*"மனம் கலங்காதிருக்க..."*

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips
Image result for  மனம் கலங்காதிருக்கImage result for  மனம் கலங்காதிருக்க
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngதகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngசுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*
ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngபெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngஉறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngஅம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*
பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngஇளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngதரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*
கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngபிறவிக் குருடனாக 
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngமனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngகணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*
குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngஇருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*
சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngகைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*
ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngமஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*
சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngபெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*
பூந்தானம்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngகூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*
தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngநரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...
https://www.facebook.com/images/emoji.php/v5/f50/1/16/2757.pngசோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*
கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...
*எப்படி முடிந்தது இவர்களால்..?*
ரகசியம்...
*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏🏻
கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?
*ஆழ்ந்த நம்பிக்கை...*
அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?
*முதல் வழி...*
(
சொல்லறிவு)
அறிஞர்கள், ஞானிகள் மற்றும் 
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...
*இரண்டாம் வழி...*
(
சுய அறிவு)
மன அமைதியுடன், 
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...
நம்பிக்கை ஏற்பட்ட பின்...
மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...
தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...
அந்த பிரார்த்தனைகள்...
*மந்திரமாக இருக்கலாம்...*
*ஜபமாக இருக்கலாம்...*
*தொழுகையாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.
இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...
என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"
ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*
அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...
ஆதலால் ...
*விடாது நாம ஜபம் செய்வோம்...*
*தொடந்து தொழுகை செய்வோம்...*
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*
இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...
*இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...https://www.facebook.com/images/emoji.php/v5/fe3/1/16/1f490.png💐*

 நன்றி இணையம்

விவேகானந்தர் கி.மு., கி.பி.,

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips
Image result for விவேகானந்தர்Image result for விவேகானந்தர்
சரித்திரத்தில் ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு’ என்பதை கி.மு. என்றும், ‘கிறிஸ்து பிறந்த பின்பு’ என்பதை கி.பி என்றும் சொல்கிறார்கள். அதுபோல சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு இருந்த இந்தியா என்பது வேறு; அவர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா, இந்துமதம் என்பது வேறு.
அதாவது சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. இந்த உண்மையை இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு தெரிந்துகொள்வார்கள்.
-
இந்தியா என்பது ஒன்றுதான்:
-
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா- தென்னிந்தியா என்றும், பல மாநிலங்களாலும், பல மொழிகளாலும், சைவம் – வைணவம்- சாக்தம் போன்ற பல்வேறு மதப் பிரிவுகளாலும், பல்வேறு பழக்க வழக்கங்களாலும் இந்தியா பல்வேறு பிரிவுகள் கொண்டிருந்தது.
அந்நிலையில், அந்நாளில் இந்திய மக்கள் பாரத நாட்டின் சிறப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ‘குருடர்கள் கண்ட யானை’ போன்று தான், இந்தியாவைப் பார்த்தார்கள்.
-
குருடர்கள் யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்து, “இது தூண், இது முறம், இது துடைப்பம் என்று கூறினார்கள்” என்று நாம் ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதுபோல இந்தியாவை இந்திய மக்கள் பல காரணங்களால் தனித்தனியாக நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘இந்தியா முழுவதும் ஒரு நாடு, இந்தியப் பண்பாடு என்பது ஒன்று தான், இந்துமதம் என்பது ஒன்றுதான்’என்று உறுதியாக உணர்ந்தவர்; நமக்கு உணர்த்தியவர் சுவாமிஜி.
‘இந்தியா என்பது ஒரே நாடு, உலகில் இந்துப் பண்பாடு தான் பெருமைக்கு உரியது’ என்ற ஒரு சிந்தனை உருவாகாத அவர் வாழ்ந்த அன்றைய சூழ்நிலையில், இப்படி ஒரு சிந்தனையை அவர் நினைத்துப் பார்த்தார் என்பதே (Conceive செய்தார் என்பதே) வியப்புக்கு உரியது.
-
. நமது பலத்தை நினைவுபடுத்தியவர்:
-
ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் எல்லையற்ற வலிமை கொண்டவர். ஆனால் அவர் தன்னுடைய வலிமையை மறந்திருந்தார். அந்நிலையில் ஆஞ்சநேயருக்கு அவரது பலத்தை ஜாம்பவான் நினைவுபடுத்தினார்.
அதே போன்று இந்து மதத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் தங்களின் பலத்தை நினைவுபடுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
-
. இணைப்புப் பாலம்:
-
சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும், இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் சமயத் தலைவர்களுக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
--
சுவாமி கமலாத்மானந்தர்,

-நன்றி
---
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:58 PM | Best Blogger Tips
Image result for தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?Image result for தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்.



 நன்றி இணையம்