திருமண #யோகம் தரும் நந்தி கல்யாணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
Image result for திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
#திருமண #யோகம் தரும் நந்தி கல்யாணம் இன்று (04.04.2017)
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்" என்பது பழமொழி. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀நந்தியானவர் திருக்கயிலையில் வாயில் காப்பாளராக இருப்பவர். இவர் பூமியில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஸ்ரீ ஐயாறப்பரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி "முனிவரே நீர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து, https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு தான்" என்று கூறியது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
Image result for திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது. பிறந்த அன்றே ஸ்ரீ பஞ்சநதீஸ்வரரால் அபிஷேகிப்பட்ட பெருமை அவருக்குக் கிடைத்தது. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அவர் தான் ஜபேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. இந்த அபிஷேகம், அவர் அவதரித்த நாளான பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"ஜபேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம் தான் பூலோகத்தில் இருப்பார்" என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது. இதனை அறிந்த ஜபேஸ்வரர், https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருவையாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும்தவம் புரிந்தார். காலம் கடந்தது. ஜபேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான் https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀"என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக வாழ்வாய்" என்று அருளியதுடன் ஜபேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளுடன் திரும்பிய ஜபேஸ்வரருக்குக் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடினார்கள். (சிவபெருமானே பெண் தேடியதாகவும் சொல்வர்.) வசிஷ்ட முனிவரின் பேத்தியும்- https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀வியாக்ரபாத முனிவருடைய மகளும் உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாசை என்ற பெண்ணைத் தன் மகனாகிய ஜபேஸ்வரருக்கு #பங்குனி மாத #புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
பிறகு ஜபேஸ்வரர் ஸ்ரீ ஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவ கணங்களுக்குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀சிலாத முனிவர் பூமியை உழும் போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்" ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அன்று மாலை திருவை யாற்றில் நந்திக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயம்பிரகாசை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அப்போது அந்த ஊரே வாழைமரம், தோரணங்கள் கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும். திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்குச் செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀இதனை "வருவது வைத்தியநாதன் பேட்டை; போவது புனல்வாயில்" என்ற பழமொழியாகச் சொல்வர். இந்த விழாவின் தொடர்ச்சிதான் திருவையாறு சப்த ஸ்தான விழாவாகும். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருவையாற்று பஞ்சநதீஸ்வரர், நந்தி சகிதமாக திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀சப்த ஸ்தான விழாவில் முக்கியமான ஊர் திருக்கண்டியூர். இங்கே இறைவன் இளைப்பாறுவார். சிலாத முனிவரின் அண்ணன் சதாதாப முனிவர் இறைவனுக்கும் நந்திக்கும் கட்டுச்சாதம் கட்டிக் கொடுத்தாராம். https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀அந்த நிகழ்ச்சி இன்றும் இந்தத் திருமண விழாவினை யொட்டி நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் (ஆண், பெண்) நந்திக் கல்யாணத்தைத் தரிசித்தால், https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் தான், "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்" என்ற பழமொழி ஏற்பட்டது என்பர்.https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀தென்னாடுடைய சிவனே போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀
-
|| ----------- 
https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀திருச்சிற்றம்பலம்https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀https://www.facebook.com/images/emoji.php/v8/f87/1/16/1f340.png🍀 ----------- ||