இன்றைய சிந்தனை.
பச்சோந்திகள் நிறம் மாறும் ஆனால் குணம் மாறாது.....
ஆனால்....
மனிதர்கள் நிறம் மாறாது..,..
குணம் மாறுவார்கள்....!!!!!!
நட்பு என்பது கப் ஐஸ் மாதிரி....
எவ்வளவு துன்பப்பட்டாலும் கப்பை விட்டுப் போகாது......
உறவு என்பது குச்சி ஐஸ் மாதிரி....
நமக்குக் கஷ்டம் (துன்பம்) என்று தெரிந்தாலே நம்மை விட்டுப் போய் விடுவார்கள்....!!!!!
எண்ண(ம்)க் கிணற்றை அவ்வப்போது தூர்வாருங்கள்....
வாழ்வின் வளமும் மனதின் நலமும் ஊற்றெடுக்கட்டும்.....!!!
ஒருவர் அழுகையில் ஏன் அழுகிறார் என்று தெரியாமல் ஆறுதல் சொல்லக்கூடாது......
ஒருவரின் கோபத்தில் உள்ள நியாயம் தெரியாமல் கோபம் தவறு எனச் சொல்லக்கூடாது....!!!!!
வாய்ப்புகளை, தூண்டில் போட்டுத் தேடாதீர்கள்.....
வலைகளை வீசுங்கள்......!!!!!
உன் சிந்தனைகள் உனக்குச் சொந்தமானவை.....
உன் சொற்கள் உனக்குச் சொந்தமாய் இருப்பதில்லை....!!!!!
அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.....
வாழ்க்கை என்ற காலக் கடிகாரத்தில் நிரந்தரமில்லை....!!!!!
*முன்னேற்றம்* என்பது இன்றைய *செயலாக்கம்*.
நாளைய உறுதி நிலை.....!!!!!
தோற்று விடுவோமோ என்கிற பயமே.....
உன்னைத் தோற்கடித்து விடுமே....!!!!
எலிகள் எந்தக் காலத்திலும் உணவின்றி செத்தது இல்லை....
பூனைகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.....!!!!
அடுத்தவன் வளர்ச்சி கண்டு ஏன் ஆதங்கப்படுகிறாய்....
உன் வளர்ச்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையே?....!!!!!
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.....
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ......
நாம் வெற்றி பெற்று விடலாம்....!!!!!
யாருக்காக சிரித்தாயோ அவரை ஒரு வேளை மறந்து விடலாம்.....
ஆனால் யாருக்காக அழுதாயோ அவரை ஒரு நாளும் உன்னால் மறக்க முடியாது....!!!!!
உங்களைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு அமைதியைத் தர முடியாது....!!!!!
மற்றவரை அறிந்தவன் புத்திசாலி.....
தன்னைத்தானே அறிந்தவன் ஞானி.....!!!!!
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே.....
காரணமின்றி யாரையும் வெறுக்காதே.....
இரண்டுமே உன்னைப் காயப்படுத்தும்.....!!!!!
இனிய நற்காலை வணக்கம் 🙏.
வாழ்க வளமுடன்..
நன்றி இணையம்