எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:04 AM | Best Blogger Tips

 May be an image of text

♦️எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ?
 Irukkankudi Mari Amman Temple : Irukkankudi Mari Amman Irukkankudi Mari  Amman Temple Details | Irukkankudi Mari Amman- Irukkankudi | Tamilnadu  Temple | இருக்கன்குடி மாரியம்மன்
♦️விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.
 சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் || மதுரை புகழ்பெற்ற இடங்கள் || janagai  mariamman temple sholavandan
♦️மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.
 Devi Karumariamman Temple : Devi Karumariamman Devi Karumariamman Temple  Details | Devi Karumariamman- Tiruverkadu | Tamilnadu Temple | தேவி  கருமாரியம்மன்
♦️மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.
 Narthamalai Muthumariamman Temple History in Tamil
♦️புதுக்கோட்டை-நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
 குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் | Kumbabhishekam  today at Thandi Mariamman temple in Coonoor
♦️நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.
 எந்த அம்மனை வேண்டினால் என்ன பலன் கிடைக்கும்? - ஐபிசி பக்தி
♦️ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.
 Rasipuram Shri Nithya sumangali Mariamman
♦️நாமக்கல்-ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.
 Dhandu Mariamman NorthPet Sathy
♦️கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.
 samayapuram mariamman | காடையாம்பட்டி சமயபுரம் மாரியம்மன் என் தாய் சமயபுரதா  🙏❤️🌿 கார்த்திகை தீபம்🔥.. | Instagram
♦️சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.
 திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும், மஞ்சளையும்  கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது. * கோவையில் ...
♦️திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.
 திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா 🙏🙏| Tirupur kottai Mariamman  temple 🙏🙏 | Tirupur
♦️கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.
 கௌமாரியம்மன் கோவில்,தேனி கௌமாரியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா: முன்னாள்  முதல்வர் ஓ.பி.எஸ் வருகை...! - periyakulam gowmariamman temple aani festival  started - Samayam ...
♦️தேனி-பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.
 கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் திருவிழா | karur-mariamman -koil-thiruvizha
♦️கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.
 ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல்  கோட்டை மாரியம்மன்! | The glory of Dindigul Kottai Mariyamman Temple -  Vikatan
♦️திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை
வேறுகிறது.
 Thanjavur punnainallur mariamman
♦️தஞ்சை-புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.
 முத்து மாரியம்மன் 108 போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
♦️காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்து மாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
கோவை- உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் இன்று மஞ்சள் நீர் ஊர்வலம்  | periya mariamman temple festival
♦️ ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.
 Arulmigu Saratha Mariamman Temple Talkies
♦️கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
 ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா | Erode News Erode Periya Mariamman  Temple Festival
♦️ஈரோடு-கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன...sv..

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, grass and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

வாழை இலை நாகரிகம் தெரியுமா....?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:38 PM | Best Blogger Tips

 வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா..?

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம
தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.

ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற
பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.

அதுக்கு நாமும்
நன்றியோட இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம
தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத்
தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.
வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?
வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும்
அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'?
Full Details on Banana Leaf Remedy to Eradicate Poverty | வறுமை எப்போதும்  துரத்திக் கொண்டிருக்கிறதா? வாழை இலை பரிகாரம் கைகொடுக்கும்News in Tamil
பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்!
தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..


சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது
எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.

அகண்ட பக்கம்
வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.

இலையோட மேல் பக்கம், `
தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?

குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க
இந்த அமைப்பு!

இலையை உள்பக்கமா
மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.

பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.

வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `
பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது!

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!!

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, tree and grass 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

சப்தவிடங்கத்தலங்கள் - சிவபெருமானின் நடனத்தை....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:05 AM | Best Blogger Tips

 சப்த விடங்கத் தலங்கள் - 7 | சிவபெருமானின் 7 வகை நடனம் | Sapthavidanga  Stalangal @GnanadhaTV


சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் சிவபெருமானின் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
 
இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். 
 

 May be an image of temple

இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. 
 
விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். 
 
வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது.
 
இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன
 
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.
திருவாரூர் - தியாகராசப்பெருமான் -- உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் 
 
அஜபா நடனம்
 
திருநள்ளாறு - நாகவிடங்கர் -- பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
 
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்- கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
 
திருக்குவளை - அவனிவிடங்கர்- வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
 
திருவாய்மூர் - நீலவிடங்கர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
 
வேதாரண்யம் - புவனிவிடங்கர் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
 
இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, Adenium and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹