முடிவுகள் மாறுதலுக்கு உட்பட்டது

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips

 





ஒரு பெண்

10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

ஒரு ஆண்

அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்த பெண் என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது அந்த பெண் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும்.

அந்த ஆண் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும்.

நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?

ஆம் நிச்சயமாக இப்பொழுது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மறுபடி இப்பொழுது அந்த பெண்ணுக்கு 50 வயது என்றும் அந்த ஆணுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது.

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?

ஆமாம் இப்போது அந்த பெண் தான் வேகமானவர் என்று சொல்வோம்.

மேலும் அந்த ஆண் அவவருடைய எடை 140 கிலோ என்றும் அந்த பெண்ணுடைய எடை 65 கிலோ என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும்.

இப்பொழுது அந்த ஆண் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

இதேபோல அந்த ஆண் பற்றியும் அந்த பெண் பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தகவல்கள கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும்.

இதுதான் வாழ்க்கையிலும். நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம்

அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிட தொடங்குகின்றோம்

இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்_


வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும்

ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும்

ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும், பொருளும் வேறாக இருக்கலாம்

ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்

அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும்.

அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்

நீங்கள் தான் உயர்ந்தவர்கள். நீங்கள் தான் சிறந்தவர்கள்

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்.

எப்போதும்

ஆரோக்கியமாக இருங்கள்.

அமைதியாக இருங்கள்.

திருப்தி அடைந்தவராக இருங்கள்.

புன்னகையைப் படர விடுங்கள்.

மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்.

சமுதாயத்திற்கும்,

இந்த தேசத்திற்கும்

ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்.

சிந்திப்போம் செயல்படுவோம்

 

நன்றி இணையம்


தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டங்கள் யார் நடத்தியது?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips

 




தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டங்கள்

பெரியார் நடத்தி தாழ்த்தப்பட்ட

மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று உரிமை வாங்க கொடுத்தவர் பெரியார் என்ற பொய் பித்தலாட்டங்களுக்கு இதோ ஆதாரம்!

# திராவிடம் வரலாற்று பொய்களும் தெரிந்து கொள்ளலாம்.


பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்கள். நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்.



மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது.




ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர், அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு


திரு கக்கன்ஜி, முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும் சேர்ந்து வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து இதற்கு முழுவதும் பொறுப்பு திரு வைத்தியநாத ஐயர். திரு கக்கன்ஜி ஐயா தேவரும் தான்.

இந்த வரலாற்று வெற்றியை ஈவேராவுக்கு சூடப்பார்ப்பது ஏன்?

இந்த நிகழ்வில் ஈவேரா வெறும் மிச்சர் மாமா தான்.


# தமிழகம் மற்றும் கேரளா. கர்நாடகா. ஆந்திரா பகுதியிலும்

தாழ்த்தப்பட்ட மக்கள கோயிலுக்குள் அழைத்து சென்றதில் பெரியாரின் பங்கு சிறிது கூட இல்லை!

ஆங்கில அரசில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் போக மறுப்பு சட்டத்தின் படி

தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவிலைத் திறந்துவிட்டால், இந்து சமய அறநிலையச் சட்டங்களின்படி கோவில் அலுவலர்களும், அர்ச்சகர்களும், அறங்காவலர்களும், பிறரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற அவலநிலை இருந்தது. அதை அறிந்த #இராஜாஜி, அன்றைய‌ ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபுவிடம் எடுத்துக் கூறி 1935-ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் 88-ஆவது பிரிவின்படி ‘அவசரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிடச் செய்தார்.

ஆதன்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் அதற்காக கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் முதலியவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள் என்ற நிலை உருவானது. அதற்குப் பிறகு தமிழகமெங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939-ஆம் ஆடு ஜூலை 8-ஆம் நாள் திரு வைத்தியநாத ஐயர் தலைமையில். திரு கக்கன்ஜி. எல்.என். கோபாலசாமி, முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர். பூவலிங்கம் முதலிய தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும், விருதுநகர் எஸ்.எஸ். சண்முக நாடார் என்ற நாடார் பிரமுகரும் கோவிலில் நுழைந்து வழிபட்டனர். கக்கன்ஜி அரசியல் வாழ்வில் இந்த நிகழ்ச்சி வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. கக்கன்ஜி மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த கோவில் நுழைவுப் போராட்டத்தை இராஜாஜி ‘இரத்தம் சிந்தாப் புரட்சி’ எனக் கூறி வைத்தியநாத ஐயரையும், கக்கனையும் புகழ்ந்து பாராட்டினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுப் போராட்டத்தை அடுத்து, மதுரையிலுள்ள கள்ளழகர், கூடல் அழகர் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, குற்றாலம், தென்காசி முதலிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமைப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.

கோவில் நுழைவுச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னும் கூட, கேரளாவின் மலபாரிலும், தமிழகத்திலும் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஆங்காங்கே சாதி ஆதிக்கம் கொண்டவர்களும் எதிர்ப்பாகச் செயல்பட்டனர்.

அரிசன சேவாத் தொண்டர்கள் தமிழகத்திலிருந்து கேரளாவின் மலபாருக்குச் சென்றனர். கக்கன் தலைமையில் அரிசன சேவாத் தொண்டர்கள் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள பவண மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்து உரிமையை நிலைநாட்டினர்.

இதில் ஈவேரா பங்கு எங்கே...? !

# பெரியாரின் பங்கு எதுவுமே இல்லை! இப்படியிருக்கே

வரலாற்றை எப்படி எல்லாம் திரித்து பாடங்களாக மாற்றி யிருக்கிறார் திராவிட பொய்யர்கள்.

 


நன்றி இணையம்

படித்து இதயம் கணமான தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips

 






அந்தமான் கொடும் சிறையில் சாவர்க்கர் இருந்த அறைக்குச் சென்றிருக்கிறார் கங்கணா ரணாவத்.

தொலைதூர தீவுகளில் தான் அஞ்சுபவகளை விட்டுவிடுவது வெள்ளையன் பாணி. ஆஸ்திரேலியா எனும் நாடே அப்படித்தான் உருவாயிற்று.

இன்றும் அமெரிக்கா அல் கொய்தா கோஷ்டிகளை அடைத்திருக்கும் குவாண்டனமாவோ தீவு மகா மர்மமானது. அங்கு நடக்கும் சித்திரவதைகளும் கொடூரங்களும் யாருக்கும் கேட்காதவை.

அப்படி வெள்ளையன் இந்தியாவில் தன் கொடும் ஆட்சி நடத்தும்பொழுது அந்தமானிலும் சிறைகட்டி கைதிகளை வதைத்து கொண்டிருந்தான், மிக குறுகலான அறை, ஓயாத வேலை, கடும் அடிதடி என அவனின் கொடூரங்கள் கொஞ்சமல்ல‌.

கைதிக்கு என்னாயிற்று என யாருக்கும் தெரியாது, கேட்கவும் முடியாது, நீதிமன்றங்களும் எதுவும் தலையிடாது.

சுருக்கமாகச் சொன்னால் சாவதும் அங்கு செல்வதும் ஒன்றே, அவ்வளவு கொடூரங்கள்.

அந்தமான் மரவெட்டும் தொழில் முதல் கடும் தொழில்களை செய்யும் அடிமைகளாகத்தான் அந்த சிறையில் இந்திய சுதந்திரபோரட்ட கைதிகளை வைத்திருந்தான் வெள்ளையன். கொஞ்சம் வேலை செய்துவிட்டு சாகட்டும் எனும் நல்லெண்ணம் அன்றி வேறேதும் அவனிடமில்லை.

இந்த குறுகலான கொடும் சிறையில்தான் சாவார்க்கர் அடைக்கப்பட்டிருந்தார், அவர் சந்தித்த ரணங்களும் வாங்கிய அடி உதைகளும் கொஞ்சமல்ல‌.

எந்த கைதிக்கும் நடக்காத சித்ரவதை அவருக்கு நடந்தது, மெல்ல கொல்லும் கொலைமுயற்சி அது.

அங்கே சாவர்க்கரின் உடல்நலம் கெட்டது, இதனாலேதான் ரத்னகிரி சிறைக்கு தன்னை மாற்றக் கோரினார், மெல்ல மீண்டு வந்தார், தேசம் சுதந்திரம் பெற்றபொழுது விடுதலையானார், நாயினும் கீழாக காங்கிரசால் நடத்தபட்டு அபலையாய் செத்தார்.

அவர் செய்த ஒரே தவறு காந்தி தலைமையில் போராடாமல் ஆயுதவழி இன்னும் பல வழிகளில் மக்களை திரட்டியது.

இந்திய சுதந்திரப் போராட்டம் எனும் காலத்தை படித்தால் வெள்ளையனை கடுமையாக எதிர்த்தவர்களெல்லாம் மிக மிருகத்தனமாக சிதைக்கபட்டிருக்கின்றார்கள். வ.உ.சி போல, சாவர்க்கர் போல மிக கொடும் சித்திரவதையெல்லாம் அனுபவித்திருக்கின்றார்கள்.

ஆனால் யாரெல்லாம் அவன் மனம் குளிரும்படி வலிக்காமல் போராட்டம் எனும் பெயரில் அவனுக்கு சவரி வீசினார்களோ அவர்களின் சிறைவாசமெல்லாம் ராஜாக்கள் போல் இருந்திருக்கின்றது.

நேரு சிறை இருந்தது அகமதுநகர் சுல்தானின் மாளிகையில், இதனிடையே அவர் சுவிட்சர்லாந்து செல்ல அனுமதியெல்லாம் உண்டு, இது என்ன எழவு சிறைவாசம் இதில் என்ன கஷ்டம் என்பது தெரியவில்லை.

இந்த உல்லாச வாழ்வில் இருந்துதான் புத்தகமாக எழுதித் தள்ளினார் நேரு.

காந்தி எர்வாடா எனும் மாளிகையில் நிஜாமின் அரவணைப்பில் சிறை இருந்தார், கடைசிவரை அவர் ஏன் இஸ்லாமிய பாசம் கொண்டிருந்தார் என்பது விளங்கியிருக்கலாம்.

இன்றுள்ள தலைமுறைக்கு கொடுக்கப்பட்ட மோசமான, இழிவான, கேவலமான திரிபு வரலாறு போல் உலகில் எங்கும் பார்த்திருக்க முடியாது.

வெள்ளையனின் அடிவருடிகள் உல்லாசமாளிகையில் இருப்பார்கள், அவர்கள் பின்னாளைய தேசதந்தைகள் பெரும் தலைவர்கள்.

உண்மையாக வெள்ளையனை எதிர்த்த சாவர்க்கர் அந்தமான் தனி சிறையில் இருப்பார், கடும் சித்திரவதைகளை அனுபவித்து சாவின் விளிம்புக்கு சென்றுவருவார், அவர் புறக்கணிக்கப்படுவார்.

வெள்ளையனும் அவன் அடிவருடி காங்கிரசும் மறைத்த உண்மைகளையெல்லாம் அந்தமான் சிறை வெளிகொண்டுவந்து கொண்டே இருக்கும், அது அந்த தர்மத்தின் சாட்சியாக எல்லோருக்கும் வரலாற்றை கற்று கொடுத்து கொண்டே இருக்கும்.

மோசடி வரலாறும், திரிக்கப்பட்ட பாடங்களும் சொல்லாத வரலாற்றை, சோக சரித்திரத்தை மவுனமாக வங்கக்கடல் நடுவில் நின்று சொல்லிகொண்டிருக்கிறது அந்த செல்லுலர் சிறை.

கீழே :

சாவர்க்கர் இருந்த சிறையும், காந்தி இருந்த சிறையும்

 

நன்றி இணையம்


மட்டை ஊறுகாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips

 



சிறுவயதில் அப்பா சாப்பிட உட்காரும்போது,

அம்மா கையில் இருபது காசு கொடுத்து அப்பாவுக்கு மட்டை ஊறுகாய் ஒன்னு வாங்கிட்டு ஓடியாடா என்பார்.

அதை கேட்டதும் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வாயிலேயே வண்டி ஒட்டிக்கொண்டு கடைக்கு சென்று வாங்க ஓடுவோம்.

வெகு நாட்களாக வாங்கி தந்தாலும், முதல் முறை அதை சுவைத்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று!!

இருபது வருடங்களுக்கு முன்பு எல்லாம் அம்மா வீட்டில் செய்து பீங்கான் ஜாடியில் எலுமிச்சை ஊறுகாய் போட்டு வைத்து இருப்பார்,

இல்லையென்றால் கடையில் இப்படி மட்டையாக கிடைக்கும்.

இன்று போல, பாட்டில், பாட்டிலாக வாங்கி அடுக்கி கொள்வதில்லை.

இது காய்ந்த தாமரை இலையோ இல்லை மந்தாரை இலையாகவோ இருக்கும்.

அதை சுற்றி அந்த ஊறுகா கம்பனியின் பெயர்.....

அன்று பத்து காசுக்கு கிடைக்கும்,

அம்மா கொடுத்ததில் மீதி எதுவும் வந்தால் அதை நொறுக்கு தீனியாக வாங்கி தின்றுக்கொண்டே வந்து அந்த ஊறுகாய் மட்டையை கொடுப்போம் !

அந்த இலையை மடிக்கும் விதத்தை கவனித்து இருக்கிறீர்களா,

கையில்தான் மடித்து இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் ஒன்று போல இருக்கும். கொஞ்சம் பிரிக்க ஆரம்பிக்கும் போதே அந்த வாசனை உங்களது நாசியினை தூண்டும்.

இன்றைய ஊறுகாய் பாட்டிலில் எண்ணையும் மிதந்துக்கொண்டு இருக்கும்,

இதனால் ஊறுகாய் கொஞ்சம் எடுத்து வைக்கும்போதே தட்டில் ஓடும்.....

ஆனால் இந்த வகை ஊறுகாய்களில் எண்ணை என்பது பெயரளவுக்குதான், ஊறுகாய் என்பது கெட்டியாக இருக்கும்.

சிறு சிறு துண்டுகளாக நார்தங்காயும் அல்லது எலுமிச்சை பலமும் போட்டு, அதில் காரப்பொடியும் உப்பும் தூவி, மஞ்சளும் புளியும் சேர்த்து, கடுகும் எண்ணையும் கொண்டு தாளித்து அது ஊற வைத்து இப்படி வரும்போது.......

எப்படி இருக்கும்....

ஊறுகாய் சாப்பிடுவது ஒரு கலை என்று இங்கு யாருக்காவது தெரியுமா ?

ஆள் காட்டி விரலால் பட்டும் படாமல் தொட்டு, நுனி நாக்கில் வைத்து அதன் சுவை கொஞ்சம் கொஞ்சமாக பரவி மூளைக்கு உரைக்கும்போது,

எச்சில் எல்லாம் ஒன்று சேர்ந்து வாய்க்குள் நயாகரா அருவியை

உண்டு பண்ண,

சட்டென்று ஒரு வாய் சாதத்தை வாயில் வைத்து பின்னர் சாதத்தின் சுவையும், ஊறுகாயின் சுவையும் என்று மாறி மாறி வரும்போது அன்றைய உணவு இவ்வளவு சுவையா என்று தோன்றுமளவுக்கு இருக்கும் .

எங்கேனும் செல்லும்போது மட்டை ஊறுகாய் கிடைத்தால்,

நுனி விரலில் தொட்டு

நாக்கில் வைத்து பாருங்கள்.......

எச்சில் வடியும், ஆனந்தமாய் சாப்பிட்டு கண்களை மூடி அந்த குழந்தை பருவத்தை அனுபவியுங்கள்

(படித்ததில் பிடித்தது)

 


நன்றி இணையம்