ஆயுட்காலம் குறுகிக் கொண்டே

மணக்கால் அய்யம்பேட்டை | 3:51 PM | Best Blogger Tips

 



📗❤‍🔥 மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் 


📗❤‍🔥

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.


📗❤‍🔥

2. இரவில் கண் விழித்திருத்தல்.


📗❤‍🔥

3. காலை உணவை தவிர்த்தல்.


📗❤‍🔥

4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.



📗❤‍🔥

5. பணத்தை நோக்கிய ஓட்டம்.


📗❤‍🔥

6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.


📗❤‍🔥

7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.


📗❤‍🔥

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்.


📗❤‍🔥

கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.


📗❤‍🔥

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.


📗❤‍🔥

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.


📗❤‍🔥

போதியளவு நீர் அருந்துங்கள்.


📗❤‍🔥

இளநீர் போன்றவை மிக நல்லது.


📗❤‍🔥

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.


📗❤‍🔥

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.



📗❤‍🔥

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.


📗❤‍🔥

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.


📗❤‍🔥

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.


📗❤‍🔥

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.


📗❤‍🔥

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.


📗❤‍🔥

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 


📗❤‍🔥

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.


📗❤‍🔥

ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.



வாழ்க வளமுடன்





நன்றி இணையம்

உன் மனம் மாறினால்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:43 PM | Best Blogger Tips

 



யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........???

 

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

 

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......???

 

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

 

அது மனதின் வேலை.

 

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு

 

நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

 

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

 

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.

 

அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

 

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை

 

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

 


அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்

 

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது

 

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது

 

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை

 

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

 

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய்.

 

இயற்கையை நேசி.

 

வலிகள் மறையும்.

 

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில்

 

நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார்.

 

இது இயல்பே என எண்ணு.

 

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.

 

அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை.

 

அது இயல்பாய் இருக்கிறது.

 

அது போல் இயல்பாய் கடமையைச் செய்

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்




நன்றி இணையம்

1971ல் இந்தியாவை சுற்றி வளைத்த உலகநாடுகள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

 


 

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்குது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை கூப்ட்டு எச்சரிக்குது.

ஆனா அந்த காலகட்டத்துல, பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட சப்போர்ட், பாகிஸ்தானுக்கு இருந்தது. சோவியத் யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்' ன்ற அளவுக்கே அதை பார்த்தது.

 


ஆனா 1971 டிசம்பர் 3-ம் தேதி அன்னைக்கு சாயங்காலம், இந்தியா எதிர்பார்க்காத நேரத்துல, பாகிஸ்தான்... திடீருன்னு ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மேல, கடுமையான தாக்குதல நடத்தி முடிச்சிடுச்சு.

 

உடனடியா பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானுடன் போர் ஆரம்பம் ன்ற செய்திய, நாட்டு மக்களுக்கு ரேடியோல அறிவிச்சாங்க.

 


இந்தியாவோட முப்படைகளும் பாகிஸ்தான சூழ்ந்து, மிகப்பெரிய தாக்குதல்கள ஆரம்பிச்சது. 1971 டிசம்பர் 4-ம் தேதி ராத்திரி... இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்த சின்னா பின்னமா சிதறடிச்சுட்டு, இந்திய எல்லைக்குள்ள வந்துடுச்சு. இதுல கொடுமை என்னன்னா... கராச்சி துறைமுகத்த காப்பாத்த வந்த பாக் போர்விமானங்கள் துறைமுகத்துல நிக்குறது தங்களோட போர் கப்பல்னுகூட தெரியாம, PNS ஜுல்பிஹர் ன்ற தங்களோட ராணுவ கப்பலையே தாக்கி அழிச்சிடுச்சு.

 


திடீர்னு, நிறைய மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவா களமிறங்க... அதுவரைக்கும் இந்திய கைக்குள்ள இருந்த போர்களம், கையவிட்டு நழுவ ஆரம்பிச்சது.

 

ஆரம்பத்துல இருந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவா இருந்தது. அமெரிக்க அதிபர் நிக்ஸன்... ஜோர்டான், ஈரான், பிரான்ஸ், துருக்கி நாடுகளோட போர் விமானங்கள, பாகிஸ்தான்ல நிறுத்தி வெக்கச் சொல்லி உத்தரவிட்டார். மேலும்... அமெரிக்க கடற்படையின் செவன்த் ப்ளீட் ன்ற பிரிவ, (இந்த 'செவன்த் ப்ளீட்'ன்றது... 70 போர் கப்பல்கள், 300 போர் விமானங்கள், 40 ஆயிரம் வீரர்களை கொண்ட.... அமெரிக்க கடற்படையோட மிகப்பெரிய பிரிவு) பிரிட்டனோட கடற்படையோட சேர்ந்து, இந்திய நகரங்கள தாக்குறதுக்காக வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வெச்சாரு. மேலும்... தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி, சீனாவையும் கூப்ட்டாரு.

 


அதோட விடல... USS Enterprise-ன்ற மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலையும், வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிட்டார். அந்த கப்பலோட சேர்ந்து, பிரிட்டனோட HMS Eagle-ன்ற மிகப்பெரிய போர் கப்பலும், பாகிஸ்தானுக்கு உதவி செய்ய, இந்தியாவோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு அணிவகுத்து வந்தது.

 

உலகத்தோட பெரும்பாலான வல்லரசுகள், இந்தியான்ற ஒற்றை நாட்டுக்கு எதிரா 'சக்கர வியூகம்' வகுத்து, இந்தியாவ சுத்திவளைச்சு நிக்குது. அப்பத்தான் உலகமே அதிரும்படியா ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த காலகட்டத்துல, அமெரிக்காவ நடுநடுங்க வெச்ச சோவியத் யூனியன், வலதுகாலை எடுத்துவெச்சு இந்தியாவுக்கு ஆதரவா போர்களத்துல களமிறங்குச்சு. பாகிஸ்தானுக்கு ஆதரவா நிக்குற அத்தனை நாடுகளையும், "இந்தியா மேல துரும்பு பட்டாலும், நேரடியா உங்க நாடுகளை தாக்குவோம்" ன்னு எச்சரிச்சது. கொஞ்சம் துள்ளிப் பார்த்த சீனாவ, "விலகிக்கோ... இல்லேன்னா உன்னோட 'சிங்கியாங்க்' (சீனாவோட மிகமுக்கியமான ராணுவதளம் உள்ள பகுதி) பகுதிய தவிடு பொடியாக்குவோம்" ன்னு, நேரடியா முறைச்சது. வேற எந்த நாட்டையும்விட, ரஷ்யாவோட ராணுவ பலத்தைப்பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குற சீனா, வம்பு வேண்டாம்னு போர்களத்தவிட்டு விலகிடுச்சு. 

 

அதுவரைக்கும் தனியாவே போராடின இந்தியா... சோவியத் துணைக்கு வந்த உற்சாகத்துல, பாகிஸ்தானோட பல பகுதிகளுக்குள்ள நேரடியா பூந்து தரை மட்டமாக்குச்சு. சோவியத் சொன்னது மட்டுமில்லாம, அதுவரைக்கும் உலகத்துக்கு காட்டாத தன்னோட நவீன போர்விமானங்கள், விமானம்தாங்கி போர்கப்பல்கள வங்காள விரிகுடாவுல இறக்குச்சு. முக்கியமா... போர் களத்துலிருந்து அமெரிக்கா, பிரிட்டனை பின் வாங்கச்செய்ய, தன்னோட அணுநீர்மூழ்கி கப்பல்கள கொண்டுவந்து வங்காள விரிகுடாவுல, ஓப்பனா நிப்பாட்டுச்சு.

 

இந்தியாவுக்கு ஆதரவா... வங்காள விரிகுடாவுல அவ்ளோ பெரிய அரணமைச்சு நிக்குற, சோவியத்தோட அணு நீர்மூழ்கிக் கப்பல்கள பார்த்த அமெரிக்க கப்பற்படை மிரண்டது. உடனடியா பிரிட்டனோட HMS Eagle-ஐ போர் களத்துலிருந்து மடையமாத்தி... மடகாஸ்கருக்கு அனுப்பிட்டாங்க. இப்படியே அமெரிக்கா உட்பட, பாக்குக்கு ஆதரவான ஒவ்வொரு நாடும் போர் களத்திலிருந்து பின்வாங்கி வெளியேறிடுச்சு.  பாகிஸ்தானால, தனியா இந்தியாவ சமாளிக்க முடியாம... 13-நாள் போர் முடிவுக்கு வந்து, பாகிஸ்தான் தன் 90 ஆயிரம் ராணுவ வீரர்களோட, இந்தியாகிட்ட சரணடைஞ்சது.

 

பங்களாதேஷ் என்ற தேசம் மலர்ந்தது.

 

நம்மளோட மோசமான காலகட்டத்துல, நமக்கு துணையா நின்ன ஒரேநாடு சோவியத் யூனியன்தான்.

 

அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவ, இந்தியாவின் உற்ற நண்பன்னு சொல்றோம்

 

தொகுப்பு

கோவை ஹரி


🔥மஹா சிவராத்திரி(01/03/22) 🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 9:54 AM | Best Blogger Tips

 


🔥மஹா சிவராத்திரி(01/03/22) 🔥

 

🔥மகா சிவராத்திரி தோன்றிய தலம்.🔥

 

🔥மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலை தனில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒருமுறை தம்முல் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.



அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.🔥

 


🔥பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.


ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

 

🔥நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான். நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.🔥

 


🔥விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.🔥

🔥 நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலை யில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.🔥

 

🔥 அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவர்வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. மகா சிவராத்திரி தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.🔥

 

🔥திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது..🔥

 நன்றி இணையம்