திண்டுக்கல் முதல் காரைக்கால் நேரடியாக

மணக்கால் அய்யம்பேட்டை | 10:15 AM | Best Blogger Tips

May be an image of train

 

திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை காலை நேரத்தில் செல்லும் தொடர் பயணிகள் ரயில் சேவை இது 😍 நேரடியாக செல்ல முடியும் ✅

➡️ திண்டுக்கல் முதல் திருச்சி // திருச்சி முதல் காரைக்கால் என இரண்டு ரயில்களாக இந்த ரயில் ஒரே தொடர் சேவையில் இயக்கப்பட்டு வருகிறது || காலை நேரத்தில் மட்டும் ‼️

₹55 மட்டுமே திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை செல்வதற்கு இந்த ரயிலில் 🥰

திண்டுக்கல்ளில் ஏறினால் நேரடியாக நீங்கள் இந்த ரயில் மூலம் காரைக்கால் வரை பயணிக்க முடியும் 😱 தொடர் பயணிகள் ரயில் சேவையாக இந்த சேவை உள்ளது ....

⛔
வண்டி எண் :- 76836⟩⟩76820 ||
திண்டுக்கல் ≈ திருச்சி ≈ காரைக்கால்
" தொடர் பயணிகள் ரயில் சேவை "

🚂 76836 || திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி டெமு பயணிகள் ரயில் தினமும் காலை 06:15 மணிக்கு திண்டுக்களில் புறப்படுகிறது ⟩⟩

• இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து தாமரைப்பாடி வடமதுரை அய்யலூர் கல்பாத்திசத்திரம் வையம்பட்டி செட்டியாபட்டி மணப்பாறை சமுத்திரம் கொளத்தூர் பூங்குடி வழியாக திருச்சிராப்பள்ளிக்கு காலை 08:30 மணிக்கு சென்று சேருகிறது ‼️

தொடர்ந்து திருச்சியில் இருந்து இதே ரயில் அடுத்த 10 நிமிடங்களில் காரைக்கால் நோக்கி புறப்பட்டு செல்கிறது || திண்டுக்கலில் இருந்து வரும் அதே பெட்டிகள் தான் 👇

🚂 76820 || திருச்சிராப்பள்ளி காரைக்கால் டெமு பயணிகள் ரயிலாக தினமும் காலை 08:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து காலையில் புறப்படுகிறது ⟩⟩

• இந்த ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொன்மலை மஞ்சத்திடல் திருவெரும்பூர் தொண்டமான்பட்டி சோலகம்பட்டி அயனாபுரம் பூதலூர் ஆலக்குடி தஞ்சாவூர் குடிக்காடு சாலியமங்கலம் அம்மாப்பேட்டை கோயில்வென்னி நீடாமங்கலம் கொரடாச்சேரி திருமதிக்குன்னம் குளிக்கரை திருவாரூர் அடியாக்கமங்கலம் கூத்தூர் கீழ்வேளூர் சிக்கல் அந்தணப்பேட்டை நாகப்பட்டினம் வெளிப்பாளையம் நாகூர் திருமலைராயன்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காரைக்காலுக்கு மதியம் 01:40 மணிக்கு சென்று சேருகிறது ✅

📌
இந்த ரயிலில் மொத்தமாக 8 பெட்டிகள் உள்ளது || 🟥🟦🟦🟦🟦🟦🟦🟥 8 CAR DEMU
(( கழிப்பறை வசதியும் உள்ளது ))

📦 இதன் மூலம் நீங்கள் காலை நேரத்தில் திண்டுக்கல் முதல் திருச்சி வரை வரும் இந்த ரயில் மூலமாக காரைக்கால் வரை செல்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது || இதற்கான நேரடி டிக்கெட் நீங்கள் ஏறக்கூடிய நிலையங்களிலேயே எடுத்துக் கொள்ள முடியும் // குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் நேரடி டிக்கெட் கொடுக்கப்படும் 🔥

📲 RAILONE = செயலியை பதிவிறக்கம் செய்து இதன் மூலமாக நீங்கள் UNRESERVED டிக்கெட்டை உங்கள் மொபைல் போனிலேயே எடுத்துக் கொள்ள முடியும் // வழித்தடத்தில் தேர்வு செய்து நேரடியாக நீங்கள் ஏறும் நிலையம் முதல் காரைக்கால் வரை டிக்கெட் பதிவு செய்து கொள்ள முடியும் ❗ எந்தவித சிரமமும் இன்றி எடுத்துக் கொள்ளலாம் !!

🟥 திருவாரூர் வரை மட்டுமே செல்கிறது 👇

⚠️ முக்கிய குறிப்பு :- குறிப்பிட்ட மாதங்களில் இந்த ரயில் தண்டவாளப் பணிகள் காரணமாக அவ்வப்போது திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது // அவ்வப்போது மாற்றங்களை மட்டும் தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை துவங்குவது நல்லது !!

அந்த நாட்களில் நீங்கள் இந்த ரயில் மூலம் திருவாரூர் வரை மட்டுமே பயணிக்க முடியும்
(( இந்த ஜூன் மாதத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் கூட அவ்வாறு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ))

இதை பயணத்தை துவங்குவதற்கு முன்பு ரயில் எங்கு வரை செல்கிறது என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் // தொடர்ந்து இது பல மாதங்களாக தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயிலின் சேவையில் மட்டும் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ||

⏱️ NTES செயலி :-

>> எனவே NTES ரயில்களின் அதிகாரப்பூர்வ செயலின் மூலம் நாளை என்ன மாற்றம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள் 📌

திருவாரூர் வரை சென்றால் இதில் நீங்கள் காரைக்கால் வரை செல்ல முடியும் !! அந்த நாட்களில் திருவாரூர் வரை மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து பயணிக்க முடியும்

>> திருவாரூர் சென்று அங்கிருந்து தான் நாகப்பட்டினம் காரைக்கால் போன்ற பகுதிகள் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் !!

இதை மட்டும் பார்த்துக் கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

✔️ திண்டுக்கல் முதல் காரைக்கால் வரை செல்லும் இந்த தொடர் பயணிகள் ரயில் சேவை ஒரு மார்க்கத்தில் மட்டுமே உள்ளது || மறு மார்க்கத்தில் காரைக்காலில் இருந்து வரும் ரயில் திருச்சி வரை மட்டுமே வரும் !! அந்த ரயில் தொடர்ந்து திண்டுக்கல் வரை செல்லாது. அதற்கு முன்பு திண்டுக்கல் செல்லக்கூடிய ரயில் திருச்சியில் புறப்பட்டு சென்றுவிடும் // திருச்சி வரை வந்து வேறு ரயில் மாறி செல்லும் வேண்டிய நிலைதான் ஏற்படும் மாலை நேரத்தில் வந்தால் ‼️

(( பழைய முறை :- இன்னும் பலர் நினைத்துக் கொண்டிருப்பது மதியம் காரைக்காலில் புறப்படக்கூடிய ரயில் நேரடியாக திண்டுக்கல் செல்லும் என்று , அவ்வாறு எதுவும் இப்போது கிடையாது ❌ திண்டுக்கல் செல்வதற்கு நீங்கள் திருச்சியில் இறங்கி அந்த ரயிலில் இருந்து வந்து ரயில் மாற வேண்டும் || இணைப்பு உள்ளது ஆனால் நேரடியாக அதே ரயில் பெட்டிகள் செல்லும் என்பது இல்லை ))

➡️ திண்டுக்கலில் இருந்து திருச்சி தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் நாகூர் காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு வரக்கூடிய மக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள முடியும்

✝️வேளாங்கண்ணி செல்ல நாகப்பட்டினத்தில் இறங்கி பேருந்து மூலமாக செல்ல முடியும் !! நாகப்பட்டினம் முதல் வேளாங்கண்ணி வரை அடிக்கடி பேருந்து வசதி உள்ளது //

🕌 நாகூர் , காரைக்கால் வரை இந்த ரயில் நேரடியாக பயணிக்கிறது || 🛕திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தரிசன மேற்கொள்வதற்கு காரைக்காலில் இறங்கி பேருந்து மூலமாக பயணிக்க முடியும் // காரைக்கால் ரயில் நிலையம் வாசலிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது அதில் ஏறி திருநள்ளாறு வரை பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது !!

📌 திண்டுக்கல் மதுரை போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் இதுவரை எந்த தினசரி ரயிலும் டெல்டா பகுதியில் கடலோர பகுதிக்கு கிடைக்கவில்லை 📍 இது போன்ற தொடர் பயணிகள் ரயிலை பயன்படுத்தும் பொழுது நேரடியாக குறைவான பயண நேரத்தில் குறைவான கட்டணத்தில் பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்க பெறுகிறது // இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷