அரிய பெண்களும் அரிதாரப் பெண்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 PM | Best Blogger Tips

இந்து சமயம் பெற்ற அரிய பெண்மணிகள் வாழ்ந்த நாடு இது.இன்று அரசியல் அரிதாரம் பூசிக் கொண்ட பெண்மணிகளைப் பார்த்து கண்ணீர் விடுகிறது.சிவ புராணத்தில் சாவித்திரி என்ற பெண்மணியின் கணவன் சத்தியவான் உயிரை அவள் கண்முன் எமன் பிடித்துச் செல்கின்றான்.
உத்தமியான அவள் எமனை எதிர்த்து வேதங்களின் ஆதரத்துடன் வாதாடி கணவன் உயிரை மீட்கின்றாள்.அது போல மன்னனால் அநியாயமாகக் கொள்ளப் பட்ட கணவனுக்காக கண்ணகி மன்னனை எதிர்த்து வாதம் செய்து நீதி கேட்கின்றாள்.
நளாயினி என்ற பெண்மணி சாபமிட்ட முனிவனுக்கு எதிராக போராடி சூரியனையே எதிர்த்து நின்று வெற்றி பெருகின்றாள்.அதுபோன்ற பட்டியல் மிகவும் நீளமானது.எமனை எதிர்த்து போராட, சூரியனையே தடுமாற வைக்க ,மிகப் பெரிய மன்னனை நிலைகுலைந்து உயிரை விட வைக்க உத்தமப் பெண்களால் அன்று முடிந்தது.
உலக வரலாற்றில் இந்து மதம் அல்லாமல் வேறு எந்த மத்ததிலும் பார்க்க முடியாது.அப்படிப் பட்ட மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனத்தால் பெண் கல்வி மறைந்து இன்று பெண் என்றால் அஞ்சும் நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது.
உ.பியில் ஒரு பெண் மாயாவதி ஆணவ நிலையில் அவர் சிலையை அவரே வைத்துக் கொள்கிறார்.மேற்கு வ்ங்கத்தில் மம்தா பானர்ஜி என்ற பெண்ணின் நிலை சாதா ஊழலைத் தாண்டி சாரதா ஊழலில் நிற்கிறது.
கர்ணன் முன்பு குந்தி தேவி அம்மா என்று தெரிந்தும் அம்மா என்று சொல்ல முடியவில்லை.ஆனால் பிள்ளை ஏதும் இல்லாத ஒரு பெண்மணியை அம்மா என்று சொல்லாவிட்டால் ஆபத்து.நடராஜனின் தாரமான சசிகலாவும்,பொருளாதாரமும் இவருக்கு முக்கியம்.
இடதுசாரி தலிபான்கள் தோழர்களுக்காக உள்ள கட்சி என்றால் இது தோழிக்காக உள்ள கட்சி.ஆக இந்த மூன்று பிரம்மச்சாரியப் பெண்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலகத்திற்கு ஆணவத்தின் அடையாளமாகத்தான் தென்படுகிறார்கள்.
இந்த மண்ணில் அவசியப்படும் போது மட்டும் அறிவுடன் கூடிய வீரம் பழைய பொண்களிடம் இருந்தது.அதனால்தான் எமனைக் கூட் எதிர்த்து நிற்க முடிந்தது.ஆனால் நேர்மை இல்லாத காரணத்தல் இந்தப் பெண்களால் நீதிமன்றத்தில் கூட போய் நேர்மையுடன் நிர்க முடிய வில்லை.

 நன்றி இணையம்