கிரகங்கள் படுத்தும் பாடு- ( 50 )

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
கிரகங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் பதிவாக எழுதி வருகிறேன் .இந்த ஐம்பதாம் பதிவில் " #நிழல்கிரகங்களான ராகு பகவான் மற்றும் கேது பகவானால் உண்டாகும் யோகங்களை பார்ப்போம்.
வான்புகழ் கொண்ட வள்ளுவர் தமது திருக்குறளில்
"
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" -என தமது குறட்பாவில் அழகுபட எடுத்துரைப்பார்.
எனவே லொளகீக உலகிற்கு (இவ்வுலகம்) தேவையான பொருளை தருவதில் முன்னிலை வகிப்பது #ராகுபகவான் .இதேபோல அருள் உலகைத் தருவதில் (அவ்வுலகம் ) முக்கிய வகிப்பது #கேதுபகவான் ஆவார்.
சாய கிரகங்கள் என்றும் நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படும் ராகு கேதுக்கள் ஒருவரணு ஊழ்வினை பயனை எடுத்து விளக்கும் கர்மாவின் நாயகர்கள் ஆவார்.
மனித வாழ்வில் யோகங்களை பெறுவதில் முற்பிறவியில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்றார்போலதான் நவக்கிரகங்கள் யோகங்களை நமக்கு வாரிவழங்குகிறது.எனவேதான் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அவர்கள் "ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்"என அழகுபட கூறியிருப்பார்.
ஒவ்வொறு மானிட உயிரிலும் தெய்வீக தன்மையும்,சாத்தானின் ஆட்டமும் அடங்கியிருக்கிறது.
இதில் ஒருவருக்கு தெய்வீக தன்மையை முழுமையாகவும்,முறையாகவும் வெளிப்படுத்தவும்,தூய்மையான முறையில் அதன் நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,பலருக்கு நன்முறையில் வழிகாட்டி ஆன்மீக பாதையில் அழைத்து செல்லும் ஞானகுருவாக விளங்கவும் #கேதுபகவானின் பங்கு அளப்பரியது ஆகும்.
ஒருவருக்கு லக்கனத்தில் கேது பகவான் அமரும்போது எதையும் என்ன நடக்கப் போகிறது முன்பே யூகிக்கும் தன்மையை ஒருவருக்கு வழங்குகிறது.
வாக்குஸ்தானங்களில் கேது பகவான் அமரும்போது வாக்கு பலிக்கிறது.சிலரை அருள் வாக்கு வழங்க செய்கிறது.ஒரு சிலரை புதன் பகவானும் பலப்பட்டிருக்கும் பட்சத்தில் புகழ்பெற்ற சோதிடராக ஒருவரை மாற்றிவிடுகிறது.
ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமரும்போது வேத நூல்களை ஆகம விதிப்படி கற்கும் உயர்கல்வி ஞானத்தை அளிக்கிறது.
பணிரெண்டாமிடத்தில் அமையும் கேதுபகவான் ஒருவரை இளவயதில் பலவிதமான இன்னல்களை தந்து ,அந்த கஷ்டமான நேரங்களில் உறவுகளை பற்றியும்,வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன் மறுபிறப்பற்ற முக்திநிலையை ஒருவருக்கு வழங்குகிறது.
ஒருவன் உலகியல் வாழ்வில் உடலியல் இன்பங்களை அனுபவிப்பதற்கும்,அரசியலில் அதிகாரம் பெறுவதற்கும்,அரசாங்கத்தில் உயரிய பதவி வகிப்பதற்கும்,அயல்நாட்டு ஆதாயம் பெறுவதற்கும்,பங்குசந்தையில் ஈடுபட்டு பலன்பெறவும்,மாந்தீரிக செயலில் ஈடுபடவும்,அரசுக்கு விரோத நடவடிக்கைகளால் லாபம் பெறவுய்,அன்னியமொழி கற்பதற்கும்,அன்னியநாட்டு பெண்ணை திருமணம் செயதலும்,தன்னைவிட தரம்தாழ்ந்த மகளிரிடம் உறவு வைத்துக்கொள்ளுதலுக்கும் மற்றும் ஆடம்பர வாழ்வு மேற்கொள்ளவும் ராகுபகவானின் பங்கு குறிப்பிடத்தக்கது.
#ராகுபகவானால் ஏற்படும் யோகங்கள்;-
ராகுபகவான் ஒருவரது சாதகத்தில் எங்கு அமர்ந்தால் யோகபலனை செய்வார் என பார்க்கின்றபோது லக்கனத்திற்கு மூன்று,ஆறு மற்றும் பதினொன்றாம் இடம் மற்றும் பணிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்து சுபகிரகங்களால் பார்வைபெறும்போது மேலான பலனை தரும் என பராசர் கூறுகிறார்.
இதேபோல "ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்துநின்றால் பூமேடைதனில் படுத்துறங்கும் ராஜயோகமாகும்"-
எனவே ராகுபகவானாது மேஷம்,ரிஷபம்,கடகம்,கன்னி மற்றும் மகரம் என ஐந்து ராசிகளில் ராகுபகவான் நின்று லக்ன சுபர்களால் ராகுதிசையில் மிகுந்த யோகத்தை வாரிவழங்கும்.
ராகு பகவான் கேந்திரகோணங்களில் நின்று வீடு கொடுத்தவன் பலம்பெற்றாலும் ராகு திசை யோகத்தை தரும்.
ராகு பகவான் மறைவு ஸ்தானங்களில் நின்று (3,6,8,12) அவருக்கு சாரம் தந்தவர் லக்கன யோகராகி உச்சம்,ஆட்சி மற்றும் கோணங்களில் நின்றால் ராகுதிசை யோகத்தை வழங்கும்.
ராகு பகவான் வாக்குஸ்தானத்தில் அமரும்போது நல்ல பேச்சுவன்மையும்,மற்றவரை மறைமுகமாக இருபொருள்பட சாதுர்யமாக பேசக்கூடியவராக்குகிறது.
ஆறில் ராகு அமரும்போது எதிரியை வெல்லும் வல்லமை உடையவராக்குகிறது.
பணிரெண்டில் ராகு அமரும்போது கடல்கடந்து செல்லும் யோகத்தை தருகிறது.
#ஸ்ரீராகுபகவானால் உண்டாகும் யோகங்கள்
ராகுவால் உண்டாகும் யோகங்கள் பல உண்டு..அவையாவன;-
1,)
பர்வதாயோகம்
2)
மகாசக்தி யோகம்
3)
சாம்ராஸ்யயோகம்
4)
அஷ்ட லெட்சுமியோகம்
5)
காலசர்ப்ப யோகம்
6)
பீஜயோகம்
7)
மகா கீர்த்தி யோகம்
8)
கிளர்யோகம்
9)
சண்டாள யோகம்
ஒவ்வொறு யோகங்களையும் விரிவாக அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.நன்றி
(தங்களது சாதகப் பலனை போன் வழியாக பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு.)
அன்புடன்,
Astro RsvichandranM.SC,MA,BEd,
PG Assistant(chemistry)
Astro Researcher.
Omsakthi jothida nillayam,
Pudukkottai-District
Email : masterastroravi@gmail.com
Cell and whatsup no:-
97 151 89 647
cell: 740 257 08 99
(Astro consult through cell and whatsup conduct me)