வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:01 | Best Blogger Tips

 



கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*


வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*


இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.


*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*


*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*


*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*


*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*


*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.


*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*


*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*



*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*


*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*


*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*


*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*


*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*

*“நீ பிறந்த போது, அழுதாய்...*

*உலகம் சிரித்தது..*.

*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*


*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.


*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*


*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*


*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 

*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*


*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*

*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*


*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 

*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*


*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*


*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*


*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.


*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*


*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*


*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*


*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.


*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*


*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.


*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*


*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*


*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*


*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*

*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"


*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*

*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!


*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.


*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.



நன்றி இணையம்