இது நடக்காவிட்டால் இன்றே எழுதி ..........?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:01 AM | Best Blogger Tips

How to reduce cravings for sweet

 

இது நடக்காவிட்டால் இன்றே

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

"சுவை என்னும் இனிப்பு விஷம்"

நாடு முழுவதும் சுற்றிப் பார்த்த

முகநூல் நண்பர் ஒருவர்

அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..

இனிப்புகளை இந்த நேரத்துல மட்டும் சாப்பிடாதீங்க ப்ளீஸ்... எந்த நேரம்னு  தெரிஞ்சுக்க இதை படிங்க ..!!! | When To Eat Sweet Before Or After Meal |  Asianet News Tamil 

அது வேறொன்றுமில்லை எங்கு பார்த்தாலும் உணவு உணவு உணவு..

உதாரணமாக தமிழகத்தை எடுத்துக் கொள்வோம்.. தற்போது உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.. 

Why budget friendly bakery items are trending 

எல்லோரும் எதையாவது தின்றுகொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கட்டமைக்கப்படுகிறது..

முக்கியமாக அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.. உதாரணமாக, சோறு (கிராமத்து மொழியில்),இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, போன்றவை ஏளன உணவாக பார்க்கப்படுகிறது.. 

Breakfast For 50 People

பல உணவகங்களில் இவைகள் எல்லாம் இல்லவே இல்லை தற்போது..

ரொட்டி வகைகளும் கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது..

மதிய வேளையில் கூட சோற்றை விட பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள்தான் அதிகம் காணப்படுகிறது.

இந்த வரிசையில் காலை உணவு மட்டும் தற்போது பெரிதாக எதுவும் பாதிக்கப்படவில்லை.. 

We are a 100% eggless bakery based in Rishikesh providing all kinds of bakery  items such as customized cakes, donuts, pastries, cupcakes, cookies, pies,  muffins, cake sickles, croissants, biscuits, brownies, macarons rolls, 

விரைவில் அதுவும் மாறக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம். அதாவது, ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ்,பாஸ்தா, போன்ற உணவு வகைகள் காலைகென கொண்டு வரலாம்..

தொலைக்காட்சி விளம்பரங்களும், இணையதள விளம்பரங்களும், இதைத்தான் இப்பொழுது புகுத்திக் கொண்டிருக்கிறது..

ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்கும் என்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்..

தற்போது ஐஸ்கிரீமை கூட பொரித்து உண்கிறார்கள்.

சிஸ்லர் என்னும் நெருப்புக்களில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது ஏன் இப்படி??

Cakes And Bakery Products, Packaging Type: Bag at ₹ 700/kg in Gautam Budh  Nagar | ID: 25757092030 

 

உலகில் உள்ள அனைத்து உணவு வகைகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இப்பொழுது கிடைக்கிறது.. பாரம்பரிய உணவுகளை தவிர,

 

பீசா என்னும் பிசாசு

 ஆரோக்கியமான பீஸ்ஸா செய்வது எப்படி

மனிதனை விரைவில் சவமாக மாற்றும் சவர்மா, இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆக இப்பொழுது கிடைக்கிறது...

குழந்தைகளும் மிக அதிகமாக இதைத்தான் விரும்புகிறது..

கல் தடுக்கி கீழே விழுந்தாலும் ஒரு பேக்கரிக்குல்தான் விழவேண்டி இருக்கு.. அத்தனை பேக்கரிகள்.. 

 

ஆனால் அந்த பேக்கரியில் விற்கப்படும் பொருட்கள் அங்கு செய்வதில்லை என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்

Bakery products Images - Free Download on Freepik 

எதோ ஒருநிறுவனம் உற்பத்திசெய்து அனைத்திற்கும் வழங்குகிறது. இதில் சுவை என்பது கூட பழைய சுவை இல்லை

அதிகப்படியான டால்டா, அஜனமோட்டோஸ்,கலப்பு போன்றவை இருக்கிறது..

 

நாக்கில் வைத்தவுடன் கரைவது போல் இருக்க வேண்டும் இன்றைய மனிதர்களுக்கு..

ஏன் என்றால் அனைவருக்கும் பல் இல்லை அல்லவா?

 

தற்போது கடினமாக கடிக்கக் கூடிய பொருட்களை விற்பனையில் இல்லை..

இனிப்பு வகைகளும் கேக்கு வகைகளும் கடல் போல் பெருகிவிட்டது

Wholesale Bakery Products in Chennai – Reliable Supply for Food Businesses  | ARIHA FOODS Pvt Ltd - Chennai 

இனிப்பு பெருகியதால் பல் மருத்துவமனைகளும் இங்கு அதிகம் பெருகிக்கொண்டே வருகிறது..

இப்போது அண்ணாச்சி கடைகளிலும் கூட தமிழ் பொருட்கள் கிடைப்பதில்லை பெரும்பாலும் வட இந்திய பொருட்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது..

(கடுக்காய் மிட்டாய் ,இலந்தை வடை, சுத்துற முட்டாய்)

ஏன் தின்பண்டங்கள் கூட தற்போது ஹல்டிராம்ஸ் பாக்கெட்டுகளில் தான் இருக்கிறது..

ஒரு காலத்தில் 'தூ' என்று துப்பிய சுவைதான் இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு பழக்கப்படுத்தி விட்டனர்..

இதற்கு அடிப்படை காரணம் பெருகிவரும்

டீ -மார்ட் போன்ற கடைகள்தான், அவர்கள் பெரும் அளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்கு கொடுக்க முடியும்.

அதனால்தான் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களை தான் விற்கிறார்கள்..

அதன் நாகரீகத் தோற்றத்தை பார்த்து அங்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்ல தொடங்குகிறார்கள்..

உணவிற்காக செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனமே.

உணவை மக்கள் முதலில் விழிவழி உண்கிறார்கள் அதாவது கண்களால் தின்கிறார்கள், பிறகு கண்டதை எல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிந்து விடுகிறார்கள்..

முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரமில்லாத காரணத்தினால் எப்போதாவது ஒருமுறை வெளியில் சாப்பிடுவோம்..

ஆனால் இப்போது வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து வீட்டிலேயே வைத்து வெளி உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்..

(Swiggy, zomato), இது நாகரீகத்தின் குப்பை என்று தெரியாமல்..

இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது..

ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம், ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது மனிதர்களின் மரபணுவை சிதைக்கும் பெரும் போர்..

தமிழ் மொழி எப்படி தற்போது அழிந்து கொண்டு வருகிறதோ, அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்..

சுவை என்னும் நஞ்சிலிருந்து வெளியேறி பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்கு திரும்பவேண்டும்..

அந்நிய உணவில் இருந்து தங்களை ஒவ்வொருவரும் விடுவித்துக் கொள்ள வேண்டும்..

இது நடக்காவிட்டால் இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனைகள் பெருகிவிடும்,

குழந்தைகள் முதல் இளம் வயதில் மரணம் அதிகம் வரும்,

உடல் பருமன் தவிர்க்க முடியாது,

மாரடைப்புக்கு பலியாக பல பேர் காத்திருக்க வேண்டும்..

சுருக்கமாக சொன்னால் நோயில்லாத மனிதனை பார்ப்பது அரிதிலும் அரிதாக மாறிவிடும்..

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 Thanks & copy from 

Aththanoor Tex