வாழ்க்கையின் நிகழ்வுகள் - எப்படி உள்வாங்குகிறோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:50 PM | Best Blogger Tips


Image result for வாழ்க்கையின் நிகழ்வு
சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி,

"உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.

என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?"

 இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் போனால் போகட்டும் போடாஎன்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.
Image may contain: 2 people, people sitting, screen, table and indoor

நன்றி 👤✍ *பெ.சுகுமார்*

யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:08 PM | Best Blogger Tips
Image result for கணிதமேதை ராமானுஜம்

கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்

உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு பழகத்தான் விரும்புகிறேன்,

ஆனால், நான் எதிர்பார்க்கும்
நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!.
அவ்வாறென்றால் நீங்கள் எதிர்பார்க்கும்
மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார் !!!.

*நட்புக்கு இலக்கணமான எண்கள்“220, 284" ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்என ராமானுஜம் கூறினார்.*

நீங்கள் கூறிய எண்களுக்கும், என் கேள்விக்கும் என்ன தொடர்புள்ளது?” என்று குழம்பிய நிலையில் அந்த நபர் கேட்டார் !!!.

குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம் , 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படிகூறினார் !!!.

சிறிது சிரமப்பட்டு அந்த நபர் இவ்விரு எண்களின் வகுத்திகளைப் பட்டியலிட்டார் !!!.

220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220
284 →1,2,4,71,142,284
இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி ராமானுஜம் கூறினார் !!!.

அதன்படியே செய்த நபர் சிறிது நேரத்தில் ஆச்சரியமடைந்தார் !!!.

இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்?
ராமானுஜம் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது....

220 → 1+2+4+5+10+11+20+22+44+55+110=284
284 →1+2+4+71+142=220

*இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவதும்,அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது !!!*

220, 284 என்ற எண்களின் வகுத்திகளை, சம்பந்தப்பட்ட எண்களைத் தவிர்த்து, கூட்டினால் மற்றொரு எண் கிடைப்பதே அந்நபரின் வியப்புக்குக் காரணமாய் அமைந்தது !!!.

*இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோஅதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என ராமானுஜம் விளக்கினார் !!!.*

வியப்பின் விளிம்புக்கே சென்ற அந்நபர், இவரை ஏன் அனைவரும் எண்களின் தந்தை”, "கணிதமேதை" என போற்றுகின்றனர் என புரிந்துகொண்டார் !!!.

*எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் ராமானுஜம் புரிய வைக்கும் தத்துவமாகும்
 Image may contain: Senthil Kumar, smiling, selfie and closeup
நன்றி இணையம்

திருவண்ணாமலை டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips
Image result for திருவண்ணாமலை

நண்பர்களே!
திருவண்ணாமலை செங்குந்தர் (கைக்கோளர்) முதலியார்களில் தி.சாமி முதலியார் குடும்பம் குறித்து பேசி வருகிறோம்.
Image result for திருவண்ணாமலை
வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான் 

நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம் ஆனால் பார்ப்பனர்களிடம் அதற்கு முன்பு 2000 ஆண்டுகள் சூத்திரர்களாக அடிமைப்பட்டு கிடந்தோம்

குத்திரர்கள் படிக்கக் கூடாது என்று மனுதர்மம் சொல்கிறது என்று பார்ப்பான் சொன்னதால் அரசனை விட்டு அதனை சட்டம் செய்தததால் சூத்திரர்களாகிய நாமெல்லாம் படிக்காமல் இருந்தோம் படிக்க முடியாமல் இருந்தது
நம்முடைய குலதர்மம் படிக்காமல் இருப்பது படிப்பதை காதில் கூட கேட்க கூடாது என்று சொன்னது 

அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பு தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை
அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள் பணக்காரர் செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது

ஆனால் பணக்கார் _பணம் படைத்த சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க "விக்டோரியா இந்துபள்ளி "க்கூடத்தைத் திறந்தார்

இன்றைக்கு கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரியஇடத்தையும் "தர்ம "மாக கொடுத்தார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னதாக திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் விக்டோரியா இந்து பள்ளியில் படித்தவர்கள் தான் 

தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்

1. டி.எஸ்.முத்துக்குமாரசாமிமுதலியார்
2.
டி.எஸ்.நாரயணசாமி முதலியார்
3.
டி.எஸ்.ராமு முதலியார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 - 00 மணிக்கு அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி
தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்
ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல் மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும் அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே
திருவூடலுக்கு போகும் அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம் அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளைதி.சாமிமுதலியாரின் முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்

1929 முதல் 1939 வரை 10 ஆண்டு காலம் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்

அண்ணாமலையார் திருக்கோயிலின் அறங்காவலராகவும் அறங்காவல் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார் இன்றைக்கு வளர்ந்து விரிந்து பரந்து பெருநகராகவிளங்கும்

திருவண்ணாமலைக்கு சாத்தனூர் அணையிலிருந்து ராட்சத குழாய்களின் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது வருகிறது

ஆனால் 90 வருடங்களுக்கு முன் திருவண்ணாமலை மக்கள் கிணற்று நீரை மட்டுமே நம்பி கிணற்று
தண்ணீரை பயன்படுத்தி வந்த போது

திருவண்ணாமலைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கும் சமுத்திர ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டி அதிலிருந்து மோட்டார் வைத்து இறைத்து குழாய்கள் மூலமாக
திருவண்ணாமலை நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் தான் இப்பொழுது கூட திருவண்ணாமலை நகரில் மிச்ச மீதமிருக்கும் தெருக் குழாய்களை _ பழைய தெருக் குழாய்களை பார்த்தால் அந்தத் தெருக் குழாய்களில் பெயர் கல்வெட்டுகள் இருக்கிறது

அந்தக் குடிநீர்க்குழாய் கல்வெட்டுகளில் 90 சதவீதம் நகராட்சி தலைவர் என்று டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் பெயர் தான்பொறிக்கபட்டிருக்கும்
ஆணையாளர் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் பெயர் இருக்கிறது

நண்பர்களே...

நான் 1960 களில் பள்ளிக்கு படிக்க வந்த காலத்தில் இப்போது இருப்பது போல் ஓட்டல்கள் டீ கடைகள் இல்லை பாட்டல் வாட்டர்களும் இல்லை
தண்ணீர் தாகம் என்றால் என்னைப் போன்ற வெளியூர்க்காரர்கள் குழாய்த் தண்ணீரைத்தான்குடிப்போம் குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு முகம் கை கால்களையும் கழுவுவோம்

முத்துக்குமாரசாமி முதலியார் குடும்பத்திற்கு திருவண்ணாமலைக்கு தெற்கே கீழ் அணைக்கரை சாவல்பூண்டி சமுத்திரம் கிராமங்களில் ஏராள நஞ்சை புஞ்சை நிலங்கள் இருந்ததுஅதுவும் சமுத்திர ஏரியின் தண்ணீர் பாயும் நிலங்கள் அடிக்கடி நிலத்தை சாகுபடியைபார்க்க சமுத்திர ஏரிக்கு கீழே போகும் போது அவருக்கு தோன்றி இருக்கிறது

வளர்ந்துவரும் இந்த ஊருக்கு சமுத்திரம் ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டினால் தான் அதிலிருந்துவற்றாமல் தண்ணீர் கிடைக்கும் என்று திட்டமிட்டு கிணறுகளை வெட்டி முதன்முதலாக திருவண்ணாமலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்தவர் டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார் 

இப்பொழுது நகரம் முழுதும் மின்சாரம் வந்து விட்டது. தெருவிளக்குகள் ஒளிர்கின்றது
90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையின் ஒவ்வொரு தெரு வின் முகப்பிலும்ஒரு பெரிய கல்தூண் நடப்பட்டிருக்கும் அந்த .கல்தூணின் உச்சியில் மண்எண்ணைய்லாந்தர் - சிம்னி தான் இரவு நேரங்களில் பெயருக்கு "மினுக்" "மினுக்" எனமின்மினிப் பூச்சி போல தூரத்து நட்சத்திரம் போல் எரியும் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் திருவண்ணாமலை நகராட்சி தலைவராக வந்த போது தான்அவர் தான் அன்றைய திருவண்ணாமலை நகரம் முழுவதும் முதன்முதலாக மின்சார விளக்குகளை அமைத்தவர்

அதே போல நகரத்து குப்பைகளை அள்ளுவதற்கு அள்ளி அவைகளை வெளியே எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டி எருவாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டம் கொண்டு வந்தவர் டி.எஸ்..முத்துக்குமாரசாமி முதலியார் மாட்டு வண்டிகள் மூலமாக திருவண்ணாமலையிலிருந்து குப்பைகளை நகருக்கு வெளியே கொண்டு சென்று
அவருடைய நிலங்கள் இருக்கும் கீழ் அணைக்கரை கிராமத்திற்கு அருகில்மணலூர்பேட்டை சாலையில் நகராட்சி எருக் குழிகளை ஏற்படுத்தியவர்

90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஆதிதிராவிடர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு போவதற்கு தடை இருந்தது

அதிகபட்சமாக கோபுரத்தில் நுழைந்து சின்ன நந்தி வரை கூட போக முடியாதகாலம் அவர் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த போது தான் "ஹரிஜன ஆலயப் பிரவேசம் "நடந்தது
அவரே முன்னின்று ஆதிதிராவிடர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்

அந்தக் காலத்தில் 1920 -- 1930 - 

1940
களில்

கவர்னர் கலெக்டர்

நீதிபதிகள் எல்லோரும் ஆங்கிலேயர்கள்

அவர்கள் திருவண்ணாமலை வந்தால்
தங்கினால் அவர்களுக்கு வரவேற்பு விருந்து என்று திருவண்ணாமலையில் கொடுத்தஒரேகுடும்பம்
டி.எஸ்.முத்துக்குமரசாமி முதலியார் குடும்பம் தான்.

ஒரு பக்கம் கீழ் அணைக்கரை சாவல்பூண்டி சமுத்திரம் என மூன் கிராமங்களிலும் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அந்த குடும்பத்திற்கு
சொந்தமாக இருந்தது

விவசாயத்தோடு இன்னொரு பக்கம் வியாபாரமும் செய்தார்கள்

டாடா கம்பெனியின் அத்தனை பொருட்களுக்கும் இவர் ஏஜெண்ட்டாக இருந்தார்

இந்துஸ்தான் லீவர் என்ற அந்த கம்பெனி தயாரித்த பொருட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மொத்த ஏஜெண்ட்டாக இருந்தார்

இந்தியன் டுபொக்கோ கம்பெனியின் . சிகரெட்டுகள் சிசர்ஸ் பிளேயர்ஸ் வில்ஸ் பாஸுங் ஷோ வில்ஸ் நேவி புளு என ஏராள சிகரெட்டுகளுக்கு மாவட்ட அளவில் ஏஜெண்டாக இருந்தார்

பாரி கம்பெனியினுடைய 

பாரி மிட்டாய் பாரிசாக்லெட்

பாரி உரம் போன்றபாரிக் கம்பெனி தயாரிப்புகளுக்கு ஏஜென்டாக இருந்தார்.

டால்மியா சிமெண்ட்டுக்கு அவர்தான்
ஏஜண்ட்டாக இருந்தார் நண்பர்களே


நன்றி
சாவல்பூண்டி மா.சுந்தரேசன்


நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க ! என்ன வழி?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:40 PM | Best Blogger Tips
Image result for negative thoughts image

வீட்டிற்கு விருந்தினர்கள் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளின் வால்தனம் போதாதென்று வந்த குழந்தைகளின் வால்தனமும் சேர்ந்து கொண்டு ஒரே ரகளை. உங்கள் பாட்டனார் வழிச் சொத்தாக ஒரு பழங்கால கடிகாரம் வீட்டின் நடுக் கூடத்தில். மிகுந்த அக்கறையும் கவலையுமாய், “பிள்ளைகளா! பார்த்து விளையாடுங்க, இந்தக் கடிகாரத்தை உடைச்சுடாதீங்க,” என்று சொன்னால் அந்தக் கடிகாரம் பேரீச்சம் பழத்திற்குத் தயாராகிவிடும்..

சீக்கிரம் கிளம்பு, பஸ்ஸை மிஸ் பண்ணத்தான் போறோம்,” என்று கிளம்பினால் பேருந்தைத் தவறவிட உங்கள் மனது ரெடி.
 Related image
இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?
நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க வேண்டும். தீர்ந்தது பிரச்சனை!

லூட்டி அடிக்கும் உங்கள் பிள்ளைகளிடம், “கத்தாதே! சப்தம் போடாதே!என்பதற்குப் பதிலாய், “அமைதியாய் இரு!என்றுதான் உபதேசம் இருக்க வேண்டும்.
 Image result for child negative thoughts image
அக்கறைக் குறைவாய் உண்பவரிடம் சாம்பாரைச் சட்டையில் கொட்டிக்கப் போறேஎன்று சொல்லாமல் சாம்பாரைக் கவனமாய் தட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்,” என்பதே சரியான ஆலோசனை. இவையெல்லாம் முக்கியமற்றவை போல் தோன்றலாம். ஆனால் இவை நம் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது.
 Image result for child negative thoughts image
பல ஆண்டுகளாய்க் கார் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள். எங்கும் சென்று இடித்ததில்லை; கீறல் இல்லை. நீங்களும் சமர்த்து; காரும் சமர்த்து. பிறகு அதை விற்றுவிட்டுப் புதிதாய் ஒரு கார் வாங்கி, அதன் புது மெருகின் கவனத்தில் எங்கேயும் இடித்துவிடக்கூடாது,” என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்காமல், “நான் இந்தக் காரைப் பத்திரமாக ஓட்டப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டால் போதும்.

பரபரப்பான கிரிக்கெட் மேட்ச். அசால்ட்டாய் 96 ஓட்டம் எடுத்துவிட்டார் தொடக்க ஆட்டக்காரர். அவருடைய செஞ்சுரிக்காக அரங்கத்தில் டென்ஷன். அவருக்கும் டென்ஷன். இந்தப் பந்தில் நான் கேட்சாகிவிடக் கூடாது,” என்று நினைக்காமல், “வா போடு! ஸிக்ஸர் அடிக்கிறேன் பார்,” என்று நினைத்தால் போதும், நூறு நிச்சயம்.

இதேதான் அனைத்திற்கும்.

நான் வாழ்க்கையில் நொடித்து விடக்கூடாது... நான் இந்த விஷயத்தைச் சொதப்பி விடக்கூடாது...என்பதையெல்லாம் உதறி எறிந்துவிட்டு,

நான் முன்னேறுவேன்... சாதிக்கப் பிறந்தவனப்பா நான்... வெற்றி எனது தோஸ்த்...என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மனம் சரியாய் நகரும்; மகிழும்!


நன்றி இணையம்