திருமண #யோகம் தரும் நந்தி கல்யாணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
Image result for திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
#திருமண #யோகம் தரும் நந்தி கல்யாணம் இன்று (04.04.2017)
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்" என்பது பழமொழி. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀நந்தியானவர் திருக்கயிலையில் வாயில் காப்பாளராக இருப்பவர். இவர் பூமியில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஸ்ரீ ஐயாறப்பரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி "முனிவரே நீர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து, https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு தான்" என்று கூறியது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
Image result for திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது. பிறந்த அன்றே ஸ்ரீ பஞ்சநதீஸ்வரரால் அபிஷேகிப்பட்ட பெருமை அவருக்குக் கிடைத்தது. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அவர் தான் ஜபேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. இந்த அபிஷேகம், அவர் அவதரித்த நாளான பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"ஜபேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம் தான் பூலோகத்தில் இருப்பார்" என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது. இதனை அறிந்த ஜபேஸ்வரர், https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருவையாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும்தவம் புரிந்தார். காலம் கடந்தது. ஜபேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான் https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக வாழ்வாய்" என்று அருளியதுடன் ஜபேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் திரும்பிய ஜபேஸ்வரருக்குக் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடினார்கள். (சிவபெருமானே பெண் தேடியதாகவும் சொல்வர்.) வசிஷ்ட முனிவரின் பேத்தியும்- https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀வியாக்ரபாத முனிவருடைய மகளும் உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாசை என்ற பெண்ணைத் தன் மகனாகிய ஜபேஸ்வரருக்கு #பங்குனி மாத #புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
பிறகு ஜபேஸ்வரர் ஸ்ரீ ஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவ கணங்களுக்குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀சிலாத முனிவர் பூமியை உழும் போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்" ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அன்று மாலை திருவை யாற்றில் நந்திக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயம்பிரகாசை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அப்போது அந்த ஊரே வாழைமரம், தோரணங்கள் கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும். திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்குச் செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இதனை "வருவது வைத்தியநாதன் பேட்டை; போவது புனல்வாயில்" என்ற பழமொழியாகச் சொல்வர். இந்த விழாவின் தொடர்ச்சிதான் திருவையாறு சப்த ஸ்தான விழாவாகும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருவையாற்று பஞ்சநதீஸ்வரர், நந்தி சகிதமாக திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀சப்த ஸ்தான விழாவில் முக்கியமான ஊர் திருக்கண்டியூர். இங்கே இறைவன் இளைப்பாறுவார். சிலாத முனிவரின் அண்ணன் சதாதாப முனிவர் இறைவனுக்கும் நந்திக்கும் கட்டுச்சாதம் கட்டிக் கொடுத்தாராம். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அந்த நிகழ்ச்சி இன்றும் இந்தத் திருமண விழாவினை யொட்டி நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் (ஆண், பெண்) நந்திக் கல்யாணத்தைத் தரிசித்தால், https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் தான், "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்" என்ற பழமொழி ஏற்பட்டது என்பர்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀தென்னாடுடைய சிவனே போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
|| ----------- 
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருச்சிற்றம்பலம்https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀 ----------- ||


நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
Image result for நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!
நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!
மனவளக் கட்டுரை!
1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.
2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும். வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம். கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.
3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!
4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை. வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!
5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!!
6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட, கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!
7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்
8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!
9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார், விட்டும் கொடுக்கிறார். மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்!
10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும்
(
பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.
11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்
12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

 நன்றி இணையம்