சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக,
கண்பார்வை இழப்பு ஏற்படலாம்.

சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure)

மாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றலும் ( Amputation) நேரிடலாம்

மாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம்.
பக்க வாதம் வரலாம்.
போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்
சர்க்கரை நோயை கண்டுபிடிப்பதர்க்கான பரிசோதனைகள்

உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்

1. சிறுநீர் பரிசோதனை

நீரிழிவைக் கண்டுபிடிக்கவும1 கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இரத்த குளுக்கோஸ் எந்த அளவிற்கு கூடி அல்லது குறைந்திருக்கிறது என அறியவும் முடியாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.

1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை

இவை செய்யப்படும் முறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லையேல் உங்கள் மருத்துவருடன் கலந்து லோசியுங்கள்.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180 mg/dl க்கு மேற் சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும். இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180 mg/dl க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும்.

எனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது. அதே போல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரது நிரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்திருப்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறிய முடியாது என்பது இதில் உள்ள முக்கிய குறைபாடு ஆகும்.
2. இரத்தப் பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்.
1. குளுக்கோமீட்டர் பரிசோதனை
2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் (Venous Blood)அளவிடல் பா¢சோதனை

குளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக் கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது.

குளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood).. இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வு கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை ெய்வார்கள்.

இதனால் குளுக்கோமீட்டாரில் செய்யும் போதும், மருத்துவ ஆய்வுகூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடு இருப்பது சர்வசாதாரணம். இச் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது.

முதன் முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுகூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood) போதுமானது.
 
 
நன்றி Karthikeyan Mathan

அம்மி மிதித்தல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips
இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திரு மண பந்தத்தில் இணை யும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிற ர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத் திக் கொள்வதுடன், தன் னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்க ரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகி றாள். பெண்ணின் கழுத்தில் மங் கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அத ன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகி ன்றான். மணப் பெண் ணானவள், தன் கழுத் தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்த ப்படுத்திக்கொண்டு ஆணை யும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்து க்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரி யாகத் திகழ்கின்றாள்.



இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திரு மண பந்தத்தில் இணை யும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிற ர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத் திக் கொள்வதுடன், தன் னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்க ரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகி றாள். பெண்ணின் கழுத்தில் மங் கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அத ன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகி ன்றான். மணப் பெண் ணானவள், தன் கழுத் தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்த ப்படுத்திக்கொண்டு ஆணை யும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்து க்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரி யாகத் திகழ்கின்றாள்.

நன்றி தர்மத்தின் பாதையில்



சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!! Coccinia cordifolia

மணக்கால் அய்யம்பேட்டை | 6:20 PM | Best Blogger Tips



நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது : கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.
நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள். ( ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சாப்பிடுவர்களை பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கோவைக்காய் பற்றி சில துளிகள்:
மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்:
வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.ஆனால் நாம் ( நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது.ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.
பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்.

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!! Coccinia cordifolia

நன்றி இன்று ஒரு தகவல்

ஊளைச் சதையை குறைக்க சில வழிகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:05 PM | Best Blogger Tips


இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
ஊளைச்சதையை குறைக்க உடலில் உள்ள திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்து குறைய வேண்டும். ஊளைச் சதையைப்போக்க பல வழிகள் உண்டு, அந்த வழிகளீல் நல்ல வழி சாப்பாட்டின் அளவைக் குறைப்பதும், கீரைவகை உணவுகளை கூட்டியும் இறைச்சி வகைகளை குறைத்து உண்பதோடு உடற்பயிற்சி செய்தலுமாகும்.
உடற் பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு இவை தவிர எளிய பரிகாரங்கள் மூலம் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.
இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

ஊளைச் சதையை குறைக்க சில வழிகள் !!!
Thanks to இன்று ஒரு தகவல்