மூக்கை உடைத்த மோடிஜி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:51 AM | Best Blogger Tips


Pawar-Modi rapprochement | பவார் - மோடி நெருக்கம் | Dinamalarமோடி சர்கார்..அரசு நிறுவனங்கள் “ஜீரோ” -வேலை “நோ”! இன்னுமா இந்தியா  ஜொலிக்குது? காங். தலைவர் கார்கே | Mallikarjun Kharge on Modi government PSU  privatisation - Tamil Oneindia

100 மோடிகள் வந்தாலும் என்னை அசைக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே | can not  shake me with 100 modes Mallikarjun Kharge

ஊடகங்கள் மூடி மறைத்த ஒரு நெத்தியடி சொற்போர்...!

காங்கிரஸ் கட்சியின் தலித் M.P மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்.

மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து,

தலித் ஆன எங்களுக்கு..

ஒவ்வொரு குடும்பத்துக்கும்.., குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள். Prime Minister Narendra Modi PNG Images Free Download

நாங்களும் வாழவேண்டாமா..?" .

என கர்ஜிக்கிறார்.

லோக்சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி.

கொஞ்ச நேரம் ஆனது.

Dramatic effect க்காகவே காலம் தாழ்த்தியவர் போல....

பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக

எழுந்தார்.

கேட்டார்...,

நீங்கள் தலித் தானே...?

உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா.. ?

நான் சொல்லட்டுமா...?

பிரதமர் சொன்னார்.Prime Minister Narendra Modi PNG Images Free Download

"சரி. நானே சொல்லி விடுகிறேன்.

பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு வணிகவளாகம் இருக்கிறது.

சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.

அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா.

கெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ்

ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.

பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா ...

பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம்.

இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்.

பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களாக்கள்.

இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள்

பெயரில்....

மைசூர்,

குல்பர்கா,

சென்னை,

கோவா,

பூனே, நாக்பூர்,

மும்பை,

டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா....?"

திரு மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை.

"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால்.....,

இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம்தானே."

காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.

ஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள்.

அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.

ஊடகங்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை....?

ஊடகங்களின் மௌனத்தை வாங்க...,

கார்கே என்ன விலை கொடுத்தாரோ.....,?

ஆனால் நாம் தெரியப்படுத்துவோம்...!

ஜெய்ஹிந்த்..!

பகிர்வு

 


 Thanks & copy from Web

தேய்பிறை அஷ்டமி விரத

மணக்கால் அய்யம்பேட்டை | 9:54 AM | Best Blogger Tips

 No photo description available.

 

ஹர ஹர மஹாதேவா 🙏🏻🙏🏻

ஸ்ரீ பைரவர் அருள் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு செய்யுங்கள் !!

இன்று தேய்பிறை அஷ்டமி
பைரவர் அவதரித்த திருநாள்
அதி அற்புதமான நாள் மாலையில் கண்டிப்பாக பைரவர் அபிஷேகம் பாருங்கள் !!

மிகவும் சக்தி வாய்ந்தது.

அஷ்டமியில் மஹாவிஷ்ணுவின் கோகுலாஷ்டமி வழிபாடும் சிவபெருமானின் பைரவாஷ்டமியும்
சக்தி வாய்ந்த வழிபாடாகும்.

பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

ஆகவே பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வணங்கினால் ஆயூளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சகல செளபாக்யங்களுடன் வாழ வைப்பார்.

இரண்டாவதாக சனிபகவானின் நட்சத்திரக்காரர்கள் அதாவது பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திரத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் சகல செளபாக்யமும் கிடைக்கும்.

மற்ற நட்சத்திரத்திரக் காரர்களும் வழிபடலாம்.

பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகள் கஷ்டம் எதிரிகளை அழிப்பதுதான்.

மேலும் சனிபகவானின் குரு பைரவர் ஆவார்.

ஆகையால் பைரவரை வழிபட்டால் சனிபகவான் கெடுபலன்கள் குறையும்.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கே.

ஒரு ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.

அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.

காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பெளர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும்.

பஞ்ச தீபம் என்பது தனித் தனியாக ஏற்ற வேண்டும்.

அதாவது ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு எண்ணெய்.

இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஓன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
அஷ்டமி வழிபாடு Archives - சர்வமங்களம் | Sarvamangalam

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும்.

மற்றும் தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர்.
அஷ்ட பைரவர்கள் எவ்வாறு எப்போது தோன்றினர்...?

ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.

திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம்.

பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் , பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் பாராயணம் செய்து வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.
வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணா கர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பைத் தரும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பெளவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பைரவாஷ்டகத்தை 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். 


Thanks & Copy from video -Youtube.com


இவ்விதம் ஒன்பது பெளவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன சம்பத்தை அடையலாம்.

நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9 வது பெளவுர்ணமியன்று அவலில் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.

ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை பரணி ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும்.

ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.

எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும்.

எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.

ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

குறைந்தபட்சம் 27 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

மாலையில் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு முடிந்தால் அபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

பகலில் இருந்து இரவு வரை முழு நாள் விரதமிருந்தால் பலன்களை அள்ளித் தருவார் பைரவர்.

வயதானவர்களுக்கு இது விதிவிலக்கு
அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

வசதி குறைந்தவர்கள் ஒரு இரண்டு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமி அன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு முடிந்த அளவு அன்னதானம் அளிக்க வேண்டும்.

சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்லது.

பிறகு வீட்டுக்கு சென்று இன்று காலை முதல் மாலை வரை நான் செய்தது பைரவருக்கு அர்ப்பணம் என்று மனதார
சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் பைரவாய வித்மஹே
ஹரி ஹர ப்ரம்மாத்மஹாய தீமஹி
தந்நோ கால பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமியில் காலையிலும் மாலையிலும் 108 முறை கேளுங்கள்.
😊🕉️🙏🏾🐕‍🦺🐕‍🦺🕉️🙏🏾.

Thanks & Copy from video -Youtube.com

 


நன்றி இணையம் 

மெய்ப்பொருள்_நாயனார்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:08 PM | Best Blogger Tips


 May be an illustrationMay be an image of 2 people, temple and textMay be an image of temple
 May be an image of 1 person and temple
திருக்கோவிலூர் வீரட்டானம்
May be an image of 2 people, temple and text that says "இன்று குரு பூஜை மெய்ப் பொருள் நாயனார் மாதம்: கார்த்திகை நட்சத்திரம்: உத்திரம்"May be an image of temple and text that says "Galaxy M33 5G"May be an image of temple
திருநீறும் ருத்திராட்சமும் அணிந்து
சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய ,
63 நாயன்மார்களில் ஒருவரான 
 
#மெய்ப்பொருள்_நாயனார் குருபூஜை இன்று: (முக்தி நாள்)
 
 
மெய்ப்பொருள் நாயனார் – கொன்றவனைக் காத்தவர்
 
மெய்ப்பொருள் நாயனார், சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய குறுநில மன்னர். 
 
நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். அவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரைத் தலைமையாகக் கொண்டு, பழங்காலத்தில் சேதி நாடு என்ற சிற்றரசு ஒன்று இருந்தது.
 
சேதியர் என்ற இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்ததால் இது சேதி நாடு என்று வழங்கப்பட்டது. இது தொண்டை நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையில் அமைந்திருந்ததால் நடு நாடு என்றும் அழைக்கப்பட்டது.
 
இச்சிற்றரசை மலையமான் என்ற குலத்தினர் ஆண்டு வந்தனர். இக்குலத்தினர் மாதொரு பாகனாக விளங்கும் சிவபெருமானை வழிவழியாக வழிபட்டு வந்தனர்.
 
சேதி நாட்டுக் குறுநில மன்னர் பரம்பரையில் தோன்றியவர் மெய்ப்பொருள் நாயனார். இவரும் சிவனாரிடம் பேரன்பு கொண்டிருந்தார்.
 
திருநீறு பூசி, உருத்திராக்கம் அணிந்த சிவனடியார்களின் திருவேடமே உண்மையான மெய்ப்பொருள் என்று இவர் எண்ணினார். ஆதலால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார்.
மெய்ப்பொருளார் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, அறநெறி தவறாது குடிமக்களைக் காத்து நல்லாட்சி புரிந்து வந்தார். சிவனடியார்கள் வேண்டியதை கொடுக்கும் தாரள குணத்தவராகத் திகழ்ந்தார். 
 
சிவாலயங்களுக்கு பல திருத்தொண்டுகள் புரிந்தார்.
மெய்ப்பொருளார் மீது முத்தநாதன் என்ற அரசன் பகைமை கொண்டிருந்தான். அவன் பலமுறை மெய்ப்பொருளாளருடன் போரிட்டு தோல்வி கண்டவன். அவன் தன்னுடைய தோல்விகளுக்கு காரணமான மெய்ப்பொருளாரைத் தண்டிக்க எண்ணினான். அவனுடைய மனதில் வஞ்சகத் திட்டம் ஒன்று உதித்தது.
 
முத்தநாதனுக்கு, மெய்ப்பொருள் நாயனாரின் சிவனடியார் பக்தி பற்றி தெரியும். ஆதலால் சிவனடியாராகச் சென்று அவ்வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டான்.
 
திட்டமிட்டபடி முத்தநாதன் ஒருநாள் உடலெங்கும் வெண்ணீறு பூசி, உருத்திராக்கங்களை அணிந்து சிவனடியாராக உருமாறினான். குத்துவாளை ஓலைசுவடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு சுவடியுடன் மெய்பொருளாரின் அரண்மனையை அடைந்தான்.
 
இரவானதால் வாயில் காவலர்கள் அவனை அரண்மனைக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். உடனே அவர்களிடம் மன்னருக்கு ஆகமம் உரைக்கவே வந்ததாகக் கூறினான். ஆதலால் அவர்கள் அவனை அரண்மனைக்குள் விட்டனர்.
முத்தநாதன் அரசரின் பள்ளியறையை நெருங்கினான்.
அங்கிருந்த தத்தன் என்னும் மெய்க்காப்பாளன் அரசர் உறங்கும் நேரம் ஆதலால் சிவனடியார் தற்போது உள்ளே செல்லக் கூடாது என்று கூறி தடுத்தான்.
சிவனிடம் பெற்ற ஆகமத்தை இப்போதே மன்னருக்கு தெரிவிக்க வேண்டும் என்று சிவனடியார் கூறியதும் அரைகுறை மனதுடன் மன்னரின் பள்ளியறைக்குள் அனுமதித்தான் தத்தன்.
தூங்கிக் கொண்டிருந்த மன்னருக்கு அரசியார் விசிறிக் கொண்டிருந்தார். சிவனடியார் சிவ ஆகமத்தை அரசருக்கு விளக்க வந்திருப்பதாக் கூறியதும் அரசியார் மன்னரை எழுப்பினார்.
கண் விழித்த மெய்ப்பொருளார் சிவனடியாரைக் கண்டதும் கைகூப்பி வணங்கினார். சிவனிடமிருந்து பெற்ற ஆகமத்தின் பொருளை உடனே மன்னருக்கு கற்பிக்க இருப்பதாகக் கூறினார் சிவனடியார்.
அதனைக் கேட்ட மன்னரும் மகிழ்ந்தார். சிவஆகம விளக்கத்தை மன்னருக்கு மட்டுமே விளக்க முடியும் என்று சிவனடியார் கூறியதும் மன்னர் அங்கிருந்த எல்லோரையும் அனுப்பி வைத்தார்.
பின்னர் சிவனடியாருக்கு தகுந்த ஆசனம் அளித்து தான் கீழே அமர்ந்து சிவஆகம விளக்கத்தை கேட்கத் தயாரானார்.
சிவனடியாராக வேடமிட்ட முத்தநாதன் ஓலைச்சுவடியைப் பிரித்து உள்ளே இருந்த குத்துவாளை எடுத்து மெய்ப்பொருளார் அறியாதபோது மார்பில் குத்தினான்.
குத்துப்பட்ட நிலையிலும் சிவனடியாரை வணங்கியபடியே மெய்ப்பொருளார் தரையில் சாய்ந்தார்.
அப்போது சந்தேகமடைந்த தத்தன் உள்ளே எட்டிப் பார்த்தான். அரசன் குத்துவாளால் குத்துப்பட்டு கிடப்பதைப் பார்த்ததும் உடைவாளை உருவி சிவனடியாரை நோக்கிப் பாய்ந்தான்.
உடனே மெய்ப்பொருளார் தத்தனைப் பார்த்து “தத்தா, அவர் நம்முடைய சிவனடியார்; வேண்டாம்” என்று தடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த தத்தன் “தற்போது யான் செய்யும் பணி யாது?” என்று கேட்டான்.
“இந்த சிவனடியாரை யாரும் தாக்காத வண்ணம் பாதுகாத்து, இவ்வூரின் எல்லையில் விட்டுவிட்டு வா” என்றார் மெய்ப்பொருளார்.
அரசனுடைய ஆணையைப் பின்பற்றி, தத்தன் சிவனடியாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். விவரம் அறிந்தோர் சிவனடியாரைத் தாக்க முற்பட்டனர்.
சிவனடியாரைத் தாக்கக் கூடாது என்பது அரசனுடைய ஆணை என்று தத்தன் கூறியதும் அவர்கள் விலகினர்.
எல்லையில் சிவனடியாரைப் பாதுகாப்பாக விட்டதும், வேகமாகத் தத்தன் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரத்தைச் சொன்னான்.
“நீ எனக்கு செய்த பேருதவியைப் போல, எனக்கு யாரும் செய்ய முடியாது” என்று மனமகிழ்ச்சியுடன் கூறினார் மன்னர்.
அரண்மனையில் கூடியிருந்தோரிடம் “திருநீற்று நெறியைக் காப்பீர்” என்றபடி சிவனடியை நினைத்தார்.
அப்போது சிவபெருமான் உமையம்மையுடன் இடப வாகனத்தில் காட்சியளித்தார். மெய்ப்பொருள் நாயனார் சிவபதத்தைப் பற்றி பெரும் பேறு அடைந்தார்.
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
உயிர் பிரியும் நிலையிலும் சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் என்று வியக்கிறார்.
 
திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்!
🙏
🙇