கும்பாபிஷேகம் என்பது என்ன?....

மணக்கால் அய்யம்பேட்டை | 2:34 PM | Best Blogger Tips

Image result for கும்பாபிஷேகம் என்பது என்ன
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன் படித்து பகிறவும்...
கும்பாபிஷேகத்தின் வகைகள்.
Image result for கும்பாபிஷேகம் என்பது என்ன
1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.
2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.
கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.
Image result for கும்பாபிஷேகம் என்பது என்ன
1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.
4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}
8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}
9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.
15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.
19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.
மற்றும் சில.
ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.
யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

நன்றி இணையம்

செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips
Image result for செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல்

ஆங்கிலத்தில் commitment என்றொரு சொல் உண்டு. 

ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது
முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி.

ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது. 

‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ சீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஏனெனில் -

“எப்படியும் இந்த ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது செயல்பாடுகளெல்லாம் அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்” என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!

இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால் மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.
இவ்விதி, அலுவலகமாகட்டும் தொழிலாகட்டும் அனைத்திற்கும் பொது.

ஆக, எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும் ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.


நன்றி 👤✍ *பெ.சுகுமார்*

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு கொஞ்சம் சொல்லுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:43 AM | Best Blogger Tips
Image result for சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா

சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா
பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு கொஞ்சம் சொல்லுங்கள்.
1. “காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது.
ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார்.
என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லையே.
அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய்.
இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு”
என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த “நமாஸ், பிரார்த்தனையில் மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கஸேப் படித்துள்ளார்.
2. “அன்று, சிவாஜி என் விரல்களை மட்டும் நறுக்கி எறிய வில்லை; என் கர்வத்தையும் கூடவே நறுக்கி எறிந்து விட்டார்;
என் கனவில் கூட சிவாஜியைக் காண நான் பயப்படுகிறேன்” என்று அபு தாலிபன் அரசனான ஷயிஸ்டகான் கூறியிருக்கிறார்.
3. “என் ராஜ்யத்தில், சிவாஜியைத் தோற்கடிக்க ஓர் ஆள் கூடவா இல்லை?” என்று உள்ளக் குமுறலுடன் கேட்டார் , பீஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷாவின் பேகம்.
4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் ஹிட்லர், “ உங்கள் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்க ஹிட்லர் தேவையில்லை; சிவாஜியின் சரித்திரத்தை போதித்தாலேயே போதும்” என்று சொன்னார்.
5. சிவாஜி மட்டும் இங்கிலாந்தில் பிறந்திருந்தால், நாங்கள் இந்த பூமியை மட்டுமல்ல, அண்ட சராசரத்தையும் ஆண்டிருப்போம்” என லார்ட் மவுண்ட்பேட்டன் சொன்னார்.
6. “சிவாஜி இன்னும் பத்தாண்டுகள் உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தியாவைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது” என்று ஒரு பிரிட்டிஷ் கவர்னர் சொல்லியிருக்கிறார்.
Image result for சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா
7. “சிவாஜி மாதிரி சண்டையிட்டால், நாம் எளிதாக சுதந்திரத்தைப் பெற்று விடலாம்” என நேதாஜி புகழ்ந்திருக்கிறார்.
8. “சிவாஜி என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சக்தி;
இதனைக் கொண்டு நாட்டு விடுதலையை அடைய முடியும்” என ஸ்வாமி விவேகாநந்தர் சொல்லியிருக்கிறார்.
9. சிவாஜி அமெரிக்காவில் பிறந்திருந்தால், அவரை “சூரியன்” என்றே போற்றியிருப்போம்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
10. சிவாஜியின் அம்பர்கண்ட் யுத்தம் , கின்னஸ் பத்தகத்தில் பதிவாகி உள்ளது.
30000 உஸ்பெக் வீரர் படையை, 1000 பேர் கொண்ட சிவாஜியின் படை நிர்மூலமாக்கியது, எதிரிப்படையில் ஒரு வீரர் கூட திரும்பிப் போக விடாமல் அழித்தது, இது தான் உலக சாதனை.
11. சிவாஜி, தன் 30 ஆண்டு காலத்தில், இரண்டு தடவை தான் நம் நாட்டு எதிரிகளுடன் மோதியுள்ளார்.
பிற யுத்தங்கள் யாவும், அயல் நாட்டுப் படைகளுக்கு எதிராகத் தான்.
12. சிவாஜி மோதியதெல்லாம் கொடூரத் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற பதான், துருக்கி, ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா படைகளுக்கு எதிராகத் தான்.
இவற்றில் ஒன்றில் கூட சிவாஜி தோல்வியே கண்டதில்லை.
13. ஈரான், சிவாஜியை முறியடிக்க கடற்படையை அனுப்ப முடிவு செய்த போது, சிவாஜி, இந்தியாவின் முதல் கப்பற்படையை ஏற்படுத்தினார்.
ஆனால், அது முழு அளவில் உருவாக்கப் படுவதற்கு முன், சிவாஜி தன் 50-வது வயதில் மரணமடைந்தார்.
(பிறந்தது: 19-2-1630; இறந்தது: 3-4-1680).
14. பாஸ்டன் பல்கலைக் கழகத்தில், “ மேலாண்மைக்கு குரு சிவாஜி” என்று ஒரு பாடம் இன்றும் போதிக்கப் பட்டு வருகிறது.
Image result for சத்ரபதி வீர சிவாஜி மகாராஜா
இந்தியாவில் தான் சிவாஜி போன்ற மாவீரர்களைப் பற்றியெல்லாம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை.
அப்புறம் எப்படி தேசம், தியாகம், வீரம், விவேகம், புத்திசாலித்தனம், அஞ்சாநெஞ்சம் போன்றவை வரும்?
வாய் சவடால் அடித்துக் கொண்டு, அயோக்கிய அரசியல்வாதிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டு,
டாஸ்மாக்குக்குப் போய்க் கொண்டு,
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு இருக்கத்தான் நேரம் சரியாக இருக்கும்...
ஜெய்
சிவாஜி
ஜெய்
பவானி
ஜெய்ஹிந்த்
நன்றி