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
சித்தர்கள் வகுத்த
மரணத்தைத் தள்ளிப்போடும்
நெல்லிக்கனி..!
-தாரகா-

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-ஆசான் தேரையர்-
(சித்தர் அகத்தியரின் சீடர்)

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய
தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர

நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய

15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க

நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

மத மாற்றம் ஒரு புற்றுநோய்...........இதற்க்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips
எந்த விதமான அணுகுமுறையை கையாளப்போகிறோம் ? பஜனை, ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறதா? வார, ம...ாத மற்றும் ஆண்டு ஆன்மீக விழாக்கள் அனைவரும் கடைபிடிக்கின்றனரா? நமது முன்சென்ற ஆன்மீகப்பெருமக்கள் ஊர் தோறும் பயணம் மேற்கொண்டு ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவாகளும் , இறைவனை அடைய வழிவகுக்கும் ஆன்மீக விளக்க கூட்டங்களும் இன்று முற்றிலும் அழிந்துவிட்டதே காரணம்...

இதனை இப்போது தவறாமல் பின்பற்றுவது மதம் மாற்றுவது இஸ்லாமிய , கிருத்துவ கார்பரேட் கம்பனிகள்தான்..இவர்கள் மூளை சலவை செய்வதோடு பொருளாதார ரீதியிலும் ஆசை காட்டி இச்செயலை செய்கின்றனர். இவ்வாறு மாற்றப்படும் மக்கள் பெரும்பாலும் ஹிந்து மதம் பற்றி தெளிவில்லதவராகவும் , பொருளாதரத்தில் நலிந்தவர்களாகவும், ஏழை மக்களாகவும் தான் இருகின்றனர்.

ஏன் ? நமது இன்றைய ஆன்மீக பெருமக்கள் ஒரு கார்பரேட் நிறுவனம் போல் ,கம்பனியை போல் ஒரு இடத்தில மட்டும் மாட மாளிகை அமைத்து செயல்படுகின்றனர், அதிலும் பெரும்பாலும் ஏழை மக்கள் தென்படுவதே இல்லை. இவர்கள் செல்லவில்லை என்றால் கூட இவர்களது ஆஸ்தான சீடர்களையாவது ஊர் ஊராக சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை ஏற்படுத்தலாமே ஏன் செய்வதில்லை ?

ஹிந்து மதத்தில் இருக்கும் மற்றுமொரு அவல நிலை பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது . இதனை எதிர்த்து என்று நாம் அரசிடம் முறையிடப்போகிறோம்? நமது அறநிலையத்துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் இதுபோன்ற நிகழ்வினால் ஏழை எளிய மக்களின் பார்வையில் இருந்து இறைவனை அகற்றுவதையாவது நாம் முதலில் நிறுத்த வேண்டும்.

நம் மக்கள் நமது கையை விட்டு சென்ற பிறகு நாம் நிகழ்த்தும் போராட்டம், எதிர்ப்பை காட்டிலும் அவர்கள் நம்மிடம் இருக்கும் போதே அவர்களை அணுகி ஹிந்து தர்மத்தின் சிறப்புகளை , ஆன்மிகத்தின் பலனை , வாழ்க்கைக்கான ஆன்மிக தேவையை போதித்து மதமாற்ற கும்பலிடம் இருந்து பாதுகாப்போம்.
ஜெய் ஸ்ரீ ராம்!!

காரைக்கால் அம்மையார்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:29 AM | Best Blogger Tips

சைவம் வளர்த்த 63 நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.

... பொது யுகத்திற்குப் பின் 300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.

நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ''அம்மையே'' என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர்.

இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றி, பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன. இவரது சரிதம் இதோ...

காரைக்காலில் தனதத்தன் எனும் வணிகர் குலத்தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினார்கள். இவர் இளவயதிலேயே சிவபெருமானிடம் பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்களை வணங்கி உபசரிப்பார். இவருக்கு திருமண வயது எட்டியது.

நாகப்பட்டினத்தில் நிதிபதி எனும் வணிகத்தலைவன், தன் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியைத் திருமணம் செய்ய விரும்பினான். அதன்படி தனதத்தனுடன் பேச, புனிதவதியார்-பரமதத்தன் திருமணம் நடந்தேறியது. தனதத்தன் தன் மகளைப் பிரியாமல் இருப்பதற்காக, காரைக்காலிலே அவர்களை குடியமர்த்தினான். பரமதத்தன், வாணிபத் துறையை பெருக்கி புனிதவதியாருடன் இல்லறத்தை இனிது நடத்தினான்.

ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர்கள், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். பரமதத்தன் அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். அப்பழங்களை புனிதவதியார் வாங்கி வைக்கும்போது ஒரு சிவனடியார் பசியுடன் வந்தார். அவருக்கு புனிதவதியார், அமுது படைத்தார். அப்போது தன் கணவர் கொடுத்த இரு மாங்கனிகளுள் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார். சிவனடியார், புனிதவதியாரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

பரமதத்தன் மதியம் உணவருந்த விட்டிற்கு வந்தான். புனிதவதியார் அவருக்கு அமுது பரிமாறி, மீதமுள்ள ஒரு மாங்கனியையும் வைத்தார். பரமதத்தன் மாங்கனியை ரசித்து சாப்பிட்டான். கனியின் சுவையால் கவரப்பட்டு 'மற்றுமொரு கனியையும் கொண்டு வா' என்றான். உடனே சமையலறை சென்ற புனிதவதியார், உற்றவிடத்து உதவும் பெருமானே என சிவபெருமானை வேண்ட, உடனே புனிதவதியாரின் கையில் ஒரு மாங்கனி வந்தது. அந்தக் கனியை பரமதத்தனுக்கு படைத்தார்.

முன்சாப்பிட்ட கனியைவிட மிகச் சுவையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் பரமதத்தன். உடனே தன் மனைவியிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். புனிதவதியாரோ, கணவனிடம் உண்மையை மறைத்தல் தவறென்று நடந்தது அனைத்தையும் கூறினார்.

பரமதத்தனுக்கோ ஆச்சரியம். 'சிவனருளா! அப்படியாயின் இன்னொரு கனி கொண்டுவா பார்ப்போம்!' என்றான். உடனே புனிதவதியார் மீண்டும் இறைவனை வேண்ட, இறைவன் மேலும் ஒரு மாங்கனியை அருளினார். இதனைக் கண்ட பரமதத்தன், 'இவள் தெய்வம். இவளை விட்டு நீங்குதல் வேண்டும்' என அஞ்சி, புனிதவதியாரோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தான்.

சில நாட்கள் கழித்து வாணிபத்திற்காக பாண்டிய நாடு சென்றான். அங்கு வாணிப குலப்பெண்ணை மணந்து, ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தான். அந்தப் பெண் குழந்தைக்கு, புனிதவதி எனப் பெயரிட்டு வளர்த்தான்.

பரமதத்தன் பாண்டிய நாட்டிலிருப்பதை அறிந்த உறவினர்கள் பரமதத்தனுடன் புனிதவதியாரை சேர்த்து வைக்க ஒரு பல்லக்கில் ஏற்றி பாண்டிய நாட்டுக்கு அனுப்பினார்கள். புனிதவதியாரின் வரவை அறிந்த பரமதத்தன் தன் மனைவி, மகளுடன் வந்து வணங்கி, உம் திருவருளால் இனிது வாழ்கிறேன். இக்குழந்தைக்கு உமது திருநாமத்தையே சூட்டியுள்ளேன் என்று கூறி அம்மையார் காலில் விழுந்து எழுந்தான்.

இதனைக் கண்ட அவர் சுற்றத்தினர், 'என்ன இது? உன் மனைவியை ஏன் வணங்கினாய்?' என கேட்க, 'இவள் தெய்வம். இவர் மானிடரே அல்ல' என நடந்தது அனைத்தையும் க்ப்ப்ரினான் பரமதத்தன்.
புனிதவதியார் உடனே இறைவனிடம், ''ஈசனே, இவருக்காக தாங்கிய மனித உடலை எடுத்துக் கொண்டு, பேய் வடிவை அருள்வாயாக!'' என வேண்டி, பேய் உருவம் பெற்றார்.

இவருக்கு திருக்கயிலாயத்தைக் காண வேண்டும் எனும் ஆவல் உண்டானது. அதனால் கயிலையை நோக்கி, காலால் நடப்பதைத் தவிர்த்து, தலையால் கயிலை மலை மீது ஏறினார். இதைக் கண்ட உமாதேவியார் சிவனிடம் கேட்க, இவள் நம்மைத் துதிக்கும் பொருட்டு இப்பேய் உருவை வேண்டி பெற்றார் என்று கூறினார்.
பின்னர் புனிதவதியாரைப் பார்த்து. ''அம்மையே வா'' என்றழைத்தார். இறைவனின் திருவடியின் கீழ் எப்போதும் இருக்க வேண்டும் என வேண்டினார் புனிதவதியார். ''அம்மையே, தென்திசையில் திருவாலங்காடு எனும் ஊரில் நாம் நடனம் புரிவோம். அதைக் கண்டு இன்புற்று நம்மைப் பாடிக்கொண்டு இருப்பாயாக!'' என்று அருளினார்.

உடனே திருக்கயிலையை விட்டு, தலையினால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார். அங்கு ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு வணங்கி, ‘கொங்கை திரங்கி’, ‘எட்டி இல்லம்’ எனும் இரண்டு மூத்த திருப்பதிகங்களைப் பாடினார். பின்னர் இறைவன் திருவடியின் கீழ் என்றும் சிவ ஆனந்தத்தை நுகரும் பேறு பெற்றார். அன்றுமுதல் இவர் ‘காரைக்காலம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வெறும் கதையல்ல. அவர் இயற்றிய தமிழ் நூல்கள் சாகா வரம் பெற்றவை. இறைவன் மீதான பக்தியில் தன்னை உருக்கிக் கொண்டு வாழ்ந்தவர் அவர் என்பதும், அதற்காகவே இல்லற வாழ்வைத் துறந்தவர் என்பதும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய சேதிகள். தமிழின் தெய்வீக ஆற்றலுக்கு சான்று பகர்கின்றன இவரது பாடல்கள்.

அம்பை சிவன்.

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:28 AM | Best Blogger Tips

பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.

ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.
...
உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது.

நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம்.

தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்ற தியானங்கள் பலனளிக்கும்.

பொதுவாக தலைமுடி உதிர்ந்து போன பிறகு அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி நன்றாக இருக்கும் போதே அதனை சரியாக கவனித்தால் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போது ஷாம்புவோ அல்லது எண்ணெயையோ தலைக்கு வைக்கும் போது தலையில் இருந்து ஆரம்பித்து தடவுங்கள்.

தலைமுடியின் நுனிப் பகுதியை அவ்வப்போது வெட்டி விடுங்கள். இதனால் தலைமுடி நுனி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு தடவும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

அதிகமாக தண்ணீர் பருகினால் சருமப் பிரச்னைகள் குறையும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.

சரியான தூக்கம் எந்த அளவிற்கு உடலுக்கு அவசியமோ அதே அளவிற்கு தலைமுடிக்கும் தேவைப்படுகிறது.

அதிகமாக தலை முடி உதிர்பவர்களுக்கு...

இளநீர் தண்ணீரை அல்லது தேங்காப் பால் கொண்டு தலை முடியைக் கழுவுங்கள்.

தயிர் அல்லது டீ டிக்காஷனை தலைக்கு குளிக்கும் போது தலை முடிக்கு போட்டு தேய்த்துக் குளிக்கலாம்.

கறிவேப்பிலையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இருக்கும் தலைமுடிக்கு அதிகமாக பலம் கிடைக்கும்.

இதற்கு மேலும் தலைமுடி உதிர்ந்தால் அது உங்கள் பரம்பரை சார்ந்த விஷயமாக இருக்கலாம்.
See More
முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-