திண்டுக்கல் முதல் காரைக்கால் நேரடியாக

மணக்கால் அய்யம்பேட்டை | 10:15 AM | Best Blogger Tips

May be an image of train

 

திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை காலை நேரத்தில் செல்லும் தொடர் பயணிகள் ரயில் சேவை இது 😍 நேரடியாக செல்ல முடியும் ✅

➡️ திண்டுக்கல் முதல் திருச்சி // திருச்சி முதல் காரைக்கால் என இரண்டு ரயில்களாக இந்த ரயில் ஒரே தொடர் சேவையில் இயக்கப்பட்டு வருகிறது || காலை நேரத்தில் மட்டும் ‼️

₹55 மட்டுமே திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை செல்வதற்கு இந்த ரயிலில் 🥰

திண்டுக்கல்ளில் ஏறினால் நேரடியாக நீங்கள் இந்த ரயில் மூலம் காரைக்கால் வரை பயணிக்க முடியும் 😱 தொடர் பயணிகள் ரயில் சேவையாக இந்த சேவை உள்ளது ....

⛔
வண்டி எண் :- 76836⟩⟩76820 ||
திண்டுக்கல் ≈ திருச்சி ≈ காரைக்கால்
" தொடர் பயணிகள் ரயில் சேவை "

🚂 76836 || திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி டெமு பயணிகள் ரயில் தினமும் காலை 06:15 மணிக்கு திண்டுக்களில் புறப்படுகிறது ⟩⟩

• இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து தாமரைப்பாடி வடமதுரை அய்யலூர் கல்பாத்திசத்திரம் வையம்பட்டி செட்டியாபட்டி மணப்பாறை சமுத்திரம் கொளத்தூர் பூங்குடி வழியாக திருச்சிராப்பள்ளிக்கு காலை 08:30 மணிக்கு சென்று சேருகிறது ‼️

தொடர்ந்து திருச்சியில் இருந்து இதே ரயில் அடுத்த 10 நிமிடங்களில் காரைக்கால் நோக்கி புறப்பட்டு செல்கிறது || திண்டுக்கலில் இருந்து வரும் அதே பெட்டிகள் தான் 👇

🚂 76820 || திருச்சிராப்பள்ளி காரைக்கால் டெமு பயணிகள் ரயிலாக தினமும் காலை 08:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து காலையில் புறப்படுகிறது ⟩⟩

• இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொன்மலை மஞ்சத்திடல் திருவெரும்பூர் தொண்டமான்பட்டி சோலகம்பட்டி அயனாபுரம் பூதலூர் ஆலக்குடி தஞ்சாவூர் குடிக்காடு சாலியமங்கலம் அம்மாப்பேட்டை கோயில்வென்னி நீடாமங்கலம் கொரடாச்சேரி திருமதிக்குன்னம் குளிக்கரை திருவாரூர் அடியாக்கமங்கலம் கூத்தூர் கீழ்வேளூர் சிக்கல் அந்தணப்பேட்டை நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகூர் திருமலைராயன்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காரைக்காலுக்கு மதியம் 01:40 மணிக்கு சென்று சேருகிறது ✅

📌
இந்த ரயிலில் மொத்தமாக 8 பெட்டிகள் உள்ளது || 🟥🟦🟦🟦🟦🟦🟦🟥 8 CAR DEMU
(( கழிப்பறை வசதியும் உள்ளது ))

📦 இதன் மூலம் நீங்கள் காலை நேரத்தில் திண்டுக்கல் முதல் திருச்சி வரை வரும் இந்த ரயில் மூலமாக காரைக்கால் வரை செல்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது || இதற்கான நேரடி டிக்கெட் நீங்கள் ஏறக்கூடிய நிலையங்களிலேயே எடுத்துக் கொள்ள முடியும் // குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் நேரடி டிக்கெட் கொடுக்கப்படும் 🔥

📲 RAILONE = செயலியை பதிவிறக்கம் செய்து இதன் மூலமாக நீங்கள் UNRESERVED டிக்கெட்டை உங்கள் மொபைல் போனிலேயே எடுத்துக் கொள்ள முடியும் // வழித்தடத்தில் தேர்வு செய்து நேரடியாக நீங்கள் ஏறும் நிலையம் முதல் காரைக்கால் வரை டிக்கெட் பதிவு செய்து கொள்ள முடியும் ❗ எந்தவித சிரமமும் இன்றி எடுத்துக் கொள்ளலாம் !!

🟥 திருவாரூர் வரை மட்டுமே செல்கிறது 👇

⚠️ முக்கிய குறிப்பு :- குறிப்பிட்ட மாதங்களில் இந்த ரயில் தண்டவாளப் பணிகள் காரணமாக அவ்வப்போது திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது // அவ்வப்போது மாற்றங்களை மட்டும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குவது நல்லது !!

அந்த நாட்களில் நீங்கள் இந்த ரயில் மூலம் திருவாரூர் வரை மட்டுமே பயணிக்க முடியும்
(( இந்த ஜூன் மாதத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் கூட அவ்வாறு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ))

இதை பயணத்தை துவங்குவதற்கு முன்பு ரயில் எங்கு வரை செல்கிறது என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் // தொடர்ந்து இது பல மாதங்களாக தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயிலின் சேவையில் மட்டும் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ||

⏱️ NTES செயலி :-

>> எனவே NTES ரயில்களின் அதிகாரப்பூர்வ செயலின் மூலம் நாளை என்ன மாற்றம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் 📌

திருவாரூர் வரை சென்றால் இதில் நீங்கள் காரைக்கால் வரை செல்ல முடியும் !! அந்த நாட்களில் திருவாரூர் வரை மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து பயணிக்க முடியும்

>> திருவாரூர் சென்று அங்கிருந்து தான் நாகப்பட்டினம் காரைக்கால் போன்ற பகுதிகள் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் !!

இதை மட்டும் பார்த்துக் கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

✔️ திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை செல்லும் இந்த தொடர் பயணிகள் ரயில் சேவை ஒரு மார்க்கத்தில் மட்டுமே உள்ளது || மறு மார்க்கத்தில் காரைக்காலில் இருந்து வரும் ரயில் திருச்சி வரை மட்டுமே வரும் !! அந்த ரயில் தொடர்ந்து திண்டுக்கல் வரை செல்லாது. அதற்கு முன்பு திண்டுக்கல் செல்லக்கூடிய ரயில் திருச்சியில் புறப்பட்டு சென்றுவிடும் // திருச்சி வரை வந்து வேறு ரயில் மாறி செல்லும் வேண்டிய நிலைதான் ஏற்படும் மாலை நேரத்தில் வந்தால் ‼️

(( பழைய முறை :- இன்னும் பலர் நினைத்துக் கொண்டிருப்பது மதியம் காரைக்காலில் புறப்படக்கூடிய ரயில் நேரடியாக திண்டுக்கல் செல்லும் என்று , அவ்வாறு எதுவும் இப்போது கிடையாது ❌ திண்டுக்கல் செல்வதற்கு நீங்கள் திருச்சியில் இறங்கி அந்த ரயிலில் இருந்து வந்து ரயில் மாற வேண்டும் || இணைப்பு உள்ளது ஆனால் நேரடியாக அதே ரயில் பெட்டிகள் செல்லும் என்பது இல்லை ))

➡️ திண்டுக்கலில் இருந்து திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் நாகூர் காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு வரக்கூடிய மக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள முடியும்

✝️வேளாங்கண்ணி செல்ல நாகப்பட்டினத்தில் இறங்கி பேருந்து மூலமாக செல்ல முடியும் !! நாகப்பட்டினம் முதல் வேளாங்கண்ணி வரை அடிக்கடி பேருந்து வசதி உள்ளது //

🕌 நாகூர் , காரைக்கால் வரை இந்த ரயில் நேரடியாக பயணிக்கிறது || 🛕திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தரிசன மேற்கொள்வதற்கு காரைக்காலில் இறங்கி பேருந்து மூலமாக பயணிக்க முடியும் // காரைக்கால் ரயில் நிலையம் வாசலிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது அதில் ஏறி திருநள்ளாறு வரை பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது !!

📌 திண்டுக்கல் மதுரை போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் இதுவரை எந்த தினசரி ரயிலும் டெல்டா பகுதியில் கடலோர பகுதிக்கு கிடைக்கவில்லை 📍 இது போன்ற தொடர் பயணிகள் ரயிலை பயன்படுத்தும் பொழுது நேரடியாக குறைவான பயண நேரத்தில் குறைவான கட்டணத்தில் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்க பெறுகிறது // இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

திருச்சிராப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர் இடையே தினமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips

 May be an image of train and text

 

🚂 திருச்சி இருந்து அரியலூர் விருத்தாச்சலம் நெய்வேலி வழியாக கடலூர் வரை செல்லும் தினசனி பயணிகள் ரயில் சேவை இது 💥

⬆️ திருச்சிராப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர் இடையே தினமும் இயங்கும் பயணிகள் ரயில் சேவை இது !! இந்த ரயிலில் கட்டணம் ₹ 40 மட்டுமே திருச்சி டூ கடலூர் வரை செல்ல 😍
➡️ 185 கிமீ தூரம் இந்த பயணிகள் ரயில் திருச்சி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வரை பயணித்து செல்கிறது ✅
🚆 வண்டி எண் || 76812/76811
திருச்சிராப்பள்ளி ⟨⟨≈⟩⟩ திருப்பாதிரிப்புலியூர்
" டெமு பயணிகள் வண்டி "
🔴 திருச்சிராப்பள்ளியில் இருந்து தினமும் மாலை 03:45 மணிக்கு புறப்பட்டு இரவு 08:50 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் செல்கிறது ✅
🔴 திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தினமும் காலை 05:55 மணிக்கு புறப்பட்டு காலை 11:05 மணிக்கு திருச்சிராப்பள்ளி செல்கிறது ✅
🚃 மொத்தமாக 8 DEMU பெட்டிகள் உள்ளது
✓ நிறுத்தங்கள் :- (( ALL STOP SERVICE ))
பொன்மலை திருச்சிராப்பள்ளி-டவுன் ஸ்ரீரங்கம் உத்தமர்கோவில் பிச்சாண்டார்கோவில் வாளாடி லால்குடி காட்டூர் புள்ளம்பாடி கல்லக்குடி-பழங்காநத்தம் கல்லகம் சில்லக்குடி அரியலூர் ஒட்டக்கோவில் வெள்ளூர் செந்துறை மாத்தூர் ஈச்சங்காடு-ஹால்ட் ஈச்சங்காடு பெண்ணாடம் தாழநல்லூர் விருதாச்சலம்-டவுன் விருதாச்சலம் உத்தங்கல்-மங்கலம் நெய்வேலி வடலூர் குறிஞ்சிப்பாடி கடலூர் துறைமுகம் !!
❎ திருப்பாதிரிப்புலியூருக்கு இரவு செல்லக்கூடிய இந்த ரயில் பெட்டிகள் மீண்டும் காலியாக கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் வந்து சேரும் // அங்கு இதற்கான பெட்டி பகிர்மானம் இருக்கிறது !! கடலூர் சேலம் ரயிலுடன் பெட்டி பகிர்மானம் செய்து இந்த ரயில் இயங்குகிறது || இதன் மூலம் இரவு மற்றும் அதிகாலையில் காலியாக பெட்டிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இடையே சென்று வருகிறது !! திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் தான் கடலூரிஅன ஒரு முக்கியமான பகுதியை இணைக்கிறது ✅
மிகவும் குறைவான கட்டணமான ₹40-ல் இந்த ரயில் மூலம் திருச்சியிலிருந்து கடலூருக்கு நீங்கள் பயணிக்க முடியும் 😱 குறைவான கட்டணத்தில் பயணிப்பதற்கு இது ஒரு அருமையான ரயில் இணைப்பு ஆகும் ‼️

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

மயிலாடுதுறை- சேலம் -மயிலாடுதுறை - தினமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

 

சேலத்தில் இருந்து திருச்சி வழியாக தினமும் மயிலாடுதுறை வரை செல்லும் மெமு விரைவு ரயில் இது // 12 முன்பதிவில்லா பெட்டிகள் 🙂‍↕️

➡️ வண்டி எண் :- 16812/16811 || MEMU EXPRESS
• சேலம் சந்திப்பு ⟨⟨≈⟩⟩ மயிலாடுதுறை •
" முன்பதிவில்லா விரைவு வண்டி "

📌 சேலத்தில் இருந்து தினமும் மதியம் 02:05 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ராசிபுரம் நாமக்கல் கரூர் குளித்தலை திருச்சிராப்பள்ளி பூதலூர் தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக இரவு 09:30 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேருகிறது !!

📌 மயிலாடுதுறையில் இருந்து தினமும் காலை 06:15 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி குளித்தலை கரூர் நாமக்கல் ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 01:15 மணி செல்கிறது !!

🔴 இதன் வழித்தடத்தில் மொத்தம் 43 ரயில் நிலையங்களில் இந்த விரைவு ரயில் நின்று செல்கிறது // குறிப்பாக எடுத்து கொண்டால் அனைத்து நிலையத்திலும் நின்று செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும் !! ஒரு சில நிலையங்களில் மட்டும் நிற்காது ....

⬆️ ஆரம்பத்தில் மயிலாடுதுறை திருச்சி //
திருச்சி கரூர் சேலம் என மூன்று ரயில்களாக இயங்கி வந்து இந்த ரயில்கள் பிறகு ஒரே ரயிலாக ஒன்றிணைக்கப்பட்டு சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை விரைவு ரயிலாக தற்போது இயக்கப்பட்டு வருகிறது ✅

🚃 இந்த ரயிலில் மொத்தமாக 12 முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது // MEMU வகை பெட்டிகள் ஆகும் -- இதில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது !!

‼️282 கிமீ தூரம் இந்த UR விரைவு ரயில் பயணித்து சேலத்திற்கு சென்று வருகிறது !!

💢 இந்த ரயிலில் பயணிப்பதற்கு மெயில் எக்ஸ்பிரஸ் வரை டிக்கெட் எடுக்க வேண்டும்

என்னதான் இது முழுவதும் முன்பதிவு இல்லா ரயிலாக இருந்தாலும் இது விரைவு கட்டண வகை ரயிலாக செயல்பட்டு வருகிறது ‼️

📸 படம் || சேலத்தில் இருந்து திருச்சி வந்த ரயில் திசை மாறிய பிறகு தற்போது மயிலாடுதுறை நோக்கி செல்கிறது ||
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

முயற்சி - வறுமை - உழைப்பு -விடாமுயற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips

 May be an image of dais

#மும்பை நடைமேடையில் வெறும் 500 ரூபாயுடன் உறங்கிய ஒரு இளைஞர், இன்று 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான தைரோகேர் சாம்ராஜ்யத்தின் தலைவராகியுள்ளார்! 
 
#கஷ்டங்கள், #கண்ணீர், வறுமை... இவை பலரை பலவீனமாக்கிவிடும். ஆனால், சிலரால் உலகையே பெருமைப்படுத்த முடியும். கையில் ஐநூறு ரூபாய் கூட இல்லாத, தலைமறைவாக இடமில்லாமல், ரயில் நிலைய நடைமேடைகளில் இரவுகளைக் கழித்த ஒரு சாதாரண ஏழை இளைஞன், இந்தியாவின் மிகப்பெரிய நோயறிதல் வலையமைப்பை உருவாக்கி, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவான் என்று யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா?
 
இது ஒரு திரைப்படக் கதை அல்ல, மாறாக ஒரு சாமானிய மனிதனின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் நிஜ வாழ்க்கைக் கதை, அவனது அசாதாரண வெற்றியால் எழுதப்பட்டது. அவர்தான் தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் நிறுவனர் டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி.
 
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து நாயகனாக உயர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் ஒரு சிறந்த பாடம்.
டாக்டர் வேலுமணியின் பின்னணி மற்றும் முகவரி
இந்தியத் தொழில் துறையில் 'வறுமையிலிருந்து செல்வம்' என்ற கதைகளுக்கு டாக்டர் வேலுமணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 
பிறந்த இடம்/கிராமம்:
 
டாக்டர் ஏ. வேலுமணி, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள #கோயம்புத்தூர் அருகே #அப்பநாயக்கம்பட்டி புதூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவர் ஒரு ஏழை, நிலமற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருந்தது. 
 
தாயின் தியாகம்:
 
வேலுமணி மேல்படிப்பு படிக்க விரும்பியபோது, கல்லூரிக் கட்டணம் செலுத்தக்கூட வீட்டில் பணம் இல்லை. அந்த நேரத்தில், அவரது தாய் தன்னிடம் இருந்த தங்க வளையல்களை விற்று, அவரது கல்லூரிக் கல்விக்கான பணத்தைத் திரட்டினார். அந்தத் தியாகம்தான் அவரது வாழ்க்கையை மாற்றிய முதல் படியாகும்.
 
#மும்பைக்கு வருகையும் மேடை வாழ்க்கையும்.
தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, சொந்த ஊரில் முறையான வாய்ப்புகள் இல்லாததால், வேலுமணி தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பதற்காக 1982-ஆம் ஆண்டு கனவு நகரமான மும்பைக்கு வந்தார். அந்த நேரத்தில், அவர் கையில் ₹500 மட்டுமே இருந்தது.
 
மும்பையில் உள்ள வி.டி (தற்போது #சத்ரபதி_சிவாஜி மகாராஜ் முனையம் - சி.எஸ்.எம்.டி) ரயில் நிலையத்தில் அவர் ரயிலிலிருந்து இறங்கியபோது, அவருக்குத் தங்குவதற்கு அறையும் இல்லை, தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஒரு அறையை வாடகைக்கு எடுக்கப் போதுமான பணம் இல்லாததால், அவர் தனது முதல் சில இரவுகளை ரயில் நிலைய நடைமேடைகளில் கழித்தார். பசியும் பாதுகாப்பின்மையும் நிறைந்த அந்த நாட்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக மாற்றின.
 
அவர் சுமார் 50 வேலை நேர்காணல்களில் கலந்துகொண்டு ஏமாற்றமடைந்தார். ஆனால் அவர் மனம் தளரவில்லை. இறுதியாக, மும்பையில் உள்ள புகழ்பெற்ற **பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) ஆய்வக உதவியாளராக ஒரு சிறிய வேலை கிடைத்தது.
 
அங்கு பணிபுரிந்தபோது, அவர் கடினமாகப் படித்து தைராய்டு உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று ஒரு 'மருத்துவர்' ஆனார். அங்கு அவர் சுமார் 14 ஆண்டுகள் ஒரு நிலையான அரசுப் பணியில் தொடர்ந்தார்.
 
ரூ. 1 லட்சத்தில் தொடங்கிய '#தைரோகேர்' புரட்சி
அரசு வேலை என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான வருமானத்தைக் குறிக்கும். ஆனால், டாக்டர் வேலுமணியின் மனதில் புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 1995-ல், அனைத்து தடைகளையும் மீறி, அவர் தனது பாதுகாப்பான அரசு வேலையை ராஜினாமா செய்தார். தனது வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) ₹1 லட்சம் முதலீடு செய்து,
 
 மும்பையின் பைகுல்லா பகுதியில் வெறும் 150 சதுர அடி பரப்பளவுள்ள ஒரு சிறிய வாடகை இடத்தில் ஒரு சிறிய தைராய்டு பரிசோதனை ஆய்வகத்தைத் தொடங்கினார்.
 
அக்காலத்தில், தைராய்டு பரிசோதனைகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. அவை சாமானிய மக்களுக்குக் கிடைக்கவில்லை. டாக்டர் வேலுமணி ஒரு புதுமையான யோசனையுடன் வந்தார். அவர் "அதிக அளவு, குறைந்த விலை" என்ற கொள்கையை நம்பினார். அவர் ஒரு தனித்துவமான ஃப்ரான்சைஸ் மாதிரியை அறிமுகப்படுத்தி, நாடு முழுவதிலுமிருந்து மாதிரிகளைச் சேகரித்து மும்பையில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பும் ஒரு முறையை உருவாக்கினார். இதன் காரணமாக, தைராய்டு பரிசோதனைகள் சாமானிய மக்களுக்குச் சந்தை விலையில் பாதியிலேயே கிடைத்தன.
 
₹7,000 கோடி சாம்ராஜ்யம் மற்றும் பங்கு விற்பனை
டாக்டர் வேலுமணியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வணிக மாதிரி மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு சில ஆண்டுகளில், 'தைரோகேர்' பிராண்ட் இந்தியாவின் ஒவ்வொரு தெருவிற்கும் நகரத்திற்கும் பரவியுள்ளது. இது நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் மலிவு விலையிலான நோயறிதல் ஆய்வகம் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது.
 
இந்நிறுவனம் மிக வேகமாக வளர்ந்ததால், பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு, அதன் சந்தை மதிப்பு (சந்தை மூலதனம்) சுமார் ₹7,000 கோடியை எட்டியது. பின்னர் 2021-ல், டாக்டர் வேலுமணி, தைரோகேர் நிறுவனத்தில் தனக்கு இருந்த 66% பெரும்பான்மைப் பங்குகளை, முன்னணி ஆன்லைன் மருந்தக நிறுவனமான 'ஃபார்ம்ஈஸி'க்கு சுமார் ₹4,546 கோடிக்கு விற்றார். தற்போது, டாக்டர் வேலுமணியின் தனிப்பட்ட நிகர மதிப்பு ₹5,000 கோடிக்கும் அதிகமாக** மதிப்பிடப்பட்டுள்ளது.
 
முடிவுரை:
 
கோயம்புத்தூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு ஏழைச் சிறுவன், தன் தாய் வளையல்கள் விற்றுக் கொண்டிருந்தபோது கல்வி கற்றவன், இன்று தனது அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் காரணமாக ₹5,000 கோடி மதிப்புள்ள சொத்துக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறான். "என் வறுமையே என் மிகப்பெரிய பலம், ஏனென்றால் நான் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆனால் பெறுவதற்கு இந்த முழு உலகமும் இருக்கிறது," என்று டாக்டர் வேலுமணி எப்போதும் கூறுவார். வணிக உலகில் நுழைய விரும்பும் ஒவ்வொரு சாதாரண இளைஞருக்கும் டாக்டர் வேலுமணியின் வாழ்க்கை ஒரு நிலையான உத்வேகமாக விளங்குகிறது.
 
#முயற்சி #வறுமை #உழைப்பு #விடாமுயற்சி
#பகிர்வு
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

"என் கடைசி மூச்சு உள்ள வரை பாரத மாதாவுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 May be an image of text

"என் கடைசி மூச்சு உள்ள வரை பாரத மாதாவுக்கு சேவை செய்வேன்"; தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உருக்கம்...!
 
பாகிஸ்தான் நாட்டில் 7 ஆண்டுகள் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்து, அந்நாட்டு ராணுவத்தின் மிக முக்கியமான அணு சக்தி ரகசியங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் அஜித் தோவல்.
 
அங்குள்ளவர்கள் நம்பும் படியாக உருது மொழியைத் தாய்மொழியாகப் பேசி, தினமும் மசூதிக்குச் சென்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் நெருங்கிய நண்பராகப் பழகிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்தனை ரகசியங்களையும் இந்தியாவிடம் ஒப்படைத்தார்.
 
எந்தவிதச் சந்தேகமும் இன்றி, அவர் பாகிஸ்தானின் ஒரு நிஜ குடிமகனாகவே அந்நாட்டு அதிகாரிகளால் பார்க்கப்பட்டது தான் அவரது உளவுத் திறமைக்கான சான்று
 
யாரும் எளிதில் நுழைய முடியாதபடி ​மிகவும் பாதுகாக்கப்பட்ட பாகிஸ்தானின் அணுசக்தி மையத்திற்கு வெளியே பிச்சைக்காரனாக வேடமிட்டு அமர்ந்து, அந்த அணுசக்தித் திட்டத்தின் அத்தனை ரகசியங்களையும் அவர் உலகிற்குத் தோலுரித்துக் காட்டினார். 
 
பாகிஸ்தானுக்கே தெரியாமல் மிக அமைதியாக இந்தியா திரும்பிய அவர், இன்று இந்தியாவின் மிக நீண்ட கால தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (NSA) தேசத்தைக் காத்து வருகிறார். 
 
81 வயதிலும், ப*யங்கரவா*த எதிர்ப்பு, எல்லைப் பாதுகாப்பு, உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு தொடர்பான முக்கிய விஷயங்களில் தோவல் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 
அவர் வயதை கருத்தில் கொண்டு அவர் நலன் விரும்பிகளும் மருத்துவரும் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். 
 
ஆனால் அவரோ என் கடைசி மூச்சு உள்ளவரை பாரத மாதாவுக்கு சேவை செய்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். 
 
இந்த உணர்ச்சிப்பூர்வமான கூற்று, தற்போது சமூக ஊடகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் அவரது அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தைப் பாராட்டி வருகின்றனர். 
 
மக்களே! இது பற்றிய உங்க கருத்து என்ன..?
 

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - ராகு கேது சிறப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 5:23 PM | Best Blogger Tips

 காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில். –  தில்லை கீதம்

 

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - ராகு கேது சிறப்புகள் மற்றும் வரலாறு

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம்.
 
1. ஒரே திருமேனியில் 7 நாகங்கள் (ராகு-கேது சிறப்பு):
 
அரிய வடிவமைப்பு: பொதுவாக ராகு, கேது தனித்தனியாக இருப்பார்கள். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் ராகுவும் கேதுவும் ஒரே திருமேனியில் (ஒரே சிலையாக) ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி (அணைத்தவாறு) காட்சியளிப்பது மிக அரிய அமைப்பாகும்.
மரண பயத்தை அடியோடு போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் : இன்று  ஒரு கோயில் 
7 தலை நாகம்: இந்த ஒரே திருமேனியின் தலைப்பகுதியில் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் (சர்ப்பம்) குடையாகக் கவிழ்ந்து நிழல் தருவது போல் இச்சிலை அமைந்துள்ளது.
 
ஏழு பிறவி வினை நீங்கும்: இந்த 7 நாகங்கள் கொண்ட ராகு-கேதுவை வணங்கும்போது, மனிதர்களின் ஏழு பிறவிகளாகத் தொடரக்கூடிய கர்ம வினைகளும், நாக தோஷங்களும், காலசர்ப்ப தோஷங்களும் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
Vanchinathar Temple : Vanchinathar Temple Details | Vanchinathar- Sri  Vanchiam | Tamilnadu Temple | வாஞ்சிநாதர் 
யோக ராகு-கேது: இத்தலத்தில் இவர்கள் "யோக ராகு", "யோக கேது" என்று அழைக்கப்படுகிறார்கள். தங்களை நாடி வரும் பக்தர்களுக்குத் தீமை செய்யாமல் நன்மைகளையும் யோகத்தையும் மட்டுமே வழங்குபவர்கள்.
ஓருடல் ஈருயிராய் ராகு கேது | Dinakaran 
2. தல வரலாறு (ஸ்ரீவாஞ்சியம் பெயர் காரணம்):
பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். பின்னாளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், லட்சுமி தேவி பிரிந்து பூலோகம் வந்தார்.
 
தன் கணவரை மீண்டும் அடைய நினைத்த லட்சுமி தேவி, இத்தலத்திற்கு வந்து "குப்த கங்கை" தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தார்.
 
லட்சுமியின் தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், மகாவிஷ்ணுவை இங்கு வரவழைத்து இருவரையும் சேர்த்து வைத்தார். மகாவிஷ்ணு தன் மனைவியை "வாஞ்சித்து" (விரும்பி) வந்து சேர்ந்த இடம் என்பதால் இத்தலம் 'ஸ்ரீவாஞ்சியம்' என்றும், இறைவனுக்கு 'வாஞ்சிநாதர்' என்றும் பெயர் வந்தது.
ஒரே சிலையால் ஆன ராகு, கேது பகவான் ஸ்ரீவாஞ்சியம், நன்னிலம், திருவாரூர்.  கிரகண காலத்தில் திறந்திருக்கும் ஒரே கோயில் ஸ்ரீவாஞ்சியம் ... 
3. எம தர்மராஜனுக்கு முதலிடம் (மரண பயம் நீக்கும் தலம்):
உயிர்களை எடுக்கும் பணியால் ஏற்பட்ட பாவங்கள் நீங்க, எமதர்மன் இத்தலத்தில் சிவனை நோக்கி தவமிருந்தார். சிவன் அவருக்குக் காட்சியளித்து, "இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் உன்னை வணங்கிய பிறகே என்னை வணங்குவார்கள்" என்று வரமளித்தார்.
எனவே, இக்கோயிலில் நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசிப்பது எம தர்மராஜனின் சன்னதியைத்தான். இதனால் மரண பயம் நீங்கும்.
4. காசியை விட வீசம் பெரியது:
"காசியில் மரித்தால் முக்தி, ஸ்ரீவாஞ்சியத்தில் வாழ்ந்தாலே முக்தி" என்ற பழமொழி உண்டு. காசிக்கு நிகரான 6 ஸ்தலங்களில் ஸ்ரீவாஞ்சியம் முதன்மையானது. காசியை விட ஒரு பங்கு (வீசம்) கூடுதல் புண்ணியம் தருவதால் இதற்கு "காசியிலும் வீசம் பெரியது" என்ற பெருமை உண்டு.
 
5. குப்த கங்கை தீர்த்தம்:
கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தங்கள்! – தில்லை கீதம் 
இங்குள்ள திருக்குளம் "குப்த கங்கை" என்று அழைக்கப்படுகிறது. கங்காதேவி மனிதர்களின் பாவங்களைத் துடைத்து தன் பாவம் நீங்க இத்தலத்து குளத்தில் ரகசியமாக (குப்த்தமாக) நீராடுவதாக ஐதீகம். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடுவது மகா புண்ணியம்.
வழிபாட்டு முறை:
முதலில் குப்த கங்கையில் நீராடி, பின்னர் எம தர்மராஜனை வழிபட்டு, அதன்பின் மூலவர் வாஞ்சிநாதர், அம்பாள் மங்களாம்பிகை மற்றும் 7 நாகங்கள் கொண்ட யோக ராகு-கேதுக்களை தரிசிப்பது முழுமையான பலனைத் தரும்.
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling, monument and temple🌷 🌷🌷 🌷