விவேகானந்தர் கி.மு., கி.பி.,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:02 | Best Blogger Tips
Image result for விவேகானந்தர்Image result for விவேகானந்தர்
சரித்திரத்தில் ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு’ என்பதை கி.மு. என்றும், ‘கிறிஸ்து பிறந்த பின்பு’ என்பதை கி.பி என்றும் சொல்கிறார்கள். அதுபோல சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு இருந்த இந்தியா என்பது வேறு; அவர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா, இந்துமதம் என்பது வேறு.
அதாவது சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. இந்த உண்மையை இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு தெரிந்துகொள்வார்கள்.
-
இந்தியா என்பது ஒன்றுதான்:
-
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா- தென்னிந்தியா என்றும், பல மாநிலங்களாலும், பல மொழிகளாலும், சைவம் – வைணவம்- சாக்தம் போன்ற பல்வேறு மதப் பிரிவுகளாலும், பல்வேறு பழக்க வழக்கங்களாலும் இந்தியா பல்வேறு பிரிவுகள் கொண்டிருந்தது.
அந்நிலையில், அந்நாளில் இந்திய மக்கள் பாரத நாட்டின் சிறப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ‘குருடர்கள் கண்ட யானை’ போன்று தான், இந்தியாவைப் பார்த்தார்கள்.
-
குருடர்கள் யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்து, “இது தூண், இது முறம், இது துடைப்பம் என்று கூறினார்கள்” என்று நாம் ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதுபோல இந்தியாவை இந்திய மக்கள் பல காரணங்களால் தனித்தனியாக நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘இந்தியா முழுவதும் ஒரு நாடு, இந்தியப் பண்பாடு என்பது ஒன்று தான், இந்துமதம் என்பது ஒன்றுதான்’என்று உறுதியாக உணர்ந்தவர்; நமக்கு உணர்த்தியவர் சுவாமிஜி.
‘இந்தியா என்பது ஒரே நாடு, உலகில் இந்துப் பண்பாடு தான் பெருமைக்கு உரியது’ என்ற ஒரு சிந்தனை உருவாகாத அவர் வாழ்ந்த அன்றைய சூழ்நிலையில், இப்படி ஒரு சிந்தனையை அவர் நினைத்துப் பார்த்தார் என்பதே (Conceive செய்தார் என்பதே) வியப்புக்கு உரியது.
-
. நமது பலத்தை நினைவுபடுத்தியவர்:
-
ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் எல்லையற்ற வலிமை கொண்டவர். ஆனால் அவர் தன்னுடைய வலிமையை மறந்திருந்தார். அந்நிலையில் ஆஞ்சநேயருக்கு அவரது பலத்தை ஜாம்பவான் நினைவுபடுத்தினார்.
அதே போன்று இந்து மதத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் தங்களின் பலத்தை நினைவுபடுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
-
. இணைப்புப் பாலம்:
-
சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும், இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் சமயத் தலைவர்களுக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
--
சுவாமி கமலாத்மானந்தர்,

-நன்றி
---
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்