மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips
Image result for மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்



1. UDAY: உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா

2. PMMY: பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
Image result for மோடி

3. PMJDY: பிரதான் மன்ட்ரி ஜான் தன்பன் யோஜனா

4. PMJJBY: பிரதான் மந்திரி ஜீவன் ஜியோதி பீமா யோஜனா

5. PMSBY: பிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா

6. ஏபி: அடல் ஓய்வூதிய யோஜனா

7. கே.வி.பீ: கிசான் விகாஸ் பேட்ரா

8. எஸ்.ஏ.பி.ஏ: ஸ்வத் பரத் அபியான்

9. PMSAGY: பிரதான் மந்திரி சன்சாத் ஆதார்ஷ் கிராம் யோஜனா

10. AMRUT: Atal மிஷன் புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றம்

11. என்ஜிஎம்: நமிமி கங்கா யோஜனா

12. HRIDAY: பாரம்பரிய நகர அபிவிருத்தி & மேம்பாட்டு யோஜனா

13. முத்திரை: மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிபினேன்ஸ் ஏஜென்சி

14. SETU: சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமை பயன்பாடு
Image result for மிக முக்கியமான சுருக்கமான அரசு திட்டங்கள்
15. NPS: தேசிய ஓய்வூதிய திட்டம்

16. PMKVY: பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா

17. PMKSY: பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா

18. BBBP யோஜனா: பேட்டி பச்சோவ், பேட்டி பத்ஹோ யோஜனா

19. எஸ்.எஸ்.ஓ: சுகண சிருத்தி யோஜனா

20. பிஎம்டிபிவீ: பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

21. PMGSY: பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா

22. பிரதமர்: பிரதான் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா

22. டி.ஜி.கே: டெய்லி ஜி.கே.ஜோன் டெலிகிராம் சேனல்

23. PMGKY: பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா

24. டி.ஐ.சி.ஜி.சி: வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம்

25. TEC இந்தியா: ஆற்றல்மிகுந்த மற்றும் சுத்தமான இந்தியாவை மாற்றுதல்

26. PACS: முதன்மை விவசாய கடன் சங்கங்கள்

27. சிபிஐ: நுகர்வோர் விலை குறியீட்டு எண்

28. WPI: மொத்த விலை குறியீட்டு எண்

29. சிஏடி: நடப்பு கணக்கு பற்றாக்குறை

30. கே.வி.கேக்கள்: கிருஷி விஜயன் கெண்ட்ராஸ்

31. MSMEs: மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

32. சிபிஎஸ்: கோர் பேங்கிங் தீர்வு

33. CORE: மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் ரியல் டைம் பரிமாற்றம்

34. LTIG: நீண்ட கால நீர்ப்பாசன நிதி



நாடுகள் - நாடாளுமன்றத்தின் பெயர்கள்:-

✌🏻 ஆஸ்திரேலியா - ஃபெடரல் பார்லிமெண்ட்


✌🏻 அமெரிக்கா - காங்கிரஸ்


✌🏻 பிரேசில் - நேஷனல் காங்கிரஸ்


✌🏻 கம்போடியா - நேஷனல் அஸெம்பிளி


✌🏻 சீனா - நேஷனல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்


✌🏻 கொலம்பியா - காங்கிரஸ்


✌🏻 கியூபா - நேஷனல் அஸெம்பிளி ஆஃப் பீப்பிள்ஸ் பவர்


✌🏻 எகிப்து - பீப்பிள்ஸ் அஸெம்பிளி


✌🏻 இந்தியா - பார்லிமெண்ட்


✌🏻 ஜப்பான் - டயட்


✌🏻 வடகொரியா - சுப்ரீம் பீப்பிள்ஸ் அஸெம்பிளி


✌🏻 தென்கொரியா - நேஷனல் அஸெம்பிளி


✌🏻 லிபியா - ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்


✌🏻 ரஷ்யா - டூமா ஆண்ட் ஃபெடரல் கவுன்சில்


✌🏻 ஸ்பெயின் - கார்டஸ்



நன்றி இணையம்



பெண் வடிவ தட்சிணாமூர்த்தி!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips
Image result for பெண் வடிவ தட்சிணாமூர்த்தி

சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

தல வரலாறு: சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, 'நானே உயர்ந்தவள்' என வாதிட்டாள். ''சரி...நீயே உயர்ந்தவளாக இரு!'' என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள்.

அதற்கு சிவன், ''பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், தில்லை(சிதம்பரம்) வந்து என்னை நோக்கி தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன். அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய்,'' என்றார். 

அவள் 'தில்லை காளி' என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். 'எல்லைக்காளி' என்றும் சொல்வர்.
Image result for பெண் வடிவ தட்சிணாமூர்த்தி
நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப் போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்ர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்டார். ஆனால், பெண்மைக்குரிய தன்மையால் அவளால் இயலவில்லை. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, 'வேதநாயகி' எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். 

அவளும் 'பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்தசொரூபிணியாக அருள்கிறாள்.
தில்லை காளி: தில்லை காளிக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறு (ராகு காலம்), பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள், நினைத்தது நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் 'கடம்பவன தக்ஷணரூபிணி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு 'வீணை வித்யாம்பிகை' என்று பெயர். கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம்.

நன்றி இணையம்

எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:52 AM | Best Blogger Tips
Image result for எண்ணம்தான்

பல்வேறு துன்பத்திற்கு ஆளான ஒருவன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு மலைமீது ஏறினான்.அப்போது வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டு ஒன்றை கவ்வியவாறு வேகமாகப் பறந்து சென்றது.அதை கவனித்தான் இந்த மனிதன். அந்த இறைச்சித்துண்டைப் பறிப்பதற்காகப் பல பறவைகள் அப்பருந்தைத் தாக்கியவாறு பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது பருந்து. உடனே, வேறொரு பறவை அதைக் கவ்விக் கொண்டது. Image result for எண்ணம்தான்
இப்போது எல்லாப் பறவைகளும் அந்தப் பருந்தை விட்டுவிட்டு, இறைச்சித் துண்டை கவ்விய மற்றொரு பறவையை விரட்ட ஆரம்பித்தன. இறைச்சியை நழுவ விட்ட பருந்து இப்போது நிம்மதியாகப் பறந்தது. 

-
அந்த மனிதனின் மனதில் தெளிவு பிறந்தது. இறைச்சித் துண்டைப் பற்றியிருந்த பறவை தாக்கப்படுவதைப் போல உலகப் பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் தாக்குகிறது. இறைச்சியை விட்டுவிட்டு பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலகப் பற்றை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர் என உணர்ந்தான் அவன்.
Image result for எண்ணம்தான்
-
அதன்பின் தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டு பற்றற்றநிலையில் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தினான்

-
இன்னொரு சம்பவம்....

-
வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று ஊர் திரும்பிய வணிகன் ஒருவன், தனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ந்தான்; அலறித் துடித்தான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடி வந்து, தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்துக்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். அதைக் கேட்டதும் வணிகனின் சோகம் காணாமல் போனது. இப்போது அவனும் கூட்டத்தில் ஒருவனாக வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

சிறிது நேரத்தில் இரண்டாவது மகன் ஓடிவந்து, தந்தையே! வீட்டுக்கு முன்பணம்தான் வாங்கியிருக்கிறோம். முழுத்தொகை இன்னும் வந்துசேரவில்லை என்றான். 

வணிகன் அதிர்ச்சியில் உறைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சில மணித் துளிகளில், மூன்றாவது மகன் ஓடிவந்தான். தந்தையே! இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர் போலும். வீட்டை வாங்க முடிவு செய்தபோது, அது தீப்பிடித்து எரியும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, பேசியபடி முழுத்தொகையையும் கொடுத்துவிடுகிறேன் நான் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றான். இப்போது வணிகனின் சந்தோஷம் மீண்டது.

இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு! இது என்னுடையது என்று நினைக்கும்போது, அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. அனைத்துமே அழியக்கூடியவை அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாகக் கூடியவை. இதை நினைவில் நிறுத்தினாலே போதும்; சோகத்துக்கும் துன்பத்துக்கும் வேலையிருக்காது.

நன்றி இந்துமதம் வாட்ஸ் அப் குழு 9789374109