PERSONAL. SPACE. ம்.
PRIVACY யும் ...=================
பாஸ்கர் வெளியிலிருந்து. வந்து. வீட்டினுள் நுழைந்து கொண்டு இருந்தான் . இந்த. US. குளிருக்கு. ஒரு. காபி. குடிக்கலாம். என் நினைத்தான் . ஆனால் மாலா யாரிடமோ ஃபோனில் கோபமாக பேசிக் கொண்டு இருந்தாள் .
*வாசலில் இருந்து கிச்சன் -ஐப் பார்த்தவன் அம்மாவிடம் சைகையில் என்ன என்று கேட்க , அம்மா நான் இல்லை என்று சைகையிலேயே சொன்னாள் ...*
அப்பாடா என்று இருந்தது பாஸ்கருக்கு... மாமியார் மருமகள் பிரச்சினை இல்லை. வேறு என்னவாக இருக்குமென்று யோசித்த. அவன் ,. SOFA. வில். அமரவும் , மாலா உள்ளே வந்து மொபைல் ஐ SOFA மேல் விட்டு எறியவும் சரியாக இருந்தது. புருவத்தை உயர்த்திப் பார்த்த அவனை ,. ஏன் வாயைத் திறந்து என்னன்னு கேட்க மாட்டீங்களா ன்னு சாடினாள்...
* எதாவது முக்கியமா இருந்தா நீயே சொல்லுவாயே அதான் வெயிட்டிங் என்றான். அவளுடைய கண் கிச்சனுக்கு தாவியது...
ஓ... அம்மா இருக்கா , அதனால சொல்ல யோசிக்கிறாள் போல , என்று நினைத்து அவன் , அம்மா நீ போய் படுத்துக்கோ. போம்மா ... ஸ்ரீநாத் தூங்கிண்டு இருக்கான். பாரு ... என்றதும் அம்மா அவனைப் பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தாள்.
*🌹🌹 சரி அம்மா போயிட்டா சொல்லு என்ன பிரச்சனை...*
*🌹🌹 எப்படி சொல்வது எனக்கு சொல்றதுக்கு வெக்கமா மட்டும் இல்லை கேவலமாகவும் இருக்குனு சொல்ல...*
*🌹🌹 அப்படி யாருட்ட பேசின...*
*🌹🌹 எங்க அம்மா விடம் என்று சொல்ல ... , அவன் நிமிர்ந்தான் ...*
*🌹🌹 இதோ பார் வாய்க்கு வந்தது பேசாதே என்ன சொன்னாங்க . கரெக்ட்டா சொல்லு ...*
*🌹🌹 உங்க அம்மா , ஊருக்கு போகனும் அதனால எங்க அம்மா அப்பாவை வர சொல்லி ஃபோன் பண்ணினேன்...*
*🌹🌹 சரி அதுக்கு நீ இந்த அளவுக்கு பீல் பண்ற மாதிரி என்ன சொன்னாங்க அதை முதல்ல சொல்லு...*
*🌹🌹 எங்க அம்மாக்கு எத்தனை வயசு தெரியுமா உங்களுக்கு...*
*ஒரு 68 இருக்கும்...*
* அப்பாவுக்கு...*
74 இருக்கும்...*
* சரி விஷயத்துக்கு வா...*
* எனக்கு அசிங்கமா இருக்கு சொல்றதுக்கே....*
*அம்மாக்கும் அப்பாக்கும் இனிமே கொஞ்சம் PRIVACY வேணுமாம் PERSONAL SPACE வேணுமாம்...*
*🌹🌹 பேரன் பேத்தியுடன் சந்தோஷமா இருக்கனும் என்று யோசிக்கிற இந்த வயசான காலத்தில PERSONAL SPACE ம் PRIVACY ம் வேணும்னு அவங்க சொல்லறதை. , உங்ககிட்ட சொல்லறதுக்கே எனக்கு வெக்கமாவும் அசிங்கமாவும் இருக்கு ...*
*🌹🌹 சரி OK விடு . நான் NEXT WEEK உங்க அம்மாட்ட பேசுறேன் அதுவரை அமைதியாக இரு என்று சொன்ன அவன் தன் IN LAWS பற்றி யோசிக்க ஆரம்பித்தான் . அருமையான மனிதர்கள் என்னாச்சு??.... அடுத்தவாரம் பேசும் வரை வெயிட் பண்ணலாம் என்று முடிவு செய்தான்...*
*🌹🌹 அன்று SUNDAY மாலா வை அழைத்த அவன் இதோ பார் உங்க அம்மா அப்பாவுடன் பேசப் போறேன்.*
*நான் ஃபோன் ஐ ஸ்பீக்கர்ல போடறேன்... ஆனால் ஒரு கண்டிஷன் ஃபோன் SWITCH OFF செய்யும் வரை நீ எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு பாஸ்கர் , மாலாவின் அம்மாக்கு. Call. செய்தான்...*
*🌹🌹 ஹலோ...*
*🌹🌹 ஹலோ மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க ... குழந்தை எப்படி இருக்கான் . மாலா எப்படி இருக்கா..மாலா என் மேல் கோபமா இருக்காளா மாப்பிள்ளை?? ...*
*🌹🌹 இல்லம்மா என்ன விஷயம் ஏன் அவளுக்கு கோபம்...*
*🌹🌹 இல்லை மாப்பிள்ளை என்னையும் அப்பாவையும் USA கிளம்பி வரச் சொன்னா , நான் இப்போ வரலேன்னு சொல்லி காரணத்தை சொன்னேன். , கோபத்துல ஃபோனை கட் பண்ணீட்டு போயிட்டா...*
*🌹🌹 நீங்க என் மாப்பிள்ளைங்கறதுக்கு மேலாக என் பிள்ளை மாதிரி அதுனால என் மனசுல உள்ளத உங்ககிட்டே சொல்லறேன் , தப்பு இருந்தால் மன்னிச்சுடுங்க...*
*🌹🌹 ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்கம்மா...சொல்லுங்க...*
*🌹🌹 நான் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு வயசு 21. உங்க. மாமாவுக்கு. இரண்டு தங்கைகள், மூளை வளர்ச்சி இல்லாத அவரைவிட இரண்டு வயசு குறைவான தம்பி... , மாமியார் மாமனார்....*
*🌹🌹 நானும் பாங்க்-ல வேலை பார்த்துண்டு இருந்தேன் இரண்டு நாத்தனார் கல்யாணம் அவர்கள் இருவருக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள் பிரசவம்...*
*🌹🌹 அதைவிட மூளை வளர்ச்சி இல்லாத மச்சினன் அவனுக்கு தேவையானது அனைத்தும் நான் தான் செய்ய வேன்டும் என்று பிடிவாதம் பிடிப்பவன்...*
*🌹🌹 மாமியார் மாமனார் இருவரும் வயசு ஆக ஆக அவர்களுக்கு எல்லாமே கையில் கொண்டு குடுக்க வேண்டும்...*
*🌹🌹 இதற்கிடையில் எனக்கு இரண்டு பிரசவம் , குழந்தைகள் வளர்ப்பு பெரியவள் மாலாவின் கல்யாணம் சின்னவளின் படிப்பு. , அவளின் கல்யாணம் மாலாவுக்கு பிரசவம் சின்னவளுக்கு பிரசவம் , மாமியார் மாமனார் மச்சினன் இறப்பு னு....அத்துடன் இந்த விஷயங்கள் எல்லாம் செய்து முடிப்பதில் ஏற்பட்ட பணப் பிரச்சினை வேற....*
*🌹🌹 என்னுடைய 47 வருட கல்யாண வாழ்க்கை போன ஆறு மாதம் முன்னால் வரை இப்படிதான் நடந்து முடிந்தது...*
*🌹🌹 எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அவரோ அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை நானோ யோசிக்காமல் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்ததை எங்களுக்கு பிடித்ததாக ஏற்றுக் கொண்டு இத்தனை நாள் வாழ்ந்து இருக்கிறோம்...*
*🌹🌹 நானும் , என் கணவருக்கு என்ன பிடிக்கும் என்ன விரும்பி சாப்பிடுவார் என்று எதுவுமே யோசிக்காமல் மற்ற எல்லோரையும் நினைத்துத்தான் எல்லாம் செய்வேன்...*
* இந்த ஆறு மாதங்களாகத்தான் நாங்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்தோம்...*
*🌹🌹 இப்போது பணம் என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை . இருவரின் பென்ஷனால். தேவைக்கு அதிகமாகவே இருக்கு...*
*🌹🌹 இந்த ஆறு மாதத்தில் தான் நாங்கள் தனிக்குடித்தனமாக இருக்கோம்...*
*🌹🌹 காலையில் எழுந்திருக்கும் அப்பா பால் வாங்கி வந்தால் நான் அவருக்கு பிடித்த மாதிரி காப்பி போட்டு அருகில் இருந்து ஆத்தி குடுப்பேன்...நான் வீடு பெருக்கினால் அப்பா துடைப்பார்...நான் சமைக்க அவர் காய் நறுக்கி குடுப்பார்...*
*🌹🌹 மதியம் LUNCH சுட சுட இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பழைய கதையெல்லாம் ரசித்து பேசி சாப்பிடுவது வழக்கமானது...*
*🌹🌹 ஈவினிங் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு பிரசாதம்-லாம் சாப்பிட்டு கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து பேசி முடித்து ஆத்துக்கு வரும்போது 8 மணி ஆகிவிடும்...*
*🌹🌹 இரவில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு தூங்கறோம்....*
*🌹🌹 ஏன்னா பயம் . நாளை விடியலில் யார் இருப்போம் என்ற உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை...*
*🌹🌹 இனி எத்தனை வருஷம் இருவரும் சேர்ந்து வாழ , விடப் போறார் அந்த கடவுள் என்று தெரியவில்லை...*
*🌹🌹 அதில் ஓரு நாள் கூட இந்த சந்தோஷங்களை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்று நினைக்கிறோம் ...*
*🌹🌹 இருபதுகளில் நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆத்மார்த்த வாழ்க்கையைத்தான் நான் அவளிடம் PRIVACY, PERSONAL SPACE என்று சொன்னேன்...*
*🌹🌹 அவள் அதை வேறு விதமாக , அவள் வயசுக்கேற்ப கற்பனை செய்து கொண்டாள்...*
*🌹🌹 சத்தியமாக மாப்பிள்ளை இப்பதான் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்து வாழும் வாழ்க்கையையே . வாழ ஆரம்பித்து இருக்கிறோம் . ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருக்கோம்...*
*🌹🌹 இது தப்பா மாப்பிள்ளை...*
*🌹🌹 அய்யோ நிச்சயமா தப்பு இல்லேம்மா. WISH YOU BOTH A HAPPY MARRIED LIFE மா....*
*🌹🌹 மாப்பிள்ளை ஃபோன் வச்சிடாதீங்க... உங்களுக்கு இப்போ நாங்கள் இல்லாமல் சமாளிக்க முடியாது என்றால் சொல்லுங்கள். , நிச்சயமாக கிளம்பி வருகிறோம்...மாலாவிடம் சொல்லுங்கள் , என்று சொல்லவும்...*
*🌹🌹 அம்மா எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு கிட்ட பேசி நான் புரிய வைக்கிறேன் பை மா என்று சொல்லி ஃபோன் வைத்தான் பாஸ்கர் ...*
*🌹🌹 மாலாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...*
*🌹🌹 நான் தப்பு பண்ணி விட்டேன் கல்யாணம் பண்ணி 6 வருஷம் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்...*
*🌹🌹 நீங்கள் அந்த 6 வருஷத்தில் எத்தனை COUNTRY என்னை கூப்பிட்டு போனீர்கள் எத்தனை சந்தோஷமாக இருந்தோம்...*
*🌹🌹 பாவம் அம்மா , அப்பா . அவர்கள் என் திருமணத்துக்கு முன் எங்குமே போனது இல்லை. இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கூட நான் பார்த்தது கிடையாது .அம்மா அவளுக்காக எதுவுமே செய்து கொள்ள வில்லை .எங்களிடமும் எதுவும் எதிர்பார்த்ததும் இல்லை...*
*🌹🌹 அவளிடம் தாய்மையை மட்டுமே எதிர்பார்த்த நான் அவளுக்குள் ஓரு பெண்மை இத்தனை வருடமாக ஏக்கத்தில் இருந்ததை புரிந்து கொள்ள வில்லை...*
*🌹🌹 கணவன் மனைவி PRIVACY PERSONAL SPACE எல்லாவற்றையும் மூன்றாம் தரமாக கற்பனை செய்த என்னை , என்னாலேயே மன்னிக்க முடியல...*
*🌹🌹 PLEASE அம்மாக்கு ஃபோன் பண்ணுங்க என்றாள்...*
*🌹🌹 ஃபோன் எடுத்த அவள் , அம்மா என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேன். ரொம்ப சாரி அம்மா நீயும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கணும்...*
*🌹🌹 ஆனா உனக்கு எப்பவாவது , உங்க வாழ்க்கைல BORE அடிச்சதுன்னா ஓரு ஃபோன் பண்ணுங்க டிக்கெட் அனுப்பி விடறேன் . இங்க வாங்க உங்க பேரனுடன் சந்தோஷமா இருங்க...*
*🌹🌹 உங்களுக்கு NO MORE DISTURBANCE FROM OUR SIDE. MARRIED LIFE ல PERSONAL SPACE PRIVACY ங்கரதுக்கு உண்மையான அர்த்தத்தை புரிந்துகொண்டேன்...*
*🌹🌹 HAPPY HAPPY MARRIED LIFE மா என்று PHONE வைத்த அவள் ஏங்க உங்க அம்மாக்கு டிக்கெட் எடுங்க மாமாவை விட்டு ஐந்து மாசமா அவங்களை பிரிச்சு இங்க வச்சு இருக்கோம் எனவும்...*
*🌹🌹 என். அம்மா ஒடி வந்து. மாலா. வின் கை பிடித்து தாங்க்ஸ் சொன்னாள்...*
*🌹🌹 மாமியார் கண்களிலும் அந்த ஏக்கத்தை பார்த்தாள் மாலா . இனி தங்கள் சுயநலத்துக்காக பெரியவர்கள் யாரையும் பிரிப்பதும் இல்லை... அவர்கள் தனிமைக்கு இடைஞ்சல் குடுக்கப் போவதுமில்லை என்று முடிவு செய்து கொண்டாள்...*. ஆம். ,. இனி. PERSONAL SPACE ..... PRIVACY. என்னும். வார்த்தைகள் அவர்களுக்கு. வேறு. அர்த்தம் .... இவர்களுக்கு. வேறு. அர்த்தம் .....
********
அந்த வயதாகும் வரை..... 🙏
நன்றி இணையம்