
சேலத்தில் இருந்து திருச்சி வழியாக தினமும் மயிலாடுதுறை வரை செல்லும் மெமு விரைவு ரயில் இது // 12 முன்பதிவில்லா பெட்டிகள் ![]()
வண்டி எண் :- 16812/16811 || MEMU EXPRESS
• சேலம் சந்திப்பு ⟨⟨≈⟩⟩ மயிலாடுதுறை •
" முன்பதிவில்லா விரைவு வண்டி "
சேலத்தில் இருந்து தினமும் மதியம் 02:05 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை
மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ராசிபுரம் நாமக்கல் கரூர் குளித்தலை
திருச்சிராப்பள்ளி பூதலூர் தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக இரவு 09:30 மணிக்கு
மயிலாடுதுறை சென்று சேருகிறது !!
மயிலாடுதுறையில் இருந்து தினமும் காலை 06:15 மணிக்கு புறப்பட்டு
கும்பகோணம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சி குளித்தலை கரூர் நாமக்கல் ராசிபுரம்
வழியாக சேலத்திற்கு மதியம் 01:15 மணி செல்கிறது !!
இதன் வழித்தடத்தில் மொத்தம் 43 ரயில் நிலையங்களில் இந்த விரைவு ரயில்
நின்று செல்கிறது // குறிப்பாக எடுத்து கொண்டால் அனைத்து நிலையத்திலும்
நின்று செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும் !! ஒரு சில நிலையங்களில்
மட்டும் நிற்காது ....
ஆரம்பத்தில் மயிலாடுதுறை திருச்சி //
திருச்சி
கரூர் சேலம் என மூன்று ரயில்களாக இயங்கி வந்து இந்த ரயில்கள் பிறகு ஒரே
ரயிலாக ஒன்றிணைக்கப்பட்டு சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை விரைவு ரயிலாக
தற்போது இயக்கப்பட்டு வருகிறது ![]()
இந்த ரயிலில் மொத்தமாக 12 முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது // MEMU வகை
பெட்டிகள் ஆகும் -- இதில் கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது
!!
282 கிமீ தூரம் இந்த UR விரைவு ரயில் பயணித்து சேலத்திற்கு சென்று வருகிறது !!
இந்த ரயிலில் பயணிப்பதற்கு மெயில் எக்ஸ்பிரஸ் வரை டிக்கெட் எடுக்க வேண்டும்
என்னதான் இது முழுவதும் முன்பதிவு இல்லா ரயிலாக இருந்தாலும் இது விரைவு கட்டண வகை ரயிலாக செயல்பட்டு வருகிறது ![]()
படம் || சேலத்தில் இருந்து திருச்சி வந்த ரயில் திசை மாறிய பிறகு தற்போது மயிலாடுதுறை நோக்கி செல்கிறது ||
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

