இந்து மதத்தின் முக்கிய மூன்று நம்பிக்கைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:50 | Best Blogger Tips

சில முக்கியமான இந்துமத்தின் நம்பிக்கைகள் மேலே இந்த தத்துவமானது தங்கி இருக்கின்றது. அவற்றை மட்டும் இப்போது பாப்போம்.
1. பிறந்து விட்ட எந்த உயிருக்கும் மரணம் நிச்சயமானது.
2. உடலை விட்டு நீங்கும் உயிர் (ஆத்மா) மீண்டும் மறுபிறப்பு எடுக்கும். இது அவர்கள் முற் பிறப்பிலே செய்த பாவத்தின் காரணமாகவே நிகழும். எனவே இறந்த பின்னர், எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களின் அருகில் இருக்காது மீண்டும் இவ்வுலகில் நாம் எல்லோரும் பிறந்திருக்கும் காரணம் நாம் முற் பிறப்பிலே செய்த பாவங்களே.
இவ்வாறு மீண்டும் பிறக்கையில் நாம் முன் பிறப்பில் செய்த பாவ, புண்ணியங்கள் பிரம்மாவினால் கணக்கில் எடுக்கப்பட்டு எமது அடுத்த பிறப்பு எவ்வாறு இருக்கும் என தீர்மானிக்கப்படுகின்றது. (பணக்காரர் அல்லது ஏழை, ஆரோக்கியமான அல்லது நோய் வாய்படுதல் , மிகவும்சமூகத்தின் உயர் அந்தஸ்து அல்லது ஒரு சிறை பறவை)
3. எனவே சிறந்த நோக்கமாக, இந்த வாழ்க்கையில் மேலும் பாவங்களை செய்து கொள்ளாமல், இப் பிறவி முடிவதற்க்கு முன்னர், கடந்த பிறப்பில் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி எம்மை மீண்டும் பிரச்சினைகள் நிறைந்த இந்த பூமியில் பிறக்க தேவை இல்லாத வகையில், இறைவனின் திருவடி நிழலில் எப்பொதும் இருக்கும் பேரின்பப் பேரருள் செய்யுமாறு கோரியே சிவபெருமானை வழிபடுகிறோம்.

  நன்றி இணையம்