இது நடக்காவிட்டால் இன்றே எழுதி ..........?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:01 AM | Best Blogger Tips

How to reduce cravings for sweet

 

இது நடக்காவிட்டால் இன்றே

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

"சுவை என்னும் இனிப்பு விஷம்"

நாடு முழுவதும் சுற்றிப் பார்த்த

முகநூல் நண்பர் ஒருவர்

அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..

இனிப்புகளை இந்த நேரத்துல மட்டும் சாப்பிடாதீங்க ப்ளீஸ்... எந்த நேரம்னு  தெரிஞ்சுக்க இதை படிங்க ..!!! | When To Eat Sweet Before Or After Meal |  Asianet News Tamil 

அது வேறொன்றுமில்லை எங்கு பார்த்தாலும் உணவு உணவு உணவு..

உதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொள்வோம்.. தற்போது உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.. 

Why budget friendly bakery items are trending 

எல்லோரும் எதையாவது தின்றுகொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கட்டமைக்கப்படுகிறது..

முக்கியமாக அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.. உதாரணமாக, சோறு (கிராமத்து மொழியில்),இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, போன்றவை ஏளன உணவாக பார்க்கப்படுகிறது.. 

Breakfast For 50 People

பல உணவகங்களில் இவைகள் எல்லாம் இல்லவே இல்லை தற்போது..

ரொட்டி வகைகளும் கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது..

மதிய வேளையில் கூட சோற்றை விட பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள்தான் அதிகம் காணப்படுகிறது.

இந்த வரிசையில் காலை உணவு மட்டும் தற்போது பெரிதாக எதுவும் பாதிக்கப்படவில்லை.. 

We are a 100% eggless bakery based in Rishikesh providing all kinds of bakery  items such as customized cakes, donuts, pastries, cupcakes, cookies, pies,  muffins, cake sickles, croissants, biscuits, brownies, macarons rolls, 

விரைவில் அதுவும் மாறக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம். அதாவது, ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ்,பாஸ்தா, போன்ற உணவு வகைகள் காலைகென கொண்டு வரலாம்..

தொலைக்காட்சி விளம்பரங்களும், இணையதள விளம்பரங்களும், இதைத்தான் இப்பொழுது புகுத்திக் கொண்டிருக்கிறது..

ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்கும் என்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்..

தற்போது ஐஸ்கிரீமை கூட பொரித்து உண்கிறார்கள்.

சிஸ்லர் என்னும் நெருப்புக்களில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது ஏன் இப்படி??

Cakes And Bakery Products, Packaging Type: Bag at ₹ 700/kg in Gautam Budh  Nagar | ID: 25757092030 

 

உலகில் உள்ள அனைத்து உணவு வகைகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இப்பொழுது கிடைக்கிறது.. பாரம்பரிய உணவுகளை தவிர,

 

பீசா என்னும் பிசாசு, 

 ஆரோக்கியமான பீஸ்ஸா செய்வது எப்படி

மனிதனை விரைவில் சவமாக மாற்றும் சவர்மா, இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆக இப்பொழுது கிடைக்கிறது...

குழந்தைகளும் மிக அதிகமாக இதைத்தான் விரும்புகிறது..

கல் தடுக்கி கீழே விழுந்தாலும் ஒரு பேக்கரிக்குல்தான் விழவேண்டி இருக்கு.. அத்தனை பேக்கரிகள்.. 

 

ஆனால் அந்த பேக்கரியில் விற்கப்படும் பொருட்கள் அங்கு செய்வதில்லை என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும். 

Bakery products Images - Free Download on Freepik 

எதோ ஒருநிறுவனம் உற்பத்திசெய்து அனைத்திற்கும் வழங்குகிறது. இதில் சுவை என்பது கூட பழைய சுவை இல்லை

அதிகப்படியான டால்டா, அஜனமோட்டோஸ்,கலப்பு போன்றவை இருக்கிறது..

 

நாக்கில் வைத்தவுடன் கரைவது போல் இருக்க வேண்டும் இன்றைய மனிதர்களுக்கு..

ஏன் என்றால் அனைவருக்கும் பல் இல்லை அல்லவா?

 

தற்போது கடினமாக கடிக்கக் கூடிய பொருட்களை விற்பனையில் இல்லை..

இனிப்பு வகைகளும் கேக்கு வகைகளும் கடல் போல் பெருகிவிட்டது. 

Wholesale Bakery Products in Chennai – Reliable Supply for Food Businesses  | ARIHA FOODS Pvt Ltd - Chennai 

இனிப்பு பெருகியதால் பல் மருத்துவமனைகளும் இங்கு அதிகம் பெருகிக்கொண்டே வருகிறது..

இப்போது அண்ணாச்சி கடைகளிலும் கூட தமிழ் பொருட்கள் கிடைப்பதில்லை பெரும்பாலும் வட இந்திய பொருட்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது..

(கடுக்காய் மிட்டாய் ,இலந்தை வடை, சுத்துற முட்டாய்)

ஏன் தின்பண்டங்கள் கூட தற்போது ஹல்டிராம்ஸ் பாக்கெட்டுகளில் தான் இருக்கிறது..

ஒரு காலத்தில் 'தூ' என்று துப்பிய சுவைதான் இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு பழக்கப்படுத்தி விட்டனர்..

இதற்கு அடிப்படை காரணம் பெருகிவரும்

டீ -மார்ட் போன்ற கடைகள்தான், அவர்கள் பெரும் அளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்கு கொடுக்க முடியும்.

அதனால்தான் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களை தான் விற்கிறார்கள்..

அதன் நாகரீகத் தோற்றத்தை பார்த்து அங்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்ல தொடங்குகிறார்கள்..

உணவிற்காக செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனமே.

உணவை மக்கள் முதலில் விழிவழி உண்கிறார்கள் அதாவது கண்களால் தின்கிறார்கள், பிறகு கண்டதை எல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிந்து விடுகிறார்கள்..

முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரமில்லாத காரணத்தினால் எப்போதாவது ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம்..

ஆனால் இப்போது வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து வீட்டிலேயே வைத்து வெளி உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்..

(Swiggy, zomato), இது நாகரீகத்தின் குப்பை என்று தெரியாமல்..

இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது..

ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம், ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது மனிதர்களின் மரபணுவை சிதைக்கும் பெரும் போர்..

தமிழ் மொழி எப்படி தற்போது அழிந்து கொண்டு வருகிறதோ, அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்..

சுவை என்னும் நஞ்சிலிருந்து வெளியேறி பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்கு திரும்பவேண்டும்..

அந்நிய உணவில் இருந்து தங்களை ஒவ்வொருவரும் விடுவித்துக் கொள்ள வேண்டும்..

இது நடக்காவிட்டால் இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனைகள் பெருகிவிடும்,

குழந்தைகள் முதல் இளம் வயதில் மரணம் அதிகம் வரும்,

உடல் பருமன் தவிர்க்க முடியாது,

மாரடைப்புக்கு பலியாக பல பேர் காத்திருக்க வேண்டும்..

சுருக்கமாக சொன்னால் நோயில்லாத மனிதனை பார்ப்பது அரிதிலும் அரிதாக மாறிவிடும்..

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 Thanks & copy from 

Aththanoor Tex 

“மனித நேயம்” என்ற மகத்தான தெய்வம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:14 PM | Best Blogger Tips

 May be an image of one or more people and people smiling

நெஞ்சம் நெகிழ வைத்தது

சமீபத்தில் நான் பார்த்த ஒரு புகைப்படம் !
இதோ, இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண், தன்னைத் தூக்கி வளர்த்த, தன் தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்த, அள்ளி எடுத்து அரவணைத்த, தன் அப்பாவின் கைகளைத்தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.
 
ஆனால் அவரது கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன. அவள் அப்பா எப்போதோ கடவுளிடத்தில் போய் சேர்ந்து விட்டார்.
 
அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்; இதோ, அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய்...
அவர் மனநிலை எப்படி இருக்கும் ?
 
தனக்கு கை கொடுத்து வாழ்வளித்த, தன் கழுத்தில் மாலையிட்டு நேசித்த,
தன் கணவனின் கைகளைத்தான் நேருக்கு நேர் இங்கே பார்க்கிறாள் ! 
 
ஆனால் அந்த நேசமிகு கணவன் ?
அவர் இப்போது இல்லை.
என்ன ஆயிற்று அவருக்கு..?
அவர் பெயர் ஜோசப்.
கொச்சியை சேர்ந்தவர்.
May be an image of one or more people and people smiling 
ஒரு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டார். 
 
2015 மே மாதம் நடந்தது இது !
அதே நேரத்தில் கொச்சி மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில், வேறு ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆப்கான் ராணுவ கேப்டன் அப்துல் ரஹீம். 
 
தீவிரவாதிகளுடன் நடந்த போரில், ஒரு குண்டு வெடிப்பில் இரு கைகளையுமே இழந்து விட்டார். இவருக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும். அதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்து, இந்த மருத்துவமனையில் காத்திருக்கிறார் அப்துல் ரஹீம்.
 நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் ! – Sooddram
ஒரு புறம் மூளைச்சாவு அடைந்த ஜோசப்...
மறுபுறம் கைகளை இழந்த அப்துல் ரஹீம் !
இந்த நேரத்தில்தான் மருத்துவர்களுக்கு அந்த யோசனை தோன்றியது.
 
விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து, அவற்றை அப்துல் ரஹீமுக்கு பொருத்தினால் என்ன ?
 
மருத்துவர்கள் சிந்தித்தார்கள். ஜோசப்பின் குடும்பத்தினருடன் கலந்து பேசினார்கள்.
ஜோசப்பின் மனைவியும் மகளும் யோசித்தார்கள் .
இயேசு சொன்ன வார்த்தைகள், அவர்கள் நினைவுக்கு வந்தன :
 
” உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக. ”
“ஆமென்.”
 
இறந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து, அப்துல் ரஹீமுக்கு பொருத்தும் சிகிச்சை தொடங்கியது. 
 
20 மருத்துவர்கள் கொண்ட குழு, ஏறத்தாழ 15 மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பின், வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள். 
 
இந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர் பெயர் சுப்பிரமணிய ஐயர் .
 
கல்லறைக்குள் போய் விட்ட தன் கணவனின் கைகளைத்தான் பக்கத்தில் நின்று பார்த்து கண்ணீர் வடிக்கிறார் இந்த மனைவி.
 
அருகிலிருந்து தன் அப்பாவின் கைகளை பார்த்து அழுது கொண்டே சிரிக்கிறாள் இந்த அன்பு மகள் !
 
ஒரு அப்துல் ரஹீமுக்கு,
 
ஒரு ஜோசப்பின் கைகள், 
 
ஒரு சுப்பிரமணிய ஐயரால்
 
பொருத்தப்பட்டது.
 
இந்து தெய்வம்
இஸ்லாமிய தெய்வம்
கிறிஸ்தவ தெய்வம்...
 
எல்லாமும் இணைந்ததுதான்
 
“மனித நேயம்” என்ற மகத்தான தெய்வம் !
 
அதுவே நாம் கை கூப்பித் தொழ வேண்டிய
“கை கொடுத்த தெய்வம்."
 
Thanks to FB : John Durai Asir Chelliah

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷


 

*சித்தர் சமாதியில் மருந்தாக மாறும் அன்னம் – சித்தர் நிகழ்த்தும் அற்புதம்* 🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 AM | Best Blogger Tips

No photo description available.

*சித்தர் சமாதியில் மருந்தாக மாறும் அன்னம் – சித்தர் நிகழ்த்தும் அற்புதம்* 🌹
கோரக்கர் #சித்தர் பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  பொய்கைநல்லூர், பொய்யூர், ஜீவசமாதி வடக்கு பொய்கைநல்லூர் இதை ...
வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
 கோரக்கர் சித்தர் பிறப்பும் மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தரின் வடக்குப்  பொய்கைநல்லூர் ஜீவ சமாதி | rkmaneshyadav
இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ”அன்னக்காவடி தர்மம் தாயே!” என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

‘சுத்தான்னம்’ எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.

இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.

 May be an image of ‎temple and ‎text that says "‎சித்தர் மயம் அருள்மிகு கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடககுப்பொம்கைநல்றோார் sn ம்ருல் பொய்கை நல்லூர் __ C さま AKpaR اسان thiNa thi‎"‎‎


ஏனைய சித்தர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு கோரக்கருக்கு உண்டு. சித்தர்கள் ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, பொதுவாக எல்லா சித்தர்களின் பாடல்களுமே மேலோட்டமான ஒரு பொருளும், உள்ளார்ந்த – எளிதில் விளங்காத ஒரு மறைபொருளும் கொண்டவை. இவற்றை தவறென எதிர்த்துக் குரல் எழுப்பியவர் கோரக்கர். அவ்வாறு பொருள் விளங்காத பல சித்தர் நூல்களையும் பொருள் புரியுமாறு தெளிவுறுத்தியவர் கோரக்கர். இவ்வாறு அவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு.

இந்நூல்கள் வெளிஉலகுக்குப் போகுமானால் தமக்கும் தமது நூல்களுக்கும் பெருமை குறையுமென்று கருதிய இடைக்காடர், அகப்பை, நந்திதேவர், மச்சமுனி, சட்டை நாதர், பிரம்மமுனி, அழுகண்ணர் ஆகிய ஏழு சித்தர்களும் கோரக்கரிடம் வந்து, அவர் இயற்றிய பதினாறு நூல்களையும் தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு வற்புறுத்தினர். மறுக்காமல் சரி என வாக்குக் கொடுத்த கோரக்கர், தன் ஆசிரமத்தில் உணவு அருந்தி விட்டுப் போகுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். கோரக்கர் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்ததில் அகமகிழ்ந்து ஏழு சித்தர்களும் உணவு உண்ண மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.

கோரக்கர் கஞ்சா இலைகளை அரிசிப் பருப்புடன் கலந்து அரைத்து அடைசுட்டு சித்தர்களுக்கு அன்புடன் பரிமாறினார். கஞ்சா இலை அடையை உண்ட அவர்கள் உடனேயே மயங்கிச் சாய்ந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோரக்கர், தான் இயற்றிய 16 நூல்களையும் சுருக்கித் தொகுத்து, ‘சந்திரரேகை’ என்று ஒரு நூலை உருவாக்கினார்.
கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா; ஜீவசமாதியில் அன்னாபிஷேகம் |  Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil |  thiruvampavai songs | thiruvampavai songs in ...
இதையும் படிக்கலாமே:

கோயிலிற்கு செல்பவர்கள் இதை எல்லாம் கணவத்தில்கொள்வது அவசியம்
No photo description available.
சித்தர்கள் உறங்கி எழுந்து கோரக்கரிடம் அந்த பதினாறு நூல்களையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர். அந்நூல்களை தீயிட்டு அழித்தனர்! இந்த சுவாரஸ்யமான செய்தி, சந்திரரேகை நூலில் இடம் பெற்றுள்ளது.
No photo description available.
🙏🏻 *நற்பவி* 🙏🏻

சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம்‌ ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி*

*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜
 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி  

இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

🌕 ஐப்பசி பௌர்ணமி...! ✨அன்னாபிஷேகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:54 AM | Best Blogger Tips

 


🌕 ஐப்பசி பௌர்ணமி...!
✨அன்னாபிஷேகம் - 05-11-2025

🌕 ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால்
சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்...!
aippasi pournami annabhishekam reason : ஐப்பசி ...
🕉️ ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும்.
Aippasi Pournami 2025 Date: 2025 ஐப்பசி மாதம் ...
அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. 

ஐப்பசி அன்னாபிஷேகம்: சோறு கண்ட இடம் ...

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்கிறோம்.
ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை ...
ஐப்பசி பௌர்ணமி.

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். சந்திரனை முடிமேல் சூடிய ஈசனுக்கு மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
Aippasi Annabhishekam 2024! ஐப்பசி அன்னாபிஷேக ...
சிவன் பிரம்மஹத்தி தோஷம்.


இது மட்டும்தான் காரணமா என்றால் அதுதான் இல்லை. வேறொரு காரணமும் இருக்கிறது. சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் என்னவென்று பார்க்கலாம். பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலமே பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும். யார் பிச்சையிடும்போது இந்தக் கபாலம் அன்னத்தினால் நிறைகிறதோ அப்போது அந்தக் கபாலம் சிவபெருமானின் கையை விட்டுப் பிரியும் என்பது விதி.

Annabhishekam: சோறு கண்ட இடம் சொர்க்கம் - அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்!

காசி அன்னபூரணி.


சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது
அன்பினால் கபாலம் அன்னத்தினால் நிறைய, பிரம்மனின் தலை சிவபெருமானை விட்டு விலகும். சிவபெருமானும் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டு மாயையிலிருந்தும் விலகுவார். அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி. அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது.
things to avoid on pournami annabhishekam : நாளை ஐப்பசி பெளர்ணமி  2025...மறந்தும் இந்த 3 தவறுகளை மட்டும் செய்துடாதீங்க
அபிஷேக பிரியர் சிவன்.


உமை ஒரு பாகனான இருக்கும் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை
தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை.


வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு
சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நீர் வாழ் உயிர்களுக்கு உணவு.

சோறு கண்ட இடம் சொர்க்கம்.


நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம். 

சோறுதான் சொக்கநாதர்,
'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருக்கிறான். அவனே நமக்குப் படியளப்பவன். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.

சிவனுக்கு நன்றிக்கடன்.


ஈசனே அன்னத்தின் வடிவில் அருள்புரிகிறார். ஈசன் இல்லாமல் எதுவும் இல்லை. உணவளித்து நம்மை வாழவைக்கும்
ஈசனுக்கு நன்றிக்கடனாக அன்னாபிஷேகத்தைச் செய்கிறோம். வானவியல் சாஸ்திரத்தின்படி துலா மாத பௌர்ணமி தினத்தின் போது தான் சந்திரன் அதிகப் பொலிவாகத் தோன்றுவான். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

உணவுக்கு பஞ்சம் வராது.


கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும் அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால் சகலமும் ஒடுங்கிவிடும். பசியால் வாடுபவர்களுக்கு உணவு தராமல் விரட்டினால் அன்னதோஷம் ஏற்படும். அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் தங்காது. தரித்திரம் ஆட்டிப்படைக்கும். அன்னதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதுவேஷம் எனும் உணவைக் கண்டாலே வெறுப்பு உண்டாகும் நோய் ஏற்படும்.

அன்னதோஷம் போகும்.

அன்னதோஷத்தாலும்
அன்ன துவேஷத்தலும் பீடிக்கப்பட்டவர்களும். ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும். அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது. சொர்க்கத்திற்கு போகும் வரை சோறுக்கு தட்டுப்பாடு வராது என்பது நிச்சயம்.🌹🦚🌹.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷

 

💫💗எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips

 😐💯 Follow:@broken_heart_bgmz_

💫💗எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது... !
எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது... ! -  KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET  2024:
💗🙏🏻ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்...

💗👌🏻ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்...

💗👍🏻பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்...
What I do for work, fulfillment, and fun | Bill Gates
💫🙏🏻ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்...

Amancio Ortega, founder of ZARA ranked world's richest man, pushed Bill  Gates to second spot | India.com

💗👍🏻ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது...



💗🤷🏻‍♂இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...

💶🤦🏻‍♂22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

💶👍🏻ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்...

👌🏻💗எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம். 
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை...

🤷🏻‍♂சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்...

🤷🏻‍♂பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்...

🤷🏻‍♂👌🏻டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் 
I Cannot Be Silent என்றார்...

🤷🏻‍♂🥧வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

🤗🥧எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான்...

🤷🏻‍♂👍🏻எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்...

🤷🏻‍♂👍🏻உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்...

💶🤷🏻‍♂யார் கண்டது, ?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!

🤷🏻‍♂🥧இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!

💫👍🏻எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...

😐💪🏻இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...

🤗💗அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்...

🤷🏻‍♂🥧தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்...

🤷🏻‍♂👍🏻ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது...

🤷🏻‍♂💵இது தான் வாழ்க்கை 
இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே 
*மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...

💫🎂🥧💗🤷🏻‍♂👍🏻

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷