இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம்
உச்சகட்டத்தை நெருங்குது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர்
பாகிஸ்தானுக்கு நல்லதில்லை" ன்னு, பாகிஸ்தானை கூப்ட்டு எச்சரிக்குது.
ஆனா அந்த காலகட்டத்துல, பல வலிமையான
மேற்கத்திய நாடுகளோட சப்போர்ட், பாகிஸ்தானுக்கு இருந்தது. சோவியத்
யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்' ன்ற அளவுக்கே அதை
பார்த்தது.
ஆனா 1971 டிசம்பர் 3-ம் தேதி அன்னைக்கு
சாயங்காலம், இந்தியா எதிர்பார்க்காத நேரத்துல, பாகிஸ்தான்...
திடீருன்னு ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மேல, கடுமையான தாக்குதல
நடத்தி முடிச்சிடுச்சு.
உடனடியா பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானுடன் போர்
ஆரம்பம் ன்ற செய்திய, நாட்டு மக்களுக்கு ரேடியோல அறிவிச்சாங்க.
இந்தியாவோட முப்படைகளும் பாகிஸ்தான
சூழ்ந்து, மிகப்பெரிய தாக்குதல்கள ஆரம்பிச்சது. 1971 டிசம்பர் 4-ம் தேதி
ராத்திரி... இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்த சின்னா பின்னமா
சிதறடிச்சுட்டு, இந்திய எல்லைக்குள்ள வந்துடுச்சு. இதுல கொடுமை என்னன்னா... கராச்சி
துறைமுகத்த காப்பாத்த வந்த பாக் போர்விமானங்கள் துறைமுகத்துல நிக்குறது தங்களோட
போர் கப்பல்னுகூட தெரியாம, PNS ஜுல்பிஹர் ன்ற தங்களோட ராணுவ கப்பலையே தாக்கி அழிச்சிடுச்சு.
திடீர்னு, நிறைய மேற்கத்திய
நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவா களமிறங்க... அதுவரைக்கும் இந்திய கைக்குள்ள இருந்த
போர்களம், கையவிட்டு நழுவ ஆரம்பிச்சது.
ஆரம்பத்துல இருந்தே அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு ஆதரவா இருந்தது. அமெரிக்க அதிபர் நிக்ஸன்... ஜோர்டான், ஈரான், பிரான்ஸ், துருக்கி நாடுகளோட
போர் விமானங்கள, பாகிஸ்தான்ல நிறுத்தி வெக்கச் சொல்லி உத்தரவிட்டார். மேலும்... அமெரிக்க
கடற்படையின் செவன்த் ப்ளீட் ன்ற பிரிவ, (இந்த 'செவன்த் ப்ளீட்'ன்றது... 70 போர் கப்பல்கள், 300 போர் விமானங்கள், 40 ஆயிரம் வீரர்களை
கொண்ட.... அமெரிக்க கடற்படையோட மிகப்பெரிய பிரிவு) பிரிட்டனோட கடற்படையோட சேர்ந்து, இந்திய நகரங்கள
தாக்குறதுக்காக வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வெச்சாரு. மேலும்... தேவைப்பட்டால்
பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி, சீனாவையும் கூப்ட்டாரு.
அதோட விடல... USS Enterprise-ன்ற மிகப்பெரிய
விமானம் தாங்கி கப்பலையும், வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிட்டார்.
அந்த கப்பலோட சேர்ந்து, பிரிட்டனோட HMS Eagle-ன்ற மிகப்பெரிய போர் கப்பலும், பாகிஸ்தானுக்கு
உதவி செய்ய, இந்தியாவோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு அணிவகுத்து வந்தது.
உலகத்தோட பெரும்பாலான வல்லரசுகள், இந்தியான்ற ஒற்றை
நாட்டுக்கு எதிரா 'சக்கர வியூகம்' வகுத்து, இந்தியாவ சுத்திவளைச்சு நிக்குது. அப்பத்தான் உலகமே அதிரும்படியா ஒரு
திருப்புமுனை ஏற்பட்டது. அந்த காலகட்டத்துல, அமெரிக்காவ
நடுநடுங்க வெச்ச சோவியத் யூனியன், வலதுகாலை எடுத்துவெச்சு இந்தியாவுக்கு
ஆதரவா போர்களத்துல களமிறங்குச்சு. பாகிஸ்தானுக்கு ஆதரவா நிக்குற அத்தனை
நாடுகளையும், "இந்தியா மேல துரும்பு பட்டாலும், நேரடியா உங்க
நாடுகளை தாக்குவோம்" ன்னு எச்சரிச்சது. கொஞ்சம் துள்ளிப் பார்த்த சீனாவ, "விலகிக்கோ...
இல்லேன்னா உன்னோட 'சிங்கியாங்க்' (சீனாவோட மிகமுக்கியமான ராணுவதளம் உள்ள பகுதி) பகுதிய தவிடு
பொடியாக்குவோம்" ன்னு, நேரடியா முறைச்சது. வேற எந்த
நாட்டையும்விட, ரஷ்யாவோட ராணுவ பலத்தைப்பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குற சீனா, வம்பு வேண்டாம்னு
போர்களத்தவிட்டு விலகிடுச்சு.
அதுவரைக்கும் தனியாவே போராடின இந்தியா...
சோவியத் துணைக்கு வந்த உற்சாகத்துல, பாகிஸ்தானோட பல பகுதிகளுக்குள்ள நேரடியா
பூந்து தரை மட்டமாக்குச்சு. சோவியத் சொன்னது மட்டுமில்லாம, அதுவரைக்கும்
உலகத்துக்கு காட்டாத தன்னோட நவீன போர்விமானங்கள், விமானம்தாங்கி
போர்கப்பல்கள வங்காள விரிகுடாவுல இறக்குச்சு. முக்கியமா... போர் களத்துலிருந்து
அமெரிக்கா, பிரிட்டனை பின் வாங்கச்செய்ய, தன்னோட அணுநீர்மூழ்கி கப்பல்கள
கொண்டுவந்து வங்காள விரிகுடாவுல, ஓப்பனா நிப்பாட்டுச்சு.
இந்தியாவுக்கு ஆதரவா... வங்காள
விரிகுடாவுல அவ்ளோ பெரிய அரணமைச்சு நிக்குற, சோவியத்தோட அணு
நீர்மூழ்கிக் கப்பல்கள பார்த்த அமெரிக்க கப்பற்படை மிரண்டது. உடனடியா பிரிட்டனோட HMS Eagle-ஐ போர்
களத்துலிருந்து மடையமாத்தி... மடகாஸ்கருக்கு அனுப்பிட்டாங்க. இப்படியே அமெரிக்கா
உட்பட, பாக்குக்கு ஆதரவான
ஒவ்வொரு நாடும் போர் களத்திலிருந்து பின்வாங்கி வெளியேறிடுச்சு. பாகிஸ்தானால, தனியா இந்தியாவ
சமாளிக்க முடியாம... 13-நாள் போர் முடிவுக்கு வந்து, பாகிஸ்தான் தன் 90 ஆயிரம் ராணுவ
வீரர்களோட, இந்தியாகிட்ட சரணடைஞ்சது.
பங்களாதேஷ் என்ற தேசம் மலர்ந்தது.
நம்மளோட மோசமான காலகட்டத்துல, நமக்கு துணையா
நின்ன ஒரேநாடு சோவியத் யூனியன்தான்.
அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவ, இந்தியாவின் உற்ற
நண்பன்னு சொல்றோம்
தொகுப்பு
கோவை ஹரி