"உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்".

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips
Image result for "உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்
(ஒரு நிமிடக் கதை)
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி.
ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!”
ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர்.
எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமேஎன்றாள் வாணி.
நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம்.
இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி.” குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர்.
அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும்.
சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!” -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.
.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்என்றான்.

 நன்றி இணையம்

“கொரில்லா தாக்குதல்”

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips
காவி என்றால், தியாகம் மட்டுமல்ல,வீரமும் தான்...

படத்தில் இருக்கும் சிவாஜி சிலை, வியட்நாம் நாட்டின் ஹோசிம் நகரில் இருக்கும் சிலை……..
வியட்நாம் நாடு சுதந்திரம் அடைந்தவுடன்,ஹோசிம் னால், பிரம்மாண்டமாக அந்த நாட்டில் நிறுவப்பட்ட சிலை இது
நடுல சத்தமா சொல்லுங்க....காவி வியட்நாம் அரசு ஒளிக ன்னு
வியட்நாமில் பலம் பொருந்திய அமெரிக்க ராணுவம் நவீன சாதனங்களுடன் வியட்நாமியர்களைத் தாக்கிய போது ஹோசிமின்னுக்கு சற்று திகைப்பாக இருந்தது.
வலிமை வாய்ந்த முகலாய சாம்ராஜ்யத்தின் படைகளை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிவாஜி மஹராஜின் கொரில்லா போர்த் தந்திர முறைகள் ஹோசிமின்னின் கவனத்திற்கு வந்தது.
Image result for வீரசிவாஜி சிலை
சுமார் இருபது ஆண்டுகள் நடை பெற்ற போரில் க்டைசியாக அமெரிக்க ராணுவம் பின் வாங்கியது.
1975ஆம் ஆண்டு வியட்நாம் வெற்றி பெற்றது.
இதன் வெற்றிக்கு பல காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் கூறப்பட்டாலும், ஹோசிமின்
தனக்கு இந்த வெற்றியை வாங்கித் தந்தது மாவீரன் சிவாஜியே என்று நம்பினார்.
ஆகவே அவரை கௌரவிக்கும் வண்ணம் ஹோசிமின் குதிரை மீது அமர்ந்த நிலையிலிருக்கும் சிவாஜி சிலையை ஹோசிமின் நகரில் நிறுவினார்.
வட வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி, "மேடம் பின்" (Madame Binh) 1977ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
அனைத்து இடங்களையும் பார்த்தபின், அவர் கேட்ட்துநான் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சமாதிக்கு சென்று மரியாதை செய்யவேண்டும்" என்று....
சமாதிக்கு சென்று சமாதியைச் சுற்றி வந்து வணங்கிய அவர் அங்கு கீழே இருந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துப் பொட்டலத்தில் மடித்து வைத்துக் கொண்டார். அந்த மண்ணைத் தன் தலையிலும் இட்டுக் கொண்டார்.தனது நாட்டில் இதை தூவ எடுத்து செல்வதாக கூறினார்
இன்னோரு முறை சத்தமா சொல்லுங்க...........
காவி வியட்நாம் அரசுஒலிக”...
மிலிந்த் காட்கில் என்பவர் கொரில்லா உத்தியை போர்களில் பயன்படுத்துவதைப் பற்றி ஒரு சுவையான புத்தகத்தை எழுதியுள்ளார். ராணுவம் பற்றி எழுதும் பத்திரிகையாளரான இவர் எப்படி சத்ரபதி சிவாஜியின் போர்முறையை வியட்நாமியர் பயன்படுத்தி அமெரிக்கர்களை வெற்றி கொண்டனர் என்பதை விவரித்துள்ளார்.
மும்பையில் இப்போ தான், நாம, ஒரு சிவாஜி, சிலை நிறுவ வேலைகள் நடத்திட்டு இருக்கோம்....
வீரன்.. அல்ல..."மா" வீரன் தன் உடலை பிரிந்த தினம் இன்று.......
நன்றி -தேசபக்தர்கள்