ஆபாச தளங்கலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கும் இலவச சாப்ட்வேர்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:03 PM | Best Blogger Tips






இன்றைய உலகில் இணைய பயன்பாடு அதிகரித்து வருகின்ற போதிலும் அதன் அதிகரிப்புக்கு ஏற்றால் போல் ஆபாச தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
http://1.bp.blogspot.com/-O98gE7LAtQM/Tui9oe1rt7I/AAAAAAAAYcI/3bQ2ep3Dyl8/s1600/teen+computer.jpg
 

இந்த ஆபாச தளங்களில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பங்கு ஆகும்.

உங்கள் கணனியில் ஆபாச தளங்களை தடுக்க http://www1.k9webprotection.com/ என்ற தளத்தில் சென்று இணைய தளங்களை வடிகட்டும் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் இந்த வசதியினை பெறமுடியும். 

தரவிறக்கம் செய்ய முன்னர் உங்களின் பெயர் இமெயில் என்பவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களின் இமெயில் முகவரிக்கு மென்பொருளை தரவிறக்கம் செய்ய கி தரப்படும் பின்னர் மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். நீங்கள் தடை செய்ய கூடியவற்றின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.


மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips


வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அவர்களுடைய நண்பர்கள் தாங்கும் இடத்திற்கு செல்லும் போது மூட்டைப் பூச்சி இருக்கா என்று கேட்டுக் கொண்டு தான் நண்பர்கள் ரூமின் இருக்கையில் உட்காரும் அளவுக்கு ஆகிப் போனது.வளைகுடா, மற்றும் இதர வெளிநாடுகளில் வாழும் பேச்சிலர்ஸ் முதல் ஃபேமிலி மெம்பர்ஸ் வரை மூட்டைப் பூச்சி தொல்லையினை அனுபவித்திருப்பார்கள்.

சுவரும் தரையும் சேரும் ஓரங்களில் பரவலாக மூக்குப்பொடி தூவினால்மூட்டைப்பூச்சி தொல்லை குறையும். -

முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். அதனை பிடித்து தண்ணீரில் போட்டு விடுங்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். பிறகு. வீட்டில் எதாவது மரசாமான்கள் இருந்தால் உடனே எடுத்து வெயிலில் காய வைய்யுங்கள். மரசாமான்களில் பிடித்தால் விடவே விடாது. பிறகு மூட்டை பூச்சி இருக்கும் இடங்கள்ல் மண்ணெண்ணையை ஒரு துணியில் எடுத்து தெயுங்கள் இப்படி தினமும் செய்தால்,அனைத்தும் அழிந்துவிடும்.

மூட்டை பூச்சி போகணும்னா கடைகளில் மூட்டை பூச்சி மருந்து வாங்கி இரவில் அடிங்க … கண்டிப்பாக மூட்டை பூச்சி எல்லாம் செத்து போய் விடும்..

மூட்டை பூச்சி மருந்து ரொம்ப ஆபத்தானது..அதை அடித்தால் 24 மணிநேரமாவது வீட்டிலிருந்து வெளியே போய் விட வேண்டும்.. ஆனால் அதை தவிற எனக்கு தெரிந்து வேற வழியில்லை..நல்ல எல்லா சாமானை யும் பெரிய கவர் போட்டு காற்று புகாமல் ஒட்டி விட்டு மருந்தடியுங்கள்..

கிச்சனில் உள்ள உணவுப் பொருட் களை எங்காவது பக்கத்து வீட்டிலாவது மாற்றி விட்டு மருந்தடிப்பது நல்லது..குடிக்கும் தண்ணீரை கூட முடிந்தால் வெளியில் வைத்து விடலாம்..சின்ன குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். பழைய மரசாமான்கள் அதிகம் வீட்டில் வைக்க வேண்டாம் தூக்கி போட்டு விடுங்கள்..கார்பெட் இருந்தால் அதையும் எடுத்து விடுங்கள்.

மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள். . .

1) இதற்கு ஹெவி டியூடி பெஸ்ட் கன்ட்ரோல் செய்ய வேண்டும். விஷத்தன்மை அதிகம் ஆதலால் ஆபத்தானது.எச்சரிக்கையாகக் கையாளனும்.

2) ஓர் இரண்டு நாள் விஷத் தன்மை முறிவு ஏற்படும்வரை வெளியில் தங்க வேண்டும்.

3) முதலில் வீட்டில் உள்ள துணிகளை எல்லாம் நன்கு மூட்டை கட்டி வைத்து வெளியில் வைக்கவும். அல்லது சுடுதண்ணீரில் துவைத்து எடுக்கவும்.

4) PEST கண்ட்ரோல் செய்த பின்னர் 24 மணிநேரமாவது யாரும் அறையை பயன்படுத்தக் கூடாது.

5) அடுத்த நாள் வேற ஆளை விட்டு மருந்தை எடுத்து களைந்து விட்டு ஜன்னலெல்லாம் திறந்து வைத்து விட்டு வர வும்..பிறகு ஒரு நாள் கழித்து போய் சுத்தம் செய்யவும்..

6) சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் கழுவி எடுத்து வைக்கவும்..வேறு மற்றும் பாதுகாப்பான முறை. . .

கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.

7)முதலில் மூட்டை பூச்சியை பார்த்தால் கையால் நசுக்காதீர்கள். நசுக்கினால் அந்த இரத்த வாடையில் நிறைய வந்து விடும். .மாஸ்கிங் டேப் கொண்டு ஒட்டி பிடிக்கும்

மூட்டைப் பூச்சியின் வரலாறு . . . !

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன

பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்ப மண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்க கூடியவை.

மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களை யும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.

உடலமைப்பு. . .

வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினை கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப் பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக்கொண்டதாக இருக்கும்.
உண்ணும் முறைகள். . .

பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனதனின் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைட், உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.

இப்பூச்சிகள் இரதத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்ததை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.

மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள். . .

இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டி.டி.டி(D.D.T) மருந்து உபயோகத்தின் மூலமாக முற்றிலுமாக அழிக்கப் பட்டிருந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் நியூயார்க் போன்ற நகரங்களை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. கரப்பான் பூக்கிகளுக்கும் எலிகளுக்கும் பழக்கப்பட்ட நியூயார்க் நகர மக்கள், இப்போது மூட்டைப் பூச்சிகளைப் பற்றி ஆரம்பப் பாடம் படிக்கிறார்கள்.

மூட்டைப் பூச்சிகளைப் பற்றி தகவலை மக்களுக்கு அளிக்க ஒரு இணையதளத்தையும் உருவாக்கி உள்ளது நியூயார்க் மாநகரம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆதிக்கம் இங்கு எழுபத்தியொரு சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் இப்போதைய பெயர் மூட்டைப் பூசசிகளின் தலைநகரம் இந்த நகரம் 500,000.00 டாலர் தொகையை மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்கும், மக்களிடையே விழிப்புணர்வப் பரப்பவும் செலவிட்டிருகிறது.

பகல் முழுவதும் ஒளிந்து இருக்கும மூட்டைப் பூச்சிகள் இரவில் வெளிவருகின்றன. இரத்தைதைக் குடித்து வாழும் இந்தப் பூச்சிகளைக் முற்றிலுமாக அழிப்பது ஒருகடினமான செயல். ஒருவர் கடிபடும் உணர்ச்சியோ கடியின் வலியோ தெரியாத்தனால் இவை உடனடியாக் கொல்லப்படுவதில்லை. படுக்கையின் ஓரங்களில் கரும்புள்ளிக் குவியலாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஒரு வலி போக்கும் திரவத்தை நம் உடலுக்குள் செலுத்துகின்றன. அதனால் அவைக் கடிப்பது யாருக்கும் தெரிவதில்லை.

ஆனால் சிறிது நேரத்திலோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் கழித்தோ உடலில் தடிப்புக்களும் அரிப்பும் இருக்கும். மூட்டைப் பூச்சிகள் பதுங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருப்பதால் அவை எல்லா மூலை முடுக்குகளிலும் ஒளிந்து கொள்கின்றன. பகலில் இவை கண்களுக்குத் தெரிவதில்லை.

நமது பெட்டிகளுக்குள்ளும் உடைகளுக்குள்ளும் ஏறிப் பதுங்கிக் கொள்ளும் இந்த அருவருப்பான பூச்சி அதிக அளவிற்கு அதிவேகமாகப் பரவ காரணம் சுற்றுப்புற தூய்மையின்மை என்றுக் கூற முடியாது.மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இங்கே மக்களிடம் இல்லாதது தான். கிட்ட்த்தட்ட ஒரு தலைமுறைக்கு மூட்டைப் பூச்சி என்ற ஒரு பூச்சி இருப்பதே அமெரிக்கர் களுக்குத் தெரியாது.

ஒரு பெண் மூட்டைப் பூச்சி ஒரு முறைக்கு ஐநூறு முட்டைகள் இருக்கிறது. வழவழப்பானச் சின்ன சின்ன முட்டைகள் எதிலும் ஒட்டிக் கொள்ளும்.அதனால் மூட்டைப் பூச்சிகளின் குடியேற்றம் ஒரு இட்த்திலிருந்து இன்னோரு இட்த்திற்கு எளிதாகிறது. மேலும் இரத்த்த்தை மட்டும் குடித்து வாழும் இந்த பூச்சி இனங்களால் ஒரு வருடம் இரத்தமில்லாமல் வாழ முடியும்.இந்தப் பூச்சி இனங்கள் மனிதர்கள் மட்டுமில்லாமல் எலி, வெளவ்வால் அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகள் மூலமாகவும் பரவலாம். டி.டி.டி(D.D.T) பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதாலும் மூட்டைப் பூச்சிகள் பெருக ஆரம்பித்து இருக்கின்றன.

இந்தியக் கட்டங்களைப் போல் சிமெண்ட்டாலும் செங்கலாலும் கட்டப்படாமல் மரத்துகள்களால் செய்யப்பட்ட மர அட்டைகளால் கட்டப்படும் அமெரிக்கக் கட்டிடங்களிலிருந்து மூட்டைப் பூச்சிகளை வெளியேற்றுவது மிக க் கடினமாக உள்ளது. நம் நாட்டைப் போல கட்டிடங்களைக் கழுவி விட முடியாது.

வெளிப்புற அட்டைச்சுவருக்கும் உட்புற அட்டைச் சுவருக்கும் நடுவில் குளிர் வரமால் தடுக்க வைக்கும் செயற்க்கைப் பஞ்சுகளும் தரையில் போடப்படும் கார்பெட் என்ற கம்பளங்களும் மூட்டைப் பூச்சிகள் பதுங்கிக் கொள்ளவும் ஒரே கட்ட்டிட்த்தின் ஒரு மூலையிலிருந்து இன்னோரு மூலைக்கு மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்லவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இயந்திரத்தாலேயே துவைத்துக் காய வைக்கும் பழக்கத்தால் மூட்டைப் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள் அமெரிக்க மக்கள்.

மூட்டைப் பூச்சிகளினால் பரவக் கூடிய நோய்கள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளும் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வது பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகினறன.

மூட்டைப் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாத மக்கள் அதிவீரியமுள்ள பூச்சிக் கொல்லிகளைப் வீட்டுக்குள் பயன் படுத்தி குழந்தைகளுக்கும், செல்லப் பிராணிகளுகும் கேடு விளைவிக்க வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறது. மனிதனின் கண்கள் மற்றும் தொண்டையை எரிச்சல் படுத்தும் இரசாயனப் பொருட்களும், மனித நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும் மருந்துகளும் பொது மக்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஐம்பது ஆண்டுகளாக மூட்டைப் பூச்சிகளை மறந்திருந்த அமெரிக்க சமுதாயம் செப்ட்ம்பர் மாதம் சிக்காகோ நகரில் மூட்டைப் பூச்சிகளைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நட்த்துகிறது. பூச்சியின அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்து இந்தக் கருத்தரங்கில் குவிந்திருகின்றனர்.

மூட்டை பூச்சியை அழிக்க சில சுலபமான வழிகள். . .

114.8ºF அல்லது 46ºC க்கு அதிகமான வெப்ப நிலையில் மூட்டைப் பூச்சிகள் இறந்து போவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது அதிக அளவு வெப்பத்தை சுமார் ஏழு நிமிடங்களுக்கு கட்டடங் களின் எல்லா அறைகளிலும், இடுக்குகளிலும் செலுத்தி மூட்டைப் பூச்சிகளைக் கொல்லும் முறை சில இடங்களில் செயல்படுத்தப் படுகிறது.

இன்னோரு கல்லூரி ஆராய்ச்சியில் பாட்டிலில் போடப்பட்ட திடப்படுத்தப்பட்ட கார்பன்டை ஆக்ஸைட்() மூட்டைப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதோடு அவற்றைப் பிடிக்கும் ஒரு பொறியாகவும் பயன் படுத்த முடியும் என்று தெரிகிறது.

Electric Steamer. . .

The Electric Power Steamer kills bed bugs contact. Bed bugs are particularly succeptible to heat, which is why steaming can be a very effective way to kill bed bug and mite infestations in your home in tight and hard to reach places.

 

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | | Best Blogger Tips

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.





Thanks to : பெண்கள் Women

முகப் பராமாரிப்பு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் வழிமுறைகள் சில:

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?

கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.





thanks to :பெண்கள் Women's

உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips


தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.

இந்தியா இரண்டாவது இடம்

உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.

பாதிப்பிற்கு காரணம்

இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுடன் விவாதியுங்கள்

தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

கண்காணிப்பு அவசியம்

சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை.

கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.

பெண் குழந்தையா கூடுதல் கவனம்

பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.

தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய “குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:

இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.

உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

 

Thanks to : 

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது ? இதை தடுக்க சில வழிகள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:51 PM | Best Blogger Tips

ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல் குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.

இதேபோல் கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

மது, போதை பாதிப்பு

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். பயணங்களை தவிர்க்கவும்.

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.

ஊட்டச்சத்துணவு அவசியம்

நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:23 PM | Best Blogger Tips

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
 
 

வெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:21 PM | Best Blogger Tips


இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2.
பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102
செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5.
அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6.
சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8.
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?!

 

Thanks to FB -

மின்கலங்கள் (பேட்டரிகள்) Laptop Battary Maintenance

மணக்கால் அய்யம்பேட்டை | 1:09 PM | Best Blogger Tips

மடிக்கணனிகளில் பாவிக்கப்படும் மின்கலங்கள்(பேட்டரிகள்) விரைவில் பழுதடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இதற்கு தொடர்ச்சியாக மின்கலங்களை சார்ஜ் செய்தநிலையில் மடிக்கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் சார்ஜ் செய்யாதிருத்தல் போன்றன காரணங்களாக அமைகின்றன.

எனவே இவற்றை தவிர்த்து நேரத்திற்கு நேரம் மின்கலம் தொடர்பான தகவல்களைத் தந்து அவற்றின் பாவனைக் காலத்தை நீடிக்க செய்யும் பொருட்டு Battery Optimizer எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது மடிக்கணனியின் மின்கலம் முழுமையாக சார்ச் அடைந்த பின்னரும், சார்ச் அற்ற நிலையிலும் அலாரம் மூலம் எடுத்துக்காட்டுவதுடன் மின்கலங்களில் காணப்படக்கூடிய ஏனைய கோளாறுகள் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச்சுட்டி:
http://downloads.reviversoft.com/BatteryOptimizerSetup.exe
 
 
 

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:40 PM | Best Blogger Tips




தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in

என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி  புதியதலைமுறை பேஸ்புக்