ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

May be an image of 2 people and temple 

*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*.

*இது இந்தியாவின் உண்மை*.

*அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*.

*ஆம்*...

*அது நாமாகவோ*,

*நம் தாயாகவோ*, *தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்*

*இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்*.

*நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,

அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் *நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்*

*வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்*

*கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து*, *பிரார்த்தனை செய்பவர்கள்*,

*தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*.

*வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*,

*அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்*

*இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*.

*வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்*

*அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*.

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்

*அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்*,

*அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*.

செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்

தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்

*எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*,

*கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்*

*சமூக பயம் உள்ளவர்கள்*,

*பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்*

*பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*.

*கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்*

*வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்*

*எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*.

*இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*?

*உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*?

*ஆம் எனில்*, *அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*.

*மரியாதை கொடுங்கள்*

*அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்*

*இல்லையெனில்* *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்*

*அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*,

*கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*,

*மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை*

*எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*.

*எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*.

*நம்முன்னோர்களே நமது அடையாளம்*.

*அவர்களே நமது முகவரி*

*மற்றும் நமது பெருமை*

🙏

*அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*.

*அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*.

*எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்*

*எண்ணுவம் என்பது இழுக்கு.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

எம். எஸ். சுப்பு லட்சுமி......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and smiling

எம். எஸ். சுப்பு லட்சுமி......
 
‘’ரகுபதிராகவ ராஜாராம்’ எனும் பாடல் உலகத் தமிழர்களுக்குப் பிடித்த பாடல்.மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல்.
 M.S. Subbulakshmi Songs: Listen M.S. Subbulakshmi Hit Songs on ...
‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார் காந்தி. இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.
 M.S. Subbulakshmi passes away, aged 88 - The Hindu
திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடலே.
 M S Subbulakshmi and her music - Part 11: Neraval - Various
"இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என ஒருவரை பார்த்து சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார். ஆம். 
 
அவர்தான் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி.
 Vidya Balan pays visual ode to Bharat Ratna MS Subbulakshmi on her ...
எம். எஸ். சுப்புலட்சுமி யின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார். சிறந்த வீணைக் கலைஞ்ராகவும் திகழ்ந்த இவர் இசை உலகில் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப் பட்டார்.
 Black And White Portrait Of M. S. Subbulakshmi - Framed Prints by Mahesh |  Buy Posters, Frames, Canvas & Digital Art Prints | Small, Compact, Medium  and Large Variants
குடும்பத்தார் அழைத்த பெயர் குஞ்சம்மாள். 
 
அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான்.
 
சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது.
 
விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார். 
 1991-2000 – MS Subbulakshmi Biography
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 
 
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய்.
 
அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப் பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா.
 
ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. பெண்ணிய மனுஷி சரோஜினி நாயுடு அவர்களுடன் மகாகவி பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற மேதைகளின் தமிழ்ப் பாடல்களை மேடை தோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும்.
 
இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு "இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்றைக்கும் மிகவும் பிரபலமானது.
 
அவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான்.
 
இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது.
 
இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
 
1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
 
1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
 
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷

ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

ரயில் இன்ஜின் ஹாரனில் எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
 
நாம் ரயிலில் பயணிக்கும் போது ரயிலின் ஹாரன் சத்தம் நம் காதை பிளக்கும். இப்படியான ரயிலின் ஹாரன் சத்தத்திற்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன? மொத்தம் எத்தனை விதமான ஹாரன் சத்தங்கள் இருக்கிறது? 
 Indian Railways MEGA HORN COMPILATION - Best Locomotive Horns in the World  (Part 2) - YouTube
நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம் ரயில் பயணம் என்பது மிக வித்தியாசமான சுகமான அனுபவத்தைத் தரக்கூடியது. இதுவரை ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்ற ஒரு மனிதன் இருந்தால் அவர் துரதிருஷ்டசாலி தான். ரயில் பயணம் ஏழைக்கு ஏற்ற சுகமான பயணமாக இருக்கும். இந்த ரயிலைக் கண்டாலே ஒரு பிரம்மாண்டம் தான்.
 What are the duties of a train driver? How does a signal work?
மிகப்பெரிய இன்ஜின் நீளமான பெட்டிகள், அதிக சத்தம் என எல்லாமே பெரிதாக இருக்கும் இந்த ரயிலில் பிரம்மாண்டத்திற்குப் பஞ்சம் ஏது? இப்படிப்பட்ட ரயிலில் பயணிக்கப் பல விதிமுறைகள் உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி, ஏசி பெட்டிகள், எல்லாம் உள்ளன. இந்த ரயிலில் பயணிக்கும் போது நாம் நடுவில் உள்ள பெட்டியில் பயணிக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். காரணம் இறங்கும் இடத்திற்கு அருகில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே செல்லும் பாதை இருக்கும் அதே நேரம் இன்ஜினின் சத்தமும் இருக்காது.
 
இன்ஜினிற்கு பின்னால் உள்ள பெட்டியில் இருப்பவர்களுக்கு இன்ஜின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தும். அடிக்கடி ரயில் டிரைவர்கள் ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ரயிலில் ஹாரன் அடிப்படி ரயில்வே டிராக்கில் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், தண்டவாளங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு ரயில் வருவதை எச்சரிக்க என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது தான் இல்லை. ரயில்வே ஓட்டுநர்கள் இந்த ஹாரனை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். 
 
இதற்காக மொத்தம் 11 வகையான ஹாரன் சத்தங்கள் ஒரு ரயில் ஓட்டுநருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிய நேரத்தில் அவர் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாற இதைப் பயன்படுத்துவார் அந்த 11 ஹாரன் சத்தங்கள் என்ன? அது என்ன தகவலைச் சொல்கிறது? 
 சென்னையில் புதிதாக 3 மின் ரயில் சேவை தொடக்கம்: 5 மின்சார ரயில்கள் சேவை  நீட்டிப்பு | 5 Electric trains service extension in chennai - hindutamil.in
11 வகை ஹாரன் என்றால் ஒவ்வொன்றும் வேறு வேறு சத்தம் என அர்த்தம் இல்லை ஒரே ஹாரனை அடிக்கும் முறையில் 11 விதம் இருக்கிறது. அதில் #முதல் விதம் ஒரு சிறிய ஹாரன் இதற்கு அர்த்தம் ரயிலை அதன் டிரைவர் பணிமனைக்குள் சுத்தம் செய்ய எடுத்து வருகிறார் அல்லது சுத்தம் செய்த பின்பு பணிமனையிலிருந்து எடுத்த செல்கிறார் என அர்த்தம்
 
#இரண்டாவது வகை இரண்டு முறை சிறிய ஹாரன் அடிப்பது. இந்த ஹாரனிற்கு அர்த்தம் ரயிலில் டிரைவர் ரயிலின் பின்னால் உள்ள கார்டிற்கு ரயில் கிளம்புவதற்கு சிக்னல் செய்கிறார் என அர்த்தம் பொதுவாக ரயில் ஒரு ஸ்டேஷனிலிருந்து கிளம்பும் போது இந்த ஹாரன் சத்தத்தை நீங்கள் கேட்கலாம்
 
அடுத்தது #மூன்று முறை சிறிய ஹாரன் அடிப்பது. இது மிக அரிதாகவே அடிக்கப்படும். இதற்கு அர்த்தம் ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இல்லை என பின்னால் இருக்கும் கார்டிற்கு சிக்னல் செய்வதாக அர்த்தம். இந்த சிக்னல் கிடைத்ததும் ரயிலில் பின்னால் உள்ள அட்டை தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த வேண்டும். இந்த வகை ஹாரன் மிக அரிதாகப் பயன்படுத்தப்பட்டாலும் இது ஆபத்து என்பதை உணர்த்தும் சிக்னல்
அடுத்தது #நான்கு முறை சிறிய ஹாரன் அடிப்பது.
 
இந்த ஹாரன் ரயில் நிற்கும் நிலையில் தான் அடிக்க வேண்டும். ரயில் ஏதாவது தொழிற்நுட்ப கோளாறு, அல்லது ஓடும் பாதையில் சிக்கல் ஏற்பட்டு அடுத்து ரயில் தன் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால் பின்னால் உள்ள கார்டிற்கு டிரைவர் 4 முறை ஹாரன் அடித்து தகவலைக் கொடுப்பார்
 
#ஐந்தாவது ஹாரன் வகை தொடர் ஹாரன் ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நிற்காமல் வேகமாகச் சென்றால் அந்த ரயில்நிலையத்தைக் கடக்கும் போது ரயிலில் தொடர் ஹாரன் அடிக்க வேண்டும். நீங்கள் ரயிலில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டால் நீங்கள் ஏதோ ரயில் ரயில் நிலையத்தை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்
 
அடுத்தது #ஆறாவதாக ஒரு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். இதற்கு அர்த்தம். இது பெரும்பாலும் ரயில் கிளம்பும் இடத்தில் அடிக்கப்படும் ரயில் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் போது இன்ஜின் மற்றும் கார்டு ஆகிய இருவரும் பிரேக் பிடித்திருப்பார்கள். ரயில் இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு கார்டை அலார்ட் செய்து அந்த பிரேக்கை ரிலீஸ் செய்ய இந்த இன்ஜின் சிக்னல் செய்கிறது. இதை கேட்டதும் கார்டு பிரேக்கை விடுவிப்பார்
 
#ஏழாவதாக இரண்டு நீண்ட ஹாரன், இரண்டு சிறிய ஹாரன் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டாலும் அது ரயில் அபாயத்தில் இருக்கிறது என அர்த்தம். ரயில் இன்ஜினில் ஏதோ பிரச்சனை காரணமாக ரயிலை இன்ஜினில் உள்ளவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். உடனடியாக ரயிலில் பின் பெட்டியில் உள்ள கார்டு இன்ஜினின் கண்ட்ரோலை தான் எடுத்து ரயிலை நிறுத்த வேண்டும் என அர்த்தம்
 
#எட்டாவதாக இரண்டு பாஸ்களுடன் கூடிய இரண்டு ஹாரன். இதற்கு அர்த்தம் ரயில் ஒரு ரயில்வே கிராசிங்கை கடக்கப்போகிறது என அர்த்தம். இந்த ஹாரன் சத்தம் ரயில்வே கிராசிங்கில் ரயிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு ரயில் வருகிறது என எச்சரிக்கை செய்யும் வகையில் இந்த ஹாரன் சத்தம் எழுப்படுகிறது.
 தாம்பரம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை  ரத்து 18ம் தேதி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு - Dinakaran ...
#ஒன்பதாவதாக இரண்டு நீண்ட ஹாரன் ஒரு சிறிய ஹாரன் சத்தம் அடுத்தடுத்து ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு ரயிலின் டிரைவர் இன்ஜின் டிராக்கை மாற்றுகிறார். என அர்த்தம் பெரும்பாலும் ரயில் நிலையங்களுக்கும் ரயில் நுழையும் போது இந்த வகையான ஹாரன் ஒலிக்க வைக்கப்படும்.
 
#பத்தாவதாக இரண்டு சிறிய ஹாரன் ஒரு நீண்ட ஹாரன் ஒலிக்க வைக்கப்பட்டால் அதற்கு இரண்டு அர்த்தம் இருக்கலாம். ஒன்று ரயிலில் உள்ள பயணி யாராவது அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்ததும் இந்த ஹாரன் ஒலிக்க வைக்கப்படும். அல்லது ரயிலின் பின்னாடி உள்ள கார்டு பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினாலும் இந்த ஹாரன் தான் ஒலிக்கப்படும். ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக உஷாராகி என்ன நடக்கிறது அறிந்து செயல்பட வேண்டும்.
 
#கடைசியான முறை 6 முறை சிறிய ஹாரன்களை அடிப்பது இது மிக மிக மிக அரிதான இடங்களில் தான் அடிக்கப்படும். ரயில் ஏதாவது ஆபத்தில் சிக்கிவிட்டால் இந்த ஹாரன் அடித்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதாவது ரயிலைத் தீவிரவாதிகள் கடத்திவிட்டாலோ, அல்லது ரயில் வழிப்பறி கொள்ளை கூட்டத்திடம் சிக்கிவிட்டாலோ, ரயிலை வன விலங்குகள் சுற்றிதாக்குதல் நடத்தத் துவங்கிவிட்டாலோ இவ்வாறான சிக்னல் கொடுக்கப்படும்.
 
இந்த ஹாரன் சிக்னல் முறை எல்லாம் ரயில்கள் ஓடத்துவங்கிய காலகட்டத்தில் விதிமுறைகளாக வகுத்து வைத்தனர். அப்பொழுது ரயிலின் இன்ஜினில் இருப்பவர்களுக்கும் பின்னால் இருக்கும் கார்டிற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் இன்று அப்படி அல்ல வயர்லெஸ் கம்யூனிகேஷன் வந்துவிட்டது. தற்போது தகவல்கள் உடனடியாக பறக்கின்றன. அதனால் இந்த ஹாரன் சிக்னல் எல்லாம் ஒரு கடமைக்கு தான் இருக்கிறது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, temple and monument 🌷 🌷🌷 🌷