🍑 *வெறுமையாகிப் போனது வாழ்க்கை என்பதுதான் நிதர்சனமான உண்மை..!*

மணக்கால் அய்யம்பேட்டை | 6:22 PM | Best Blogger Tips


🍑 *வெறுமையாகிப் போனது வாழ்க்கை என்பதுதான் நிதர்சனமான உண்மை..!*....


🌻என்னதான் ஊரடங்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும், 


🌻நாம் ஒவ்வொருவரும், மற்றவரிடமிருந்து அன்னியப்படுத்தப் பட்டுவிட்டோம் என்பதே உண்மை..!


🌻நண்பர்களோடு குலவும் அந்த சுதந்திரம், இனிவரும் காலங்களில் தொடருமா, என்பதும் கேள்விக்குறியே..!


🌻உறவுகளின் சுபநிகழ்வு கொண்டாட்டங்கள் இனி முன்போல் சாத்தியமா என்பதும் ஐயமே..!


🌻ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்தவர்களின் பொருளாதார நிலையினைவிட, மன அழுத்தம் மிக பாரம். 


🌻என்றாவது ஒருநாள், வீட்டிலேயே அமர்ந்து, நினைத்ததையெல்லாம் திருப்தியாக சாப்பிட முடிகிறதா ?, என அன்றொருநாள் அலுத்துக் கொண்டிருந்த நாம், 


🌻இன்று வீட்டிலேயே இருந்தும், உணவின் பக்கம் மனம் செலுத்த இயலவில்லை என்பதும் நிதர்சனம். 


🌻நெருங்கிய உறவுகளின் உயிர் இழப்புகள் தந்த அழுத்தம் நீங்குவதற்குள், 


🌻அடுத்தடுத்து என ஆயிரம் அதிர்ச்சிகள் வரிசைகட்டி காத்திருக்கின்றன, எதிர்காலம் பற்றிய எண்ணத்தில். 


🌻பள்ளிக்குச் செல்லாமலே தேர்ச்சியடையும் மாணவர்கள் முகத்தில், மகிழ்ச்சியினை தேடவேண்டித்தான் உள்ளது. 


🌻வீட்டிற்குள், வார்த்தைகள் குறைந்துபோய், அலைபேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. 


🌻முகம் பார்த்து பேசுவதைக் கூட, முடிந்தவரை தவிர்த்து விடுகிறோம் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். 


🌻 *நான்கு சுவர்களுக்குள் நாற்பதுவித சிந்தனைகள்.*


🌻உண்பதும், உறங்குவதும் மட்டுமே வாழ்க்கை என்றாகி விடாது. 


🌻தினம் ஒரு போராட்டத்தினை, பிரச்சினைகளின் வடிவில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, 


🌻உடனிருந்த அந்த தெம்பும், உற்சாகமும், இன்று எது பிரச்சினை என்பதை யோசிப்பதிலேயே காணாமல் போய்விட்டன. 


🌻வீசும்போதுதான் காற்று அழகு. 

கொட்டும்போதுதான் அருவி அழகு. 


🌻பயணமோ, பணியோ, தேவையோ என ஏதாவது ஒன்றின் பொருட்டு இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான், மனித வாழ்க்கை அழகு. 


🌻ஒரு பெருந்தொற்று நோயால் முடக்கப் பட்டிருக்கிறோம், நாளை எப்படியும் நகர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில். 


🌻முதல் அலையில் முடிந்தவரை சமாளித்தோம். 


🌻இரண்டாம் அலையில், இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சந்தித்து விட்டோம். 


🌻மூன்றாம் அலையில் முழுமையாக முடங்கிப் போகாமல் இருப்பது, நமது கையில்தான் உள்ளது. 


🌻தளர்வுகள்தான் அறிவிக்கப் பட்டுள்ளதே தவிர, நோயாளிகளின் எண்ணிக்கைதான் குறைந்துள்ளதே தவிர, நோயின் தீவிரம் அல்ல. 


🌻கவனத்தோடு இருக்கச் சொல்வது, நாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. 


🌻நாம் படைக்கப்பட்டதன் காரணத்தினை, நமக்கான கடமைகளை, முழுமையாக முடிக்கவும்தான். 


🌻வெறுமையான, விரக்தியான பார்வையே, வாழ்வில் நிரந்தரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான்..!


🌻அவரவர் மனம் அறியும், 

அழுத்தத்தினையும், வெறுமையினையும்..!


🌻வாய்விட்டு சிரித்தது கடைசியாய் எப்போது என்றொரு கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள், போதும்..!



நன்றி இணையம்

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா

மணக்கால் அய்யம்பேட்டை | 9:23 PM | Best Blogger Tips

 


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


*தர்ம நெறி *


*அசைவம் சாப்பிடலாமா?*

*ஓஷோ அவர்களின் விளக்கம்*

 

இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           


இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .


*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*


உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..


உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.


உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.


*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு


*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு


*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*


*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.


*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.


*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.


*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*

------------

1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..


அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*


2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*


மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*


3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.


4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?


அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.


5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.


அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.


அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.


*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*

------------------ --------------

ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.


இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.


6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...


பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...


7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.


புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.


ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.


8. *உடலால் மனித பிறவி சைவம்.*

*உயிரால் மனித பிறவி சைவம்.*

குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.


9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*


*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*


என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*. 🙏 மங்கள குரு சேவா திருமுருகு. மோ.கோ🙏💐🏹

நன்றி இணையம்



வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips

 



கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*


வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*


இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.


*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*


*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*


*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*


*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*


*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.


*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*


*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*



*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*


*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*


*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*


*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*


*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*

*“நீ பிறந்த போது, அழுதாய்...*

*உலகம் சிரித்தது..*.

*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*


*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.


*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*


*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*


*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 

*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*


*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*

*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*


*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 

*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*


*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*


*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*


*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.


*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*


*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*


*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*


*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.


*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*


*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.


*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*


*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*


*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*


*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*

*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"


*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*

*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!


*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.


*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.



நன்றி இணையம்

"மன் கீ பாத்" உரை.!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 PM | Best Blogger Tips

 


"மன் கீ பாத்" உரை.!


நான் இந்திய பிரதமர் நரேந்திர

மோடி நான் பிரதமராக பதவி 

ஏற்று கிட்டத்தட்ட ஏழு வருடங்கள்

ஆகின்றன..!!


நான் பதவிக்கு வந்தபோது

'அது ஒரு முள் சிம்மாசனம்'


கடந்த அரசாங்கம் பத்து

ஆண்டுகளில் ஊழல் 

மோசடிகள் செய்ததோடு... 


பெரும் கடன் சுமையை 

விட்டுச் சென்றது..!


இதன் விளைவாக ஒவ்வொரு

பொதுத்துறை நிறுவனமும்

நஷ்டத்தில் நலிந்து இருந்தன.  


வெளிநாடுகளில்- எரிபொருள்

இறக்குமதி கடன்கள் மலை 

போல் இருந்தன.


ஈரானுக்கு  ரூ 48000 கோடிகள்.


யூ.ஏ.இ க்கு ரூ 40000 கோடிகள். 


தேசிய எரிபொருள் கம்பெனி

களுக்கு ரூ 1,33,000 கோடிகள். 


விமான போக்குவரத்து

கம்பெனிகளுக்கு...

ரூ 58000 கோடிகள். 


ரெயில்வே கம்பெனி

களுக்கு ரூ 22000 கோடிகள் 


BSNLக்கு ரூ 15000 கோடி. 


ராணுவ வீரர்களுக்கு 

போதுமான ஆயுதங்கள், 

புல்லட் புரூப் ஜாக்கெட்கள்

கிடையாது. 


போர்க்கால அவசரத்தில்

உபயோகிக்க குறைந்த பட்சம்...


நான்கு நாட்களுக்கு 

தேவையான ஆயுதங்கள் 

இல்லை. 


அது மட்டுமல்ல, கண்காணிப்பு

அமைப்பு தோல்வியடைந்திருந்தது, 


குண்டுகள் எங்கு? எப்போது ?

வெடிக்கும் என்று தெரியாதநிலை.


இத்தகைய சூழ்நிலைகளில் 

நான் பீடத்தில் ஏறினேன்.


பின்னர் இந்த அமைப்புகளை 

சரி செய்வது எனது கடமை என்று

உணர்ந்தேன் ...


இந்திய மக்களின் நல்லகாலம்

அதிர்ஷ்டவசமாக, சர்வதேச

சந்தையில் எண்ணெய் விலை

குறைந்தது....


ஆனால்,  அந்த குறைப்பு உங்களுக்கு

முழுமையாக பயனளிக்கவில்லை. 


பாதி வரி அரசாங்கத்தால்

எடுக்கப்பட்டது.


உங்களில் எத்தனையோ 

பேர் இதைப் பற்றி என்னிடம்

கோபப்படுகிறார்கள் .. 


எனக்குத் தெரியும்.


அக்கால அரசாங்கம் செய்த

தவறுகள் இப்போது 'எங்களுக்கு' 

ஒரு சாபமாகிவிட்டன.


அன்று எரிபொருளை 

வெளிநாட்டில் $120க்கு வாங்கி,


ஒரு லிட்டர் பெட்ரோல் 

ரூ 85க்கு விற்றனர்..


இது எப்படி சாத்தியம் ??


அரசாங்கத்திற்கு எதிர்ப்பு

இருக்கக்கூடாது என்பதற்காக ... 

எண்ணெயை கடனாக 

வாங்கி குவித்தனர்.. 


விலைகளை உயர்த்தாமல்

நஷ்டத்தில் விற்கப்பட்டது.


எனவே இதன்மூலமாக 

2,50,000 கோடி மற்ற நாடுகளில்

மிதமிஞ்சிய கடன் வாங்கப்பட்டது .. 


இதன் வட்டி மட்டுமே 

ஆண்டுக்கு ரூ 25000 ஆயிரம்

கோடிகள்  ...


நாடு இப்படித்தான் 

கடன்களில் சிக்கி தத்தளித்து. 


கடன் செலுத்தப்பட்டால் தான்

மேற்கொண்டு எரிபொருள்

வழங்கப்படும் என்றன 

வளைகுடா நாடுகள்...


அதனால்தான் வட்டி உட்பட 

ரூ 2,50,000 கோடி கடனையும்

அடைத்தோம்.


ரெயில்வேயின் நஷ்டத்தை

ஈடு செய்து சரி செய்தோம். 


முந்தைய அரசாங்கத்தால்

தொடங்கப்பட்ட திட்டங்களையும்

நிறைவேற்றினோம் ...


புல்லட் ரயில்... 

அதிவேக ரயில்கள் ...


மொத்த மின்மய

மாக்கலை முடுக்கி விட்டோம்.


நாட்டின் 18500 கிராமங்களுக்கு

மின்சாரம் வழங்கியுள்ளோம்,


நாங்கள்  8 கோடி இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்,


சுமார் 40,000 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளது.


1,50,000 கோடி ரூபாயுடன்

இளைஞர்களுக்கு முத்ரா 

கடன்களை வழங்கியுள்ளோம்.


1,50,000 கோடிரூபாயில் 50 கோடி

மக்களுக்காக ஆயுஷ்மான் இந்தியா

திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.


நாங்கள் நமது ராணுவ 

வீரர்களுக்கு அதிநவீன

ஆயுதங்களையும், பாதுகாப்பு

கவசங்களையும் வழங்கியுள்ளோம்.


இந்த பணம் எல்லாம் 

எங்கிருந்து வந்தது.??


இது பாரத பெருங்குடி 

மக்களாகிய உங்களின் தியாகம்!


இதில் நீங்களே பங்குதாரர்கள்...

உங்கள் தியாகம் மூலமே 

இவை சாத்தியமானது.


கடைசி வார்த்தை...


உங்களின் பெரிய குடும்பம் கடன் வலையில் சிக்கிக் கொண்டால்,


அதிர்ஷ்டமாக வந்த பணத்தை

நீங்கள் என்ன செய்வீர்கள்??


தாராளமாக செலவிடுவீர்களா?


இல்லை?


கடன்களைச் செலுத்துவீர்களா??


தாராளமாக செலவு 

செய்தால், அந்த குடும்பம்..


அவர்களின் எதிர்காலம்

என்னவாகும்?  ..


கடன் கொடுத்தவர்கள் 

சும்மா இருப்பார்களா ?


எதிர்க்கட்சிகள் செய்யும் 

ஏமாற்று வித்தையை 

நம்ப வேண்டாம்....


தேசபக்தர்களாக 

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு

பங்களிப்பு செய்யுங்கள்.


எதேனும்  தேர்தல் வரும்

போதெல்லாம், மக்களிடம் 

போய் கோயபல்ஸ் போன்று...  


பொய் பிரச்சாரம் செய்வதே

எதிர்கட்சிகளின் வாடிக்கை.  


ஒரு முறை சிந்தியுங்கள் !!


உங்களுக்காக...உங்கள் எதிர்கால

சந்ததியினர் நலனுக்காக, 

நாட்டின் முன்னேற்றத்திற்காக.. 


சற்று யோசியுங்கள். 


எதிர் வரும் காலங்களில் நம் பாரதம்

தன்னிறைவு பெற்று, தற்சார்புடன்

உலகிற்கு வழிகாட்டும்!!!  


இதை ஒவ்வொரு 

இந்தியருடனும் தயவு 

செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்களுடைய

(நரேந்திர மோடி.)

    

#ஜெய்_ஹிந்த்🚩

#பாரத்_மாதாகி_ஜெய்.

 நன்றி இணையம்

PERSONAL. SPACE. ம். PRIVACY யும் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:55 PM | Best Blogger Tips

PERSONAL. SPACE. ம்.    

         PRIVACY  யும் ...=================

  



பாஸ்கர் வெளியிலிருந்து. வந்து.  வீட்டினுள்  நுழைந்து கொண்டு இருந்தான்  .   இந்த. US. குளிருக்கு. ஒரு.   காபி.  குடிக்கலாம். என் நினைத்தான் .  ஆனால்  மாலா  யாரிடமோ ஃபோனில் கோபமாக  பேசிக் கொண்டு இருந்தாள் .

*வாசலில் இருந்து கிச்சன் -ஐப் பார்த்தவன் அம்மாவிடம் சைகையில் என்ன என்று கேட்க  , அம்மா நான் இல்லை என்று சைகையிலேயே சொன்னாள் ...*


         அப்பாடா என்று இருந்தது பாஸ்கருக்கு... மாமியார் மருமகள் பிரச்சினை இல்லை. வேறு என்னவாக இருக்குமென்று யோசித்த. அவன் ,.  SOFA. வில்.  அமரவும் ,    மாலா உள்ளே வந்து மொபைல் ஐ SOFA மேல் விட்டு எறியவும் சரியாக இருந்தது. புருவத்தை உயர்த்திப்  பார்த்த அவனை ,.  ஏன் வாயைத் திறந்து என்னன்னு கேட்க மாட்டீங்களா ன்னு சாடினாள்...


* எதாவது முக்கியமா இருந்தா நீயே சொல்லுவாயே அதான் வெயிட்டிங் என்றான். அவளுடைய  கண் கிச்சனுக்கு  தாவியது...


 ஓ... அம்மா இருக்கா , அதனால சொல்ல யோசிக்கிறாள் போல , என்று நினைத்து அவன்  ,  அம்மா நீ போய் படுத்துக்கோ. போம்மா ...  ஸ்ரீநாத் தூங்கிண்டு இருக்கான். பாரு ... என்றதும் அம்மா அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தாள். 


*🌹🌹 சரி அம்மா போயிட்டா சொல்லு என்ன பிரச்சனை...*


*🌹🌹 எப்படி சொல்வது எனக்கு சொல்றதுக்கு வெக்கமா  மட்டும் இல்லை கேவலமாகவும்   இருக்குனு சொல்ல...*


*🌹🌹 அப்படி யாருட்ட  பேசின...*


*🌹🌹 எங்க அம்மா விடம் என்று சொல்ல ... , அவன் நிமிர்ந்தான் ...*


*🌹🌹 இதோ பார் வாய்க்கு வந்தது பேசாதே என்ன சொன்னாங்க . கரெக்ட்டா சொல்லு ...*


*🌹🌹 உங்க அம்மா , ஊருக்கு போகனும் அதனால எங்க அம்மா அப்பாவை வர சொல்லி ஃபோன் பண்ணினேன்...*


*🌹🌹 சரி அதுக்கு நீ இந்த அளவுக்கு பீல் பண்ற மாதிரி என்ன சொன்னாங்க அதை முதல்ல சொல்லு...*


*🌹🌹 எங்க அம்மாக்கு எத்தனை வயசு தெரியுமா உங்களுக்கு...*


*ஒரு 68 இருக்கும்...*


* அப்பாவுக்கு...*


 74 இருக்கும்...*


* சரி விஷயத்துக்கு வா...*


* எனக்கு அசிங்கமா இருக்கு சொல்றதுக்கே....*

*அம்மாக்கும் அப்பாக்கும் இனிமே கொஞ்சம் PRIVACY வேணுமாம் PERSONAL SPACE வேணுமாம்...*


*🌹🌹 பேரன் பேத்தியுடன் சந்தோஷமா  இருக்கனும் என்று யோசிக்கிற இந்த வயசான  காலத்தில PERSONAL SPACE ம் PRIVACY ம்  வேணும்னு அவங்க சொல்லறதை. , உங்ககிட்ட சொல்லறதுக்கே எனக்கு வெக்கமாவும் அசிங்கமாவும் இருக்கு ...*


*🌹🌹 சரி OK விடு . நான் NEXT WEEK உங்க அம்மாட்ட பேசுறேன்   அதுவரை அமைதியாக இரு என்று சொன்ன அவன் தன் IN LAWS பற்றி யோசிக்க ஆரம்பித்தான் . அருமையான மனிதர்கள் என்னாச்சு??.... அடுத்தவாரம் பேசும் வரை வெயிட் பண்ணலாம் என்று முடிவு செய்தான்...*


*🌹🌹 அன்று SUNDAY மாலா வை அழைத்த அவன் இதோ பார் உங்க அம்மா அப்பாவுடன் பேசப் போறேன்.*

*நான் ஃபோன் ஐ ஸ்பீக்கர்ல போடறேன்... ஆனால் ஒரு கண்டிஷன்  ஃபோன் SWITCH OFF செய்யும் வரை நீ எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு பாஸ்கர்   ,   மாலாவின்  அம்மாக்கு. Call.  செய்தான்...*

 


*🌹🌹 ஹலோ...*


*🌹🌹 ஹலோ மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க ... குழந்தை எப்படி இருக்கான் . மாலா எப்படி இருக்கா..மாலா என் மேல் கோபமா இருக்காளா மாப்பிள்ளை??  ...*


*🌹🌹 இல்லம்மா  என்ன விஷயம்   ஏன் அவளுக்கு கோபம்...*


*🌹🌹 இல்லை மாப்பிள்ளை என்னையும் அப்பாவையும் USA கிளம்பி வரச் சொன்னா  , நான் இப்போ வரலேன்னு சொல்லி காரணத்தை சொன்னேன். , கோபத்துல  ஃபோனை  கட் பண்ணீட்டு போயிட்டா...*


*🌹🌹  நீங்க என் மாப்பிள்ளைங்கறதுக்கு மேலாக என்  பிள்ளை மாதிரி அதுனால என் மனசுல உள்ளத உங்ககிட்டே சொல்லறேன் , தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க...*


*🌹🌹 ஏன் பெ‌ரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்கம்மா...சொல்லுங்க...*


*🌹🌹 நான் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு வயசு 21.  உங்க. மாமாவுக்கு.  இரண்டு தங்கைகள்,  மூளை வளர்ச்சி இல்லாத அவரைவிட   இரண்டு வயசு குறைவான  தம்பி... , மாமியார் மாமனார்....*


*🌹🌹 நானு‌ம் பாங்க்-ல வேலை பார்த்துண்டு இருந்தேன்  இரண்டு நாத்தனார் கல்யாணம் அவர்கள் இருவருக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள்  பிரசவம்...*


*🌹🌹 அதைவிட மூளை வளர்ச்சி இல்லாத மச்சினன் அவனுக்கு தேவையானது அனைத்தும் நான் தான் செய்ய வேன்டும் என்று பிடிவாதம் பிடிப்பவன்...*


*🌹🌹 மாமியார் மாமனார் இருவரும் வயசு ஆக ஆக அவர்களுக்கு எல்லாமே கையில் கொண்டு குடுக்க வே‌ண்டு‌ம்...*


*🌹🌹 இதற்கிடையில் எனக்கு இரண்டு பிரசவம்  , குழந்தைகள் வளர்ப்பு  பெரியவள் மாலாவின் கல்யாணம் சின்னவளின் படிப்பு. , அவளின் கல்யாணம் மாலாவுக்கு பிரசவம் சின்னவளுக்கு பிரசவம் ,  மாமியார் மாமனார் மச்சினன் இறப்பு னு....அ‌த்துட‌ன் இ‌ந்த விஷயங்கள் எல்லாம் செய்து முடிப்பதில் ஏற்பட்ட பணப் பிரச்சினை வேற....*


*🌹🌹 எ‌ன்னுடைய 47 வருட கல்யாண வாழ்க்கை போன ஆறு மாத‌ம் முன்னால் வரை இப்படிதான் நட‌ந்து முடி‌ந்தது...*


*🌹🌹 எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவரோ அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நானோ  யோசிக்காமல் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்ததை எங்களுக்கு பிடித்ததாக ஏற்றுக் கொண்டு இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறோம்...*


*🌹🌹 நானு‌ம் , என் கணவருக்கு என்ன பிடிக்கும் என்ன விரும்பி சாப்பிடுவார் என்று எதுவுமே யோசிக்காமல் மற்ற எல்லோரையும் நினைத்துத்தா‌ன் எல்லாம்  செய்வேன்...*


* இந்த ஆறு மாதங்களாகத்தான் நாங்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்தோம்...*


*🌹🌹 இப்போது பண‌ம் என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை . இருவரின் பென்ஷனால்.  தேவைக்கு அதிகமாகவே இருக்கு...*


*🌹🌹 இ‌ந்த  ஆறு மாதத்தில் தா‌ன் நாங்கள் தனிக்குடித்தனமாக இருக்கோம்...*


*🌹🌹 காலையில் எழுந்திருக்கும் அப்பா பால் வாங்கி வந்தால் நான் அவரு‌க்கு பிடித்த மாதி‌ரி காப்பி போட்டு அருகில் இருந்து ஆத்தி குடுப்பேன்...நா‌ன் வீடு பெருக்கினால் அப்பா துடைப்பார்...நா‌ன் சமைக்க அவர் காய் நறுக்கி குடுப்பார்...*


*🌹🌹 ம‌திய‌ம்  LUNCH சுட சுட இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பழைய கதையெல்லாம் ரசித்து பேசி சாப்பிடுவது வழக்கமானது...*


*🌹🌹 ஈவினிங் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பிரசாதம்-லாம் சாப்பிட்டு கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து பேசி முடித்து ஆத்துக்கு வரும்போது 8 ம‌ணி ஆகிவிடும்...*


*🌹🌹 இரவில் ஒருவர் கையை ஒருவர் பிடி‌த்து‌க் கொண்டு தூங்கறோம்....*


*🌹🌹 ஏன்னா பயம் . நாளை விடியலில் யார் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை...*


 *🌹🌹 இனி எத்தனை வருஷம்  இருவரு‌ம் சேர்ந்து வாழ , விடப் போறார் அந்த கடவுள் எ‌ன்று தெரியவில்லை...*


*🌹🌹 அ‌தி‌ல் ஓரு நா‌ள் கூட இந்த சந்தோஷங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது எ‌ன்று  நினைக்கிறோம் ...*


*🌹🌹 இருபதுகளில்  நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய இ‌ந்த ஆத்மார்த்த வாழ்க்கையைத்தான் நா‌ன் அவளிடம் PRIVACY, PERSONAL SPACE என்று சொன்னேன்...*


*🌹🌹 அவள் அதை வேறு விதமாக , அவள் வயசுக்கேற்ப கற்பனை செய்து கொண்டாள்...*


*🌹🌹 சத்தியமாக மாப்பிள்ளை இப்பதான்  நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பு‌ரி‌ந்து வாழும்  வாழ்க்கையையே . வாழ ஆரம்பித்து இருக்கிறோம் .  ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்கோம்...*


*🌹🌹 இது தப்பா மாப்பிள்ளை...*


*🌹🌹 அய்யோ  நிச்சயமா தப்பு இல்லேம்மா. WISH YOU BOTH A  HAPPY MARRIED LIFE மா....* 


*🌹🌹 மாப்பிள்ளை ஃபோன் வச்சிடாதீங்க... உ‌ங்களு‌க்கு இப்போ நாங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றால்  சொல்லுங்கள். , நிச்சயமாக கிளம்பி வருகிறோம்...மாலாவிடம் சொல்லுங்கள் , என்று சொல்லவும்...*


*🌹🌹 அம்மா எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு கிட்ட பேசி நான் புரிய வைக்கிறேன்  பை மா என்று சொல்லி ஃபோன் வைத்தான் பாஸ்கர் ...*


*🌹🌹 மாலாவின் கண்களில் இரு‌ந்து கண்ணீர் வழிந்தது...*


*🌹🌹 நான் தப்பு பண்ணி விட்டேன் கல்யாணம் பண்ணி  6 வருஷம் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்...*


*🌹🌹 நீங்கள் அந்த  6 வருஷத்தில் எத்தனை COUNTRY என்னை கூப்பிட்டு போனீர்கள் எத்தனை சந்தோஷமாக இருந்தோம்...*


*🌹🌹 பாவம் அம்மா , அப்பா . அவர்கள் என் திருமணத்துக்கு முன்  எங்குமே போனது இல்லை.  இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்  கூட நான் பார்த்தது கிடையாது .அம்மா அவளுக்காக எதுவுமே செய்து கொள்ள வில்லை .எங்களிடமும் எதுவு‌ம் எதிர்பார்த்ததும் இல்லை...*


*🌹🌹 அவளிடம் தாய்மையை மட்டுமே எதிர்பார்த்த நா‌ன் அவளுக்குள்  ஓரு பெண்மை இத்தனை வருடமாக ஏக்கத்தில் இருந்ததை புரிந்து கொள்ள வில்லை...*


*🌹🌹 கணவ‌ன் மனைவி PRIVACY PERSONAL SPACE எல்லாவற்றையும் மூன்றாம் தரமாக கற்பனை செய்த என்னை , என்னாலேயே மன்னிக்க முடியல...*


*🌹🌹  PLEASE அம்மாக்கு ஃபோன் பண்ணுங்க என்றாள்...*


*🌹🌹 ஃபோன் எடுத்த அவள்  ,  அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான்  உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேன். ரொம்ப சாரி  அம்மா  நீயும் அப்பாவும் சந்தோஷமாக  இருக்கணும்...*


*🌹🌹 ஆனா உனக்கு எப்பவாவது , உங்க வாழ்க்கைல BORE அடிச்சதுன்னா ஓரு ஃபோன் பண்ணுங்க டிக்கெட் அனுப்பி விடறேன் . இங்க வாங்க  உங்க பேரனுடன் சந்தோஷமா  இருங்க...*


*🌹🌹 உங்களுக்கு NO MORE DISTURBANCE FROM OUR SIDE. MARRIED LIFE ல PERSONAL SPACE  PRIVACY ங்கரதுக்கு உ‌ண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டேன்...*


*🌹🌹 HAPPY HAPPY MARRIED LIFE மா என்று PHONE வைத்த அவள் ஏங்க உங்க அம்மாக்கு டிக்கெட் எடுங்க மாமாவை வி‌ட்டு  ஐந்து மாசமா அவங்களை பிரிச்சு இங்க வச்சு இருக்கோம் எனவும்...*


*🌹🌹 என். அம்மா  ஒடி வ‌ந்து. மாலா. வின்  கை பிடித்து தாங்க்ஸ் சொன்னாள்...*


 *🌹🌹 மாமியார் கண்களிலும் அ‌ந்த  ஏக்கத்தை பார்த்தாள் மாலா . இ‌னி த‌ங்க‌ள் சுயநலத்துக்காக பெரியவர்கள் யாரையும் பிரிப்பதும் இல்லை... அவ‌ர்க‌ள் தனிமைக்கு இடைஞ்சல் குடுக்கப்  போவதுமில்லை  எ‌ன்று முடிவு செ‌ய்து கொண்டாள்...*.                    ஆம். ,.  இனி.    PERSONAL  SPACE .....           PRIVACY. என்னும். வார்த்தைகள்  அவர்களுக்கு. வேறு. அர்த்தம் ....   இவர்களுக்கு. வேறு. அர்த்தம் .....

              ********

அந்த வயதாகும் வரை..... 🙏




நன்றி இணையம்

🥸பச்சோந்திகளும்🌹 மனிதர்களும்😁

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

  இன்றைய சிந்தனை.



பச்சோந்திகள் நிறம் மாறும் ஆனால் குணம் மாறாது.....

ஆனால்....

மனிதர்கள் நிறம்  மாறாது..,..

குணம் மாறுவார்கள்....!!!!!!


நட்பு என்பது கப் ஐஸ் மாதிரி....

எவ்வளவு துன்பப்பட்டாலும் கப்பை விட்டுப் போகாது......

உறவு என்பது குச்சி ஐஸ் மாதிரி....

நமக்குக்  கஷ்டம் (துன்பம்) என்று தெரிந்தாலே நம்மை விட்டுப் போய் விடுவார்கள்....!!!!!


எண்ண(ம்)க் கிணற்றை அவ்வப்போது தூர்வாருங்கள்....

வாழ்வின் வளமும் மனதின் நலமும் ஊற்றெடுக்கட்டும்.....!!!


ஒருவர் அழுகையில் ஏன் அழுகிறார் என்று தெரியாமல் ஆறுதல் சொல்லக்கூடாது......

ஒருவரின் கோபத்தில் உள்ள நியாயம் தெரியாமல் கோபம் தவறு எனச் சொல்லக்கூடாது....!!!!!


வாய்ப்புகளை, தூண்டில் போட்டுத் தேடாதீர்கள்.....

வலைகளை வீசுங்கள்......!!!!!


உன் சிந்தனைகள் உனக்குச் சொந்தமானவை.....

உன் சொற்கள் உனக்குச் சொந்தமாய் இருப்பதில்லை....!!!!!


அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.....

வாழ்க்கை என்ற காலக் கடிகாரத்தில் நிரந்தரமில்லை....!!!!!


*முன்னேற்றம்* என்பது இன்றைய *செயலாக்கம்*.

நாளைய உறுதி நிலை.....!!!!!


தோற்று விடுவோமோ என்கிற பயமே.....

உன்னைத் தோற்கடித்து விடுமே....!!!!


எலிகள் எந்தக் காலத்திலும் உணவின்றி செத்தது இல்லை....

பூனைகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.....!!!!


அடுத்தவன் வளர்ச்சி கண்டு ஏன் ஆதங்கப்படுகிறாய்....

உன் வளர்ச்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே?....!!!!!


ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.....

ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ......

நாம் வெற்றி பெற்று விடலாம்....!!!!!


யாருக்காக சிரித்தாயோ அவரை ஒரு வேளை மறந்து விடலாம்.....

ஆனால் யாருக்காக அழுதாயோ அவரை ஒரு நாளும் உன்னால் மறக்க முடியாது....!!!!!


உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது....!!!!!

மற்றவரை அறிந்தவன் புத்திசாலி.....

தன்னைத்தானே அறிந்தவன் ஞானி.....!!!!!


காரணத்தோடு யாரையும் நேசிக்காதே.....

காரணமின்றி யாரையும் வெறுக்காதே.....

இரண்டுமே உன்னைப் காயப்படுத்தும்.....!!!!!


இனிய நற்காலை வணக்கம் 🙏.

வாழ்க வளமுடன்..



நன்றி இணையம்