🍃🖋✍🍂
50. நீ நீயாக
இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=
ராதேக்ருஷ்ணா...
நீ . .
.நீயாக இரு !
அடுத்தவர்
மனம் கொண்டு
நீ
வாழாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின்
ஆசையில்
நீ
சுகப்படாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
கண் கொண்டு
உலகைப்
பார்க்காதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
கனவை
நீ
காணாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
வாழ்வை
நீ
வாழாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
சிந்தனை கொண்டு
நீ
சிந்திக்காதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
வழியை
உனதாக்கிக்
கொள்ளாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
நிழலை
உன்
நிழலாக ஆக்காதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !
அடுத்தவர்
பாணியை
உன்
பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ
. . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு . . .
உனக்கென்று
தனித்தன்மை உண்டு . . .
அதை
இழந்துவிடாதே . . .
நீ . . .நீயாக இரு !
அடுத்தவராய்
நீ மாறினால்,
உன்னால்
ஆனந்தப்படமுடியாது . . .
நீ . . .நீயாக இரு !
நீ
நீயாக இருப்பதில்
நேர்த்தியைக்
கொண்டு வா . . .
நீ . . .நீயாக இரு !
அப்பொழுதுதான்
நீ
உலகில்
அபூர்வமாகத் தெரிவாய் . . .
நீ . . .நீயாக இரு !
சூரியன்
சந்திரனாவதில்லை . . .
சந்திரன்
நட்சத்திரமாவதில்லை . . .
நீ . . .நீயாக இரு !
தங்கம்
விலை அதிகம்தான் . . .
தகரம்
மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம்
கொண்டு செய்யமுடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும்
உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !
கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால்
கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை
. . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால்
என்ன ?
கிணறாகயிருந்தால்
என்ன ?
நீ . . .நீயாக இரு !
காகம் மயில் போல் அழகில்லை தான் .
. .
ஆனாலும் படையல் என்னவோ
காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை
தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத்
தான் !
நீ . . .நீயாக இரு !
பட்டு போல் பருத்தி இல்லை தான் . .
.
ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ
பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது
பூமிதான் !
நீ . . .நீயாக இரு !
நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
எனவே நீ . . .நீயாக இரு !
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை
சரி செய்து கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப்
போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்
உன்னை
உதாரணமாகக் கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப்
பாடமாக ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்
வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
நீ . . .நீயாக மட்டுமே இரு
°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=
Thanks to ✍🍃ஆனந்தவேதம்🖋
🍂ரமேஷ்
ராமலிங்கம்
whatsapp-9597114924🍃🖋✍🍂