*சிக்கல் பெயர்.*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:31 | Best Blogger Tips

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.Image result for சிக்கல் நவநீதேசுவரர் கோயில்
தெரிந்தும் தெரியாமலும் தொடர்.*
_________️_________________________________
🌺 *சிக்கல் பெயர்.* 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திருவாசகத்தில் மணிவாசகர் *"சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே"* என்று நினைந்து நினைந்து பாடினார்.
Related image
ஆனால் ஈசன் எம்பெருமானோ அவன் பக்தர்களை சிக்கெனப் பற்றிக் கொண்ட தலம் தான் *சிக்கல்* ஆகும்.
 
*"சிக்"* என்று ஓரிடத்தினைப் பற்றிக் கொண்டு ஈசன் அமர்ந்ததனால், இவ்வூர் மக்கள் *சிக்கல்* என பெயரிட்டனர் என்கின்றனர் ஒருசாரர்.
 
முற்காலமொன்றில் இத்தலத்தில் *பால்குளம்* ஒன்று இருந்தது. இத்தலம் வந்த வசிஷ்டமுனி பாலிலிருந்து வெண்ணெய் திரட்டி வரச் செய்தார். அவ்வெண்ணையினைக் கொண்டு சிவலிங்கவுரு செய்து வழிபாடு செய்து வணங்கினார்.
பூஜை முடித்து வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முற்பட்டார் வசிஷ்டமுனி. அது இருக்கமாக கல்லாக மாறி பூமியில் *"சிக்கென"* ஒட்டிக் கொண்டது. வெண்ணெய் கற்சிலையாகிக் கொண்டனதாலும் சுவாமிக்கு *திருவெண்ணெய் நாதர்* என திருநாமம் உண்டாயிற்று.
இதையே தான் ஒருசாரர்,,. சிக் என்று கல்லாக மாறி அமர்ந்து விட்டதால், இவ்வூரை *சிக்கல்* என்பர்.
🍁 *ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் அர்ச்சனை.*
*1 அத்திரி,*
*2
வசிஷ்டர்,*
*3
காஷ்யபர்,*
*4
கவுதமர்,*
*5
பரத்வாஜர்,*
*6
விஸ்வாமித்திரர்,*
*7
ஜமதக்னி,* ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகளாவர்.
வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் இருக்கும் *சப்தரிஷி* என்கிற மண்டலத்தில்தான் இந்த ஏழு முனிவர்களும் வாழ்ந்து வருபவர்கள்.
இந்த ஏழு சப்த முனிவர்களும் தினமும் மாலை நேரம் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய காசிக்கு வருவார்கள்.
இதனையடிப்படையாகக் கொண்டுதான் தினமும் 7.00 மணி முதல் 8.30 மணி வரை *சப்தரிஷி பூஜை* என பூசனை புரிகிறார்கள்.
சப்த ரிஷிகான ஏழு முனிவர்கள் இந்நேரம் கொண்டு வணங்க வரும் ஐதீகத்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் ஏழு பாண்டாக்காளர்கள் ( பாண்டாக்கள் என்றால் அர்ச்சகர்கள்) விஸ்வநாதரை சுற்றியமர்ந்து பூசனை செய்வர்.
வில்வ இலைகளால் அர்சித்தபடி சிவனுக்கு மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கமாக ராகமாகப் பாடுவார்கள்.
பாண்டாக்காளர்கள் ஏற்ற இறக்கமாக பாடுவதை பார்ப்பவர்களின் உரோமக்கால்கள் சிலிர்த்து கண்கள் கலங்கி தொன்டைவலித்து நா தழுதழுக்கும். நா தழுதழுக்க வேண்டும். அப்படியொரு உணர்வு உண்மையான அடியார்களுக்குத்தான் தோன்றும்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌺 *அரை ரூபாயில் அமாவாசை.*
வடலூர் என்றொரு ஊரில் அமாவாசை எனும் பெயருடைய கூலிக்காரனொருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் தினந்தோறும் கறவைகளை உயிர்பறித்து மாட்டிறைச்சியாக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தான்.
ஒரு நாள் அவ்வூரில் வள்ளலாரின் போதனை நடந்தது. அன்று அந்த போதனையை முழுவதும் கடைசி வரை இருந்து கேட்டான் அமாவாசை.
வள்ளலாரின் போதனை அமாவாசையின் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. மனம் திருந்திட எண்ணம் கொண்டு பின்னொரு நாளில் வள்ளலாரை சந்தித்து ஆசி பெறச் சென்றான்.
அவரோட ஆசியைப் பெற்ற அவன், அன்று முதல் உயிர் வதை செய்யும் தொழிலை செய்வதில்லையென உறுதியை வள்ளலாரிடம் எடுத்துக் கொண்டான்.
அமாவாசையின் உறுதியை எண்ணிய வள்ளலார் அவனிடமே.... "அமாவாசை!..

அன்றாடம் அனுதினமும் மாட்டிறைச்சியாக்கி விற்பதில் உனக்கு என்ன கூலி கிடைக்கும்?" என வள்ளலார் கேட்தார்.
*மாட்டை அறுத்து இறைச்சியாக்கிக் கொடுத்தால் எனக்கு அரை ரூ தருவார்கள்.
வளளலார் அமாவாசையிடம் அரை ரூபாய் ஒன்றை கொடுத்தார். இதை பத்திரமாக நீ வைத்துக் கொள்ள வேண்டும் என கூறிக் கொடுத்தார். நீ மாட்டை அறுக்காதிருந்தால் அறுக்காத மாட்டுக்குக் கூலியாக தினமும் உனக்கு அரை ரூபாய் வந்து சேரும் எனக் கூறி ஆசீர் வதித்தார்.
அமாவாசையும் அன்று முதல் ஜீவகாருண்யத்துடன் உயிர்களை நேசிக்கத் தொடங்கினார். பின் வயலில் வேலை செய்து கூலி பெற்று வாழ்க்கை நடத்தினான்.
 
எனவே சைவமாகி பிறவிப்பயனைடைய, இறை தொண்டு புரிந்து, உழவாரத்தில் கலந்து, மீண்டும் பிறவாமை பெற முக்திக்குண்டான பேறு பெற அடியார்களுடன் இணைந்து சிவம் தொழுவோம்.சைவம் வளர்ப்போம்.
 
*மீண்டும் மற்றொரு தெரிந்தும் தெரியாமலும் தொடரில்...*
திருச்சிற்றம்பலம்.
Image result for சிக்கல் சிங்காரவேலர்Image result for சிக்கல் சிங்காரவேலர்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*
கோவை.கு.கருப்புசாமி*


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

நன்றி இணையம்