மனைவி ஊருக்குப் போயிருந்தபோது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:28 AM | Best Blogger Tips

 


மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..

{ “தவிப்பு..” }

வருடத்திற்கு ஒரு முறை

இரண்டு வாரம்

தாய் வீடு போகிறாய்...

நீயும்

பிள்ளைகள் இல்லாமல்

பொலிவிழந்து களையிழந்து

காணப்படுகிறது வீடு...

காபி போட அடுப்பில்

பால் வைத்தால் பாதி

பொங்கி வழிந்து விடுகிறது..


வீட்டைப் பெருக்கிய

இரண்டு நாட்களில்

இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...

செலவிற்குப் பயந்து

சமைக்க ஆரம்பித்தால்

உப்பு போட மறந்து விடுகிறது..

இரு மடங்கு விலை வைத்தும்

சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை

தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...

முரட்டுத்தனமாய் அடித்து

கசக்கிப் பிழிந்து துவைத்தால்

கிழிந்து விடுகிறது துணி...

தண்ணீர்.. மோட்டார்.. டி வி

போட்டால் அணைக்காமல்

தூங்கி விடுகிறேன்...

கதவைப் பூட்டாமலேயே

சமயலறை எரிவாயுவை

அணைக்காமலேயே

வெளியில் கிளம்பி விடுகிறேன்..

தயிருக்கும் இட்லி மாவிற்கும்

வேறுபாடு தெரியவில்லை..

இப்படியாகத் தனிமையில்

தவித்துப் போனாலும்

நீ வந்தவுடன்

கூசாமல் பொய் சொல்கிறேன்...

“இன்னும் ஒரு வாரம்

இருந்து விட்டு வரலாமே...

நான் ஜாலியாக இருக்கிறேன்...”

என்று.....

ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை...!

உங்கள் பார்வைக்கு,,,,

அனைத்து குடும்பத்தலைவி களுக்கும் சமர்ப்பணம்

 

நன்றி இணையம்

தவறான திசையில் தேடாதீர்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips

 



சத்குருவின் குட்டிக் கதைகள்

தவறான திசையில் தேடாதீர்கள்!

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர். தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு, சில்லறைகளை வீசுவார்கள். ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, 'கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்?


என்னை ஒரு அரசனாகப் படைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?' என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.

காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென அவர் இறந்துவிட்டார். அவருடைய உடலை சுமந்து சென்று ஈமக்கிரியைகளைச் செய்ய அங்கிருந்த மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. அதனால் அவரது உடலை அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்து அங்கே ஒரு சவக்குழித் தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன், அங்கே மிகப்பெரிய ஒரு வைரப் புதையலைக் கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலேயே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ, அதையெல்லாம் அடைந்திருப்பார்.

ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குத் தேவையானதெல்லாமே உங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன.

 

நன்றி இணையம்

*மீண்ட (வி)மானம் - ஆர். நடராஜன்*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 



ஏர்இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்றது இந்தியாவிற்கு தலைகுனிவு என்று சொல்லியிருக்கிறார் ஒரு காங்கிரஸ் பிரமுகர். ஒரு வேளை சோனியாவிற்கோ இத்தாலிக்க்கோ விற்றிருந்தால் இந்தியா தலை நிமிர்ந்து இருக்கலாம். அது தேசபக்தியாகவும் கூட இருந்திருக்கலாம் காங்கிரஸ் பார்வையில். இப்படிச் சொல்லும் பலருக்கு சரித்திரம் தெரியாது பூகோளம் தெரியாது. அவர்களுக்காக இந்திய விமானத்துறையின் தந்தை ஜே.ஆர்.டி டாடா பற்றிய சில தகவல்கள்:

இந்தியாவின் விமான லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் ஜே.ஆர்.டி டாடா. இங்கிலாந்தில் ஒரு சிறிய ரக விமானத்தை வாங்கிய அவர் விமானத்தை ஓட்டிவந்தார். பறக்கும் போது அவருக்கு காய்ச்சல் கண்டதால் நேபிள்சில் தரையிறங்கினார். துறைமுகத்திற்கு அருகே இறங்கி விமானத்தின் இறக்கைகளை மடக்கி அந்த சிறு விமானத்தை தன் லக்கேஜாக கப்பலில் எடுத்து வந்தார். பம்பாய் துறைமுகத்தில் இறங்கியதும் இறக்கைகள் மடக்கப்பட்ட அந்த விமானம் மாட்டுவண்டி மூலம் இழுத்துவரப்பட்டது. விமான எரிபொருளாகிய பெட்ரோல் கூட பீப்பாய்களில் நிரப்பப்பட்டு மாட்டுவண்டிகளில்தான் விமான கூடத்திற்கு வந்தன. இதெல்லாம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்தது.

பின்னர் டாடா ஏர்இந்தியா நிறுவனத்தைத் தொடங்கினார் அப்போதைய முதலீடு ரூபாய் சுமார் 2லட்சம் அதாவது காலணாவிற்கு நான்கு இட்லி விற்ற காலம் அப்படியென்றால் முதலீட்டின் இன்றைய மதிப்பை கணகிட்டுக்கொள்ளுங்கள். டாடா கராச்சிக்கும் பம்பாய்க்கும் பிற இடங்களுக்கும் தபால் பையை சுமந்துவரும் விமானத்தை இயக்கினார். விமானியும் அவரே, தபால் பைகளை ஏற்றி இறக்கிவைக்கும் நபரும் அவரே. அப்போது விமானங்கள் மரப்பறவைகள், அலுமினியப் பறவைகள் அல்ல. தொழில் நுட்ப வசதிகள் மிக மிக குறைவு.

ஏர்இந்தியா நிறுவத்தைத் தொடங்கிய டாடா அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார். புதிய விமானங்களை வாங்கியபோது ஊழியர் நியமனம் நிர்வாகம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினார். கழிப்பறைகளை கூட கண்காணித்தார்.

தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஏர் இந்தியா அரசியல் புயலில் சிக்கிக்கொண்டது. அப்போதைய மத்திய விமானத்துறை மந்திரி ரஃபீ அகமத் கித்வாய் டாடாவுடன் சச்சரவிட்டார். டாடாவுக்காக படேல் பரிந்து பேசிய போது நேரு படேலை ஒதுக்கிவிட்டு கித்வாயை ஆதரித்தார். ஏர் இந்தியா நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிறகு சில காலம் சம்பளம் வாங்காத சேர்மனாக பணிபுரிந்தார் டாடா. அப்போதும் அவரது முழு கவனம் நிறுவனத்தின் மீது இருந்தது. பம்பாயில் இருந்து புறப்படும் ஏர்இந்தியா விமானம் ஜெனிவாவில் இறங்குகிறது என்றால் கடிகாரத்தைப் பார்க்காமலேயே காலை மணி 11 என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்திராகாந்திக்குப் பிறகு வந்த மொராஜி தேசாய் டாடாவை நீக்கிவிட்டு அரசாங்க அதிகாரிகளை நிர்வாகிகளாக்கினார். இந்திராகாந்தி மீண்டும் பதவிக்கு வந்த போது டாடாவை மறு நியமனம் செய்தார். ஆனால் பிறகு டாடாவின் கீழ் பணிபுரிந்த டாடா நிறுவன நிர்வாகியை சேர்மனாக்கினார். டாடா தலைமை பொறுப்பேற்றிருந்த போது லாபத்துடனும் புகழுடனும் இயங்கிய ஏர் இந்தியா அரசியல் தலையீட்டால் நிலை குலைந்தது. அரசு நிறுவனம் என்றால் யார் யாரோ சாப்பிடுவார்களே அப்படித்தான் பலர் சாப்பிட்டார்கள். நஷ்டம் நிறுவனத்திற்கு லாபம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்.

பல வருடங்களாகவே நஷ்டத்தில் இயங்கிவந்துள்ள ஏர் இந்தியா 18000 கோடி செலவில் டாடாக்களிடம் திரும்பியிருப்பது டாடாவுக்கு லாபம் என்று சொல்லமுடியாது. நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்தான் இருக்கின்றன. அவற்றை அரசாங்கம் டாடாவிடம் தரவில்லை. டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை இப்போது ஏற்றுக்கொண்டிருப்பது ‘சென்டிமென்டல் வேல்யு’.

ஒரு தாயிடம் இருந்த குழந்தையை யாரோ பிடுங்கிக்கொண்டு போய் பிச்சையெடுக்க வைத்து ஆரோக்கியம் இல்லாமல் வளர்த்த போது அது மீட்கப்பட்டு தாயிடம் வந்து சேர்ந்தால் அவள் எப்படி மகிழ்வாளோ அப்படி மகிழ்கிறது டாடா நிறுவனம். காயங்களை குணப்படுத்தி அந்த குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கான பண்பும், பரிவும், தொழில் முறை நீதிநெறியும் டாடா நிறுவனத்திற்கு உண்டு என்பது வரலாறு நிரூபித்துள்ள வியாபார தர்மம்.

*நன்றி துக்ளக்*

The writer Dr R Natarajan is my maternal cousin - Sundar

 


நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

 



நிலத் தகராறு,

பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.

நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,

உங்கள் நண்பர்களுக்குப் பரப்புங்கள்.

(Land Disputes)

1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது

பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.

நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018

சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018


W. P. No - 491/2012, dt - 4.6.2014

W. P. No - 16294/2012, dt - 4.4.2014

2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,

அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.

மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.

S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019

3. விஏஓக்கள் சட்டவிரோதமாக செய்யும் தவறுகள் குறித்து ஆய்வு செய்ய,

ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

தவறு செய்யும் விஏஓக்களை

பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 13916/2019, dt - 1.7.2019

4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை

வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.

உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.

W. P. No - 18489/2009, dt - 1.7.2011

5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.

பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.

S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்

6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.

பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.

S. A. No - 2060/2001, dt - 2.11.2012

S. A. No - 1715/1989, dt - 25.6.2002

W. P. No - 16294/2012, dt - 3.4.2014

7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.

நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு

பட்டா வழங்க வேண்டும்.

Madras High Court

W. P. No - 18754, 20304, 2613/2005

DT - 4.11.2013

A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)

The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)

8. பட்டா பெயர் மாற்றம் செய்ய

நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.

W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)

9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை

பணி நீக்கம் செய்ய வேண்டும்.

W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court

10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்

பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.

T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)

அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...

இந்தப் பதிவை யார் எழுதியது எனத் தெரியவில்லை.

இன்று காலையில் கண்ணில்பட்டது.

அவருக்கு நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை, ஒற்றை வரியில் தலைப்புச் செய்தியாகப் பதிவு செய்து வருகின்றேன்.

,மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துங்கள்.

 


நன்றி இணையம்

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் தனது 10 மாத கைக்குழந்தையுடன் 13 கீமி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 






தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என்று அரசியல் செய்த எதிர்கட்சியினர், கொரானா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பி, மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைக்கும் நடிகர்கள் மத்தியில், ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் தனது 10 மாத கைக்குழந்தையுடன் 13 கீமி பயணம் செய்து மக்களுக்கு தினமும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர் அனிதா

மக்கள் உயிர்காக்கும் மகத்தான பணிக்கு தலை வணங்குகிறோம்!

நன்றி இணையம்

 


“வரிசையில்”

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 AM | Best Blogger Tips

 


ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

 


நன்றி இணையம்